Welcome to ஈரோடு !!

 நண்பர்களே,

வணக்கம். தொலைவில் தூரத்துப் புள்ளியாய்த் தென்பட்ட ஈரோட்டு புத்தகத் திருவிழா இதோ, இன்று மாலை துவங்கிடவுள்ளது & நமது சந்திப்பானதும் நாளைக் காலைக்கென காத்துள்ளது !! Time flies….and the procedure !!!! மின்னலாய் ஓடி வருவன நாட்கள் மாத்திரமல்ல, மாமூலான நமது சந்திப்பினை இம்முறை முத்து பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டமாகவும் முன்னெடுத்துச் சென்றிட விழையும் நண்பர்களுமே !! போன ஞாயிறே கிரிக்கெட் திருவிழாவோடு போட்ட பிள்ளையார் சுழியினை நண்பர்கள் இம்முறை வேற லெவெலுக்கு எடுத்துச் சென்று கொண்டுள்ளனர் ! நிறைய போனில் பேசுவதைத் தாண்டி எனது பங்களிப்பு இக்கட பூஜ்யமே ; தம் வீட்டு விசேஷமாய் எண்ணி ராப்பகலாய் பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து வருகின்றனர் ! நாளை காலை ஹாலுக்குப் போய்ப் பார்க்கும் போது  தான் நண்பர்களின் உழைப்பின் முழுப் பரிமாணமும் புலப்படும் !!  Phewww…..! எதெற்காக இந்த விழா வெற்றி காண வேணுமோ – இல்லியோ,நண்பர்களின் முயற்சிகளுக்காகவேணும் வெற்றி கண்டிட வேண்டும் !! புனித மனிடோ  அருள்வாராக !! 

இங்கே நமது ஆபீஸுமே 2 நாட்களாய் போர்க்கோலத்தில் தான் காட்சி தந்து வருகிறது !! ஈரோடு ஸ்பெஷல்ஸ் + சந்தா புக்ஸ் +  V காமிக்ஸ் போன மாதம் லேட்டாய் சந்தாத்  தொகைகள் அனுப்பியோருக்கான புக்ஸ் என்று தினுசு தினுசான பேக்கிங் ஓடி வருகிறது ! அப்பாலிக்கா கார்சனின் கடந்த காலத்தில் போட்டோ போட்டுக் கேட்டவர்கள் ; ஈரோட்டில் நேரில் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளோர்  ; மாயாவி வேரியண்ட் கவருடனான புக்ஸுக்கு ஆர்டர் தந்துள்ளோர்  என்றும் இன்னொரு கத்தை உள்ளது ! ஒவ்வொன்றையும் பிரித்து பேக் செய்வதென்பது நல்ல நாளைக்கே நாக்குத் தொங்கச் செய்யும் சமாச்சாரம் ; இந்த அழகில் front office-ல் திருமதி.ஜோதி ஈரோட்டில் புத்தக விழாவில் இருக்க, ஏதேதோ சர்க்கஸ் அரங்கேறி வருகிறது  ! அண்ணாச்சி திடு திடுப்பென டாட்டா காட்டி விட்டுப்  புறப்பட்டிருக்க, இன்னொரு ஆளை போட்டு விட்டாச்சு தான் ; nevertheless ஆபீசின் பேலன்ஸ் திரும்ப கொஞ்ச காலமாகும் என்பது அப்பட்டம் ! At the least – ஸ்டெல்லா சோலோவாய் செய்து வரும் சாகசங்களின் பலனாய் நாளை பார்சல்கள் உங்களை எட்டிப் பிடித்திடுமென எதிர்பார்க்கலாம் ! 

And lest I forget, சந்தா நண்பர்களுக்கென பிராமிஸ் செய்திருந்த விலையில்லா 4 இதழ்களில் முதலாவதும் இம்மாத சந்தா பார்சல்களில் இடம்பிடித்திடும் ! விங்-கமாண்டர் ஜார்ஜின் shaded & white சாகசமாய் “புதையலுக்கொரு பாதை” தான் இந்த இதழ் ! இது “நெப்போலியன் பொக்கிஷம்” சூப்பர் ஹிட் கதைக்கு முன்பான ஆல்பம் என்பது கொசுறுச் சேதி ! Prequel to a superhit !!  நீங்கள் சந்தாக்களின் அங்கமாக இல்லாத பட்சத்தில், இந்த குட்டி புக்கை வாங்க எண்ணினால் டிசம்பரில் சாத்தியமே ! சுப்ரீம் 60ஸ் வரிசையினில் – விங் கமாண்டர் ஜார்ஜ்-ஸ்பெஷல் – 1 வெளியாகும் தருணத்தில் இதை சின்னதொரு விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் !

And sure – ஈரோடு ஸ்பெஷல் இதழ்களுக்கு நீங்கள் முன்பதிவு செய்திருக்கும் பட்சத்தில் மூணரை கிலோ இடையிலான பார்சல் நாளை உங்கள் இல்லங்களில் லேண்ட் ஆகிடும் ! அறிவிக்கப்பட்ட 5 ஸ்பெஷல்  இதழ்களுள், கிராபிக் நாவலான “விதி எழுதிய வெள்ளை வரிகள்” மாத்திரம் இந்தப் பார்சலில் இடம்பிடித்திருக்காது ; அதன் எடிட்டிங்கில் கொஞ்சம் தாமதம் என்பதால் அச்சு + பைண்டிங் உரிய நேரத்துக்குள் பூர்த்தியாகிடவில்லை ! So அந்த ஒற்றை புக் மட்டும் அடுத்த கூரியரோடு பயணிக்கும் guys ! ரொம்பவே சாரி ! 

Skilled கூரியர் வேண்டாமென்று சொல்லியிருந்தோர் நீங்கலாய், பாக்கி அனைவருக்குமே இம்முறையும் Skilled-ல் தான் அனுப்பியுள்ளோம் என்பதால், நாளை ஈரோட்டில் புக்ஸ் ரிலீஸ் காணும் தருணத்தில் உங்களிடமும் புக்ஸ் இருந்திட வேண்டும் ! புனித மனிடோ அருள்புரிவாராக !

And naturally, பெரும் தேவனின் கருணை நாளையும் நமக்கு முன்னெப்போதையும் விட அதிகமாயத் தேவைப்படும் – merely becos இம்முறைக்கென அரங்கேறி வரும் திட்டமிடல்களும், மெனெக்கெடல்களும் unheard of ! நாளை காலை 9-30-க்கு ஈரோட்டிலுள்ள OASIS அரங்கினில் உங்களைச் சந்திக்க பேராவலுடன் காத்திருப்போம் other folks ! மதியம் வரை இருந்து, விழாவையும், விருந்தையும் சிறப்பிக்க வேணுமாய் அன்போடு வரவேற்கிறோம் ! Please make descend in !!    

Bye all….gape you spherical !! Luxuriate in a spruce cool weekend !!