இதுவும் கடந்து போகட்டுமே !

நண்பர்களே, 

வணக்கம். ஏப்ரலில் ஒரு இரவுப் பொழுது அது ! எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஹாஸ்பிடலில் ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் சீனியர் எடிட்டர் ! வீட்டிலோ அம்மாவும் எக்கச்சக்க சுகவீனங்களோடு படுத்த படுக்கையாய் கிடக்கிறார் ! நிலமையைச் சமாளிக்க தம்பியும், நானும் ரொம்பவே நாக்குத் தள்ளிப் போயிருந்த நாட்கள் அவை ! இரவு எட்டு மணிவாக்கில் டாக்டர் ரவுண்ட்ஸ் வருவதற்காகக் காத்திருந்த வேளையில், கொஞ்ச நேரமாச்சும் வெளியே போய் காற்று வாங்கினால், மண்டைக்குள்ளான இறுக்கம் சற்றே தளருமென்று தோன்றியது ! படியிறங்கி, வாசலில் போய் நின்றால், ஜெகஜோதியாய் ஒளிவெள்ளம் என்னை வரவேற்றது ! உள்ளூர் அம்மன் கோவில் திருவிழாவுக்கு சொற்ப நாட்களே எஞ்சியிருக்க, சாலையின் இரு தரப்புகளிலும் வெளிக்கடைகள் கனஜோராய் வியாபாரம் பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது !! சிவகாசியின் மையத்திலிருந்த அந்த சாலையில் அப்படியொரு ஜனத்திரளும், உற்சாகமும், பரபரப்பும் அலையடித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்த போது, எல்லாமே வேறொரு உலகில் நடப்பது போலவே எனக்குத் தோன்றியது ! இங்கே மண்டைக்குள் எனக்கு இம்மியும் வெளிச்சமில்லை ; ஆனால் கண்ணெதிரே ஊரே மினுமினுத்துக் கொண்டிருந்தது ! சிந்தையில் என்னிடம் துளி கூட மகிழ்வில்லை ; ஆனால் ஊரே உற்சாகத்தில் ஓடியாடிக் கொண்டிருந்தது ! Sci-fi கதைகளில் வருவது போலான ஒரு இணைத்தடப் பிரபஞ்சத்தில் உலாவுவதான பீலிங்குடனே கொஞ்ச நேரம் அங்கே நிலைகொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் தலைக்குள் நிதானம் திரும்பியது ! ‘உன் வீட்டு இன்னலுக்கோசரம் உலகமே ஸ்தம்பிக்காது கண்ணா ; சந்தோஷங்களும், சங்கடங்களும் மாறி மாறிக் கதவைத் தட்டும் சமாச்சாரங்கள் and இன்று பிந்தையது உனது கதவைத் தட்டி நிற்கின்றது – அவ்வளவே ! இது வரையிலுமாவது சந்தோஷ நாட்களை மிகுதியாயும் ; சங்கட தினங்களை சன்னமாகவும் தந்துள்ள ஆண்டவனுக்கு நன்றி சொல்லிவிட்டு நகரும் வழியைப் பாரு !‘ என்று உள்ளுக்குள் யாரோ சொல்வது போலிருந்தது ! படியேறி திரும்பவும் ஹாஸ்பிடலில் அப்பாவின் ரூமுக்குச் சென்ற போது அப்பாவை நிற்க வைக்க டாக்டர் முயன்று கொண்டிருந்தார் ! ‘இன்னும் ஓரிரு நாட்களில் வாக்கரோடு நடக்கலாம் ; எல்லாம் ஓ.கே’ என்றபடிக்கே அவர் புறப்பட்ட போது மனதின் பாரம் கொஞ்சமே கொஞ்சமாய் மட்டுப்பட்டிருந்தது போலிருந்தது !  

அம்மா விடைபெற்றுச் சென்று ஒரு வாரமாகப் போகும் இந்த வேளையில் அந்த ஏப்ரலின் இரவு தான் என் சிரத்தினுள் ஓடிடுகிறது ! அத்தனை நோவுகளோடு அம்மா செய்த யுத்தம் மட்டுமன்றி, அவரது வேதனைகளுமே முற்றுப் புள்ளி கண்டிருப்பதை ஏற்றுக்கொண்டு அவர் சென்றுள்ள இடத்தில் அமைதியும், நிம்மதியும் கிட்டிடுமென்று வேண்டுவதே முன்செல்லும் வழியென்று தலைக்குள் ஒலிக்கிறது ! So இதுவும் கடந்து போயாகிட வேண்டும் ! R.I.P. அம்மா !

Again to reality, ‘தல’யின் மெகா இதழ் பைண்டிங்கில் ஒட்டி ரெடியாக உள்ளது ! தொடரவுள்ள 3 நாட்களுக்கு ஈரம் காய்ந்திட மட்டும் அவகாசம் தந்துவிட்டால் – செமத்தியான ஒரு இதழாய் உங்களை வந்து சேர்ந்திடுவதில் சிரமங்களிராது ! And தாத்தாஸ் கதையும் பைண்டிங்கில் உள்ளது ; விடுமுறைகள் முடிந்த மறு நாள் தயாராகிடும் ! இந்த ஆல்பத்தை எதெற்காக நினைவு கூர்ந்திடுவேனோ – இல்லையோ ; இதனுள் பணியாற்றிய அனுபவம் நிச்சயம் அகன்றிடாது ! வியாழன் இரவு முதலே அம்மா வென்டிலேட்டரில் இருக்க நேரிட, இனி பெரிதாய் நம்பிக்கை கொள்ள ஏதுமில்லை என்பதை ICU பிரிவினர் ஞாயிறு இரவன்று தயங்கியபடியே சொல்லியிருந்தனர் ! காலையில் வீட்டுக்கு கூட்டிப் போய் விடுங்களென்று ஹாஸ்பிடலில் சொன்ன  போதே காத்திருந்தது என்னவென்பது புரிந்தது ! வெளியூர்களில் இருந்த சகோதரிகளையும், அவர்களது பிள்ளைகளையும் அவசரமாய் புறப்பட்டு வரச் சொன்ன கையோடு, தொங்கிக் கொண்டிருக்கும் பணிகளையும் அவசரமாய் முடித்தாக வேண்டுமே என்பது உறைத்தது ! 62 பக்கங்கள் கொண்ட தாத்தாஸ் கதையிலோ, பத்தோ பன்னிரெண்டோ பக்கங்கள் வரை தான் அந்நேரத்துக்கு எழுதியிருந்தேன் ! பாக்கியினை ராவோடு ராவாய் முடிக்காவிடின் அம்போவாகிப் போகும் என்பது புரிந்தது ! தாத்தாஸ் கதைகளின் பாணி மாத்திரமன்றி, வசனங்களின் மிகுதியுமே எப்போதும் ஒரு சவாலாய் இருப்பதுண்டு !! பக்கங்களில் கட்டங்களும் ஜாஸ்தி ; பேசிடும் மாந்தர்களும் ஜாஸ்தி & ஏகப்பட்ட இடங்களில் கூகுளின் சகாயங்கள் அவசியமாகிடுவதுமுண்டு ! எப்படி ‘தம்’ கட்டி எழுதினேன் என்பது இப்போது புதிராக உள்ளது ; ஆனால் திங்கள் காலை புலர்ந்த தருணத்தில், என் கண்கள் சிவந்திருந்தன ; விரல்கள் கழன்று விழாத குறை தான் ;  ஆனால் தாத்தாக்களுடனான பயணத்தினை முடித்திருந்தேன் ! Maybe பகலில் காத்திருந்ததை தாற்காலிகமாகவாவது மறக்க எனக்கு அந்தப் பணிகளின் கடுமை அன்றிரவுக்கு அவசியமானதோ – என்னவோ ! குரங்கு பல்டிகள் நமக்குப் புதிதே அல்ல தான் ; nevertheless serene இது அவற்றுள் ஒரு புது அத்தியாயம் என்பேன் – simply becos of the instances ! 

And முன்கூட்டியே இன்னொருவாட்டி சொல்லி விடுகிறேன் guys – தாத்தாக்களின் இந்த ஆல்பமானது ஒரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பே ! இங்கே பெரியதொரு கதை ; க்ளைமாக்ஸ் என்ற மாமூலான சமாச்சாரங்கள் துளியும் கிடையாது ! மூன்று பெருசுகளும், பேத்தி சோபியுமாய் வாழ்ந்திடும் ஒரு வாழ்க்கையினுள் எட்டிப் பார்த்திட நமக்கு வாய்ப்பளிக்கின்றனர் & that’s about it ! இங்கே மாமூலான காமிக்ஸ் leisure புள்ளிகளைத் தேடினால் ஏதும் தேறாது !  முன்கூட்டியே இன்னொருவாட்டி சொல்லி விடுகிறேன் guys – இதுவொரு வாழ்க்கைப் பயணத்தின் சித்தரிப்பே ! இங்கே பெரியதொரு கதை ; க்ளைமாக்ஸ் என்ற மாமூலான சமாச்சாரங்கள் துளியும் கிடையாது ! மூன்று பெருசுகளும், பேத்தி சோபியுமாய் வாழ்ந்திடும் ஒரு வாழ்க்கையினுள் எட்டிப் பார்த்திட நமக்கு வாய்ப்பளிக்கின்றனர் ; so இங்கே மாமூலான காமிக்ஸ் leisure புள்ளிகளைத் தேடினால் ஏதும் தேறாது ! “ரைட்டு…இத்தனை ஸ்பீடு பிரேக்கர்களுடனான ஒரு தொடர் நமக்கு இந்த நொடியில் அவசியம் தானா ? இந்த ஸ்லாட்டில் இன்னொரு லக்கி லூக்கையோ ; ஒரு ரிப் கிர்பியையோ ; ஏதேனுமொரு கமர்ஷியல் நாயகரை இறக்கிப்புட்டா குன்சா இருக்குமே ?” என்ற கேள்வி எழலாம் தான் ! However அதற்கான பதிலை நீங்களே போன வாரத்து வாக்கெடுப்பில் சொல்லியுள்ளீர்கள் of us !! இதோ அதன் முடிவுகள் : 

இது வரைக்குமான வோட்டெடுப்புகளில் இத்தனை நண்பர்கள் ஓட்டளிக்க மெனெக்கெட்டதில்லை ; 221 என்ற இந்த நம்பர் தான் இது வரையிலுமான பெஸ்ட் ! So அத்தகையதொரு வோட்டெடுப்பில் “புதுசு சார்ந்த தேடல்கள் என்றென்றும் அவசியமே !” என்ற தீர்ப்பு கிட்டியிருப்பதை கண்களைத் தேய்த்தபடிக்கே பார்த்திடுகிறேன் ; நிஜத்தைச் சொல்வதானால் Possibility # 2-க்கே மெஜாரிட்டி ஓட்டுகள் விழுந்திடுமென்றே எதிர்பார்த்திருந்தேன் ! தாறுமாறாய் இண்டிகேட்டரைப் போட்டபடிக்கே நானெல்லாம் ஆட்டோ ஓட்டும் சாலையில், நீங்களெல்லாம் JCB ஓட்டும் வித்வான்கள் என்பதை over again நிரூபித்துள்ளீர்கள் ! பதிலிட நேரம் செலவழித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் ஒரு நூறு ; நிச்சயமாய் உங்களின் அவாக்களுக்கு உரிய மதிப்பளிக்கப்படும் ! And clearly, புதுசு என்பதற்காகவே எதையும் இனி தேர்வு செய்திடாது – நீங்கள் எதிர்பார்த்திடும் அளவுகோல்களுக்கேற்ப சாரமும் அவற்றுள் இருக்கின்றதா? என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியபடியே பார்த்திடவும் செய்வோம் ! 

இதோ – இந்தப் புது “கமர்ஷியல் கி.நா.” தேர்வினைப் போல !! 

இதென்ன புது உருட்டா இருக்கே ?” என்கிறீர்களா ! Certain – இது நமக்குப் பிடித்தமான வன்மேற்குக் களத்தினில் அரங்கேறிடும் ஒன்-ஷாட் சாகஸம் – ரொம்பவே வித்தியாசமான கதையோட்டத்துடன் ! கண்ணைக் கசக்கச் செய்யும் சமாச்சாரங்கள் இராது ; மாறாய் கண்களை அகல விரியச் செய்யும் சித்திரங்களும், கலரிங்கும் மிரட்டிடும் ! 78 பக்கங்களில் அரங்கேறும் இந்த western சாகஸத்தில் கமர்ஷியலான அடையாளங்களும் இருந்திடும் ; “கி.நா.” என்று வகைப்படுத்திட வித்தியாசமான storyline-ம் இருக்கும் ! So இதனை ஒரு கமர்ஷியல் கி.நா. என்று விழிப்பதில் தவறில்லை என்று நினைத்தேன் ! 

அதே சமயம் ஒரு கனத்த “கி.நா.”வுமே உங்களை நோக்கி வெகு சீக்கிரமே வந்திடவுள்ளது ! இதோ – “விதி எழுதிய வெள்ளை வரிகள்” sunless & white ஆல்பத்தின் பிரிவியூ :

ஒரிஜினல் அட்டைப்படம் அப்படியே வருகிறது – கதையின் அந்த mood-ஐ பிரதிபலிக்கும் விதமாய் !! நெப்போலியன் படையுடனான மோதலைத் தொடர்ந்து ரஷ்யப் பனிக்காட்டில் உயிர்தப்பியோடும் ஒரு சிறு அணியின் ஜீவ மரணப் போராட்டத்தினை மிரளச் செய்யும் சித்திரங்களுடன் சொல்லியுள்ளனர் ! And கதைக்களம் கனமானதே என்பதால் again இதுவொரு இலகுரக வாசிப்பின் இதழாய் இராது guys ! 

தொடரும் நாட்களில், தொடரவுள்ள புத்தாண்டினில் கமர்ஷியல் குருதையில் எறியபடியே, புதுசு சார்ந்த தேடல்களையும் செய்திட எண்ணியுள்ளோம் ! So காத்துள்ள 2024 அட்டவணை மாத்திரமன்றி, காத்துள்ள பயணத்தின் template கூட ரொம்பவே சுவாரஸ்யமானதாக இருந்திடவுள்ளது ! No longer too prolonged a wait ; இம்மாதத்து இறுதி வாரப் பதிவினில் ரூட் 2024 பற்றிப் பார்த்திடலாமே !!

Bye all…discover about you spherical ! அம்மாவுக்காக, எங்களுக்காக பிரார்த்தித்த அத்தனை அன்புள்ளங்களுக்கும் எங்களது நன்றிகள் உரித்தாகட்டும் ! Delight in an correct week ahead !

P.S : V காமிக்ஸும் பைண்டிங்கில் வெயிட்டிங் ! இங்கே சின்னதாயொரு திருத்தம் of us !! ஸாம் வில்லர் டெக்சின் அண்ணார் என்று போன பதிவில் ஏதோ ஒரு ஞாபகத்தில் தவறாகக் குறிப்பிட்டிருந்தேன் ! டெக்ஸ் தான் மூத்தவர் ; ஸாம் இளவலே ! கதாசிரியர் போசெல்லியின் கைவண்ணத்தில் ஸாம் வில்லர் ரொம்பவே மதிக்கத்தக்க மனிதராய் மிளிர்கிறார் ! நிச்சயமாய் ‘தல’ ரசிகர்களுக்கு இதுவொரு மிஸ் செய்திட இயலா இதழாய் இருந்திடுமென்பது உறுதி