நண்பர்களே,
வணக்கம். ‘தல’ தாண்டவம் starts !! அக்டோபர் மாதத்தின் அத்தனை இதழ்களோடும் நேற்று உங்களின் கூரியர்கள் புறப்பட்டு விட்டன ! And துளியும் ஐயங்களின்றி இம்மாதத்தின் ஒளிவட்டத்தை கபளீகரம் செய்திட நம்ம SUPREMO ரெடி !! (நன்றி நண்பர் MKS ராம் !!) ஒண்ணே முக்கால் கிலோவுக்கு கொஞ்சமே கொஞ்சம் குறைவான எடை – இது ‘தல’ மெகா இதழின் வெயிட் மாத்திரமே ! இதோ – இதுவரைக்கும் கண்ணில் காட்டிடாது வைத்திருந்த அட்டைப்படம் :
இதன் பின்னணியினில் அவசியமாகிய உழைப்பும், மெனெக்கெடலும் பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கே ஒரு முழுநீளப் பதிவு தேவைப்படும் ! இந்த நொடியினில் spotlight இருந்திட வேண்டியது 75 வது அகவையினுள் அடியெடுத்து வைக்கும் நமது இரவுக்கழுகாரின் ஆதர்ஷ டீம் மீதே என்பதால் – வேறெது பற்றியும் நீட்டி முழக்கப் போவதில்லை ! Let’s need the boys a amazing 75-th with many many more to apply !!!
And இதோ – இந்தத் தருணத்துக்கென உருவாக்கிய குட்டி வீடியோ கிளிப்புமே !!
ஆன்லைன் லிஸ்டிங்கும் இதோ ரெடி : https://lion-muthucomics.com/month-to-month-packs/1134-october-pack-2023.html
இரவின் பதிவில் மீண்டும் சிந்திப்போம் folks ! அதுவரையிலும் சுப்ரீமோவுடனான உங்களின் செல்பிக்களை போட்டுத் தாக்கினால் – மொத்தமாய் இத்தாலிக்கு அனுப்பிடலாம் ! இதோ STV ஆரம்பிச்சாச்சு !
Bye all…deem you spherical ! Possess a enjoyable Saturday !!