தீ = தீ = தீபாவளி !

 நண்பர்களே,

வணக்கம். போன பதிவின் தலைப்பை ஒரு ரைமிங்குக்காக “தீ” என்று வைத்தேன் ; ஆனால் தொடர்ந்த இந்த வாரத்தின் தினங்கள் ஒவ்வொன்றுமே “தீயாய்” ஓட்டமெடுத்துள்ளன ! For starters – எங்களின் பட்டாசு நகரின் நிலவரம் பற்றி : 

ஊருக்குள் பெருசாய் பரபரப்போ ; வேகங்களோ பஜாரில் கண்ணில்படக் காணோம் ! Undoubtedly வெள்ளி மாலையில் கூட மக்கள் ‘தேமே’ என்று மாமூல் வேலைகளில் ஈடுபட்டிருப்பது போலவே தென்பட்டது ! ஆனால்…ஆனால்…ஊருக்கு வெளியே ; ஒவ்வொரு திக்கின் எல்லைகளிலும் அதகளமாய் கார்களின் அணிவகுப்பு ! ‘இன்னா மேட்டரு..? ஆரேனும் கட்சி தலீவர் வந்திருக்கிறாரா ?‘ என்று பார்த்தால் அத்தனையுமே வெளியூர்களிலிருந்து ; வெளிமாநிலங்களில் இருந்து பட்டாசு வாங்க வந்திருந்த வண்டிகள் ! என்ன விலைக்கும் ஒரேயொரு gift box கூட லேது எனும் அளவிற்கு – ஊரைச் சுற்றிக் குவிந்து கிடக்கும் அத்தனை பட்டாசுக் கடைகளிலும் மொத்தமாய் சரக்கு காலி ! போன மாசம் வரைக்கும் “வியாபாரமே இல்ல ; ஈயோட்டுறோம் !” என்று பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்த பட்டாசார்கள் இன்று குவியும் கரென்சிக்களை எண்ண நேரமின்றி, மூட்டைகளாய்க் கட்டி, கிட்டங்கியில் போட்டுவிட்டு பண்டிகை முடிஞ்சா பிற்பாடு சாவகாசமாய் எண்ணிக் கொள்ளலாமென   குமிக்க ஆரம்பித்துள்ளனர் ! நம்புங்கள் guys – இது நிஜம் ! ‘அனல் பறக்கும் வியாபாரம்’ என்றால் இது தானுங்கோ அது !!

சரி, நமக்கெல்லாம் அந்த ரேஞ்சிலான வியாபாரங்கள் கனவில் கூட சாத்தியமல்ல எனும் போது, நம்மளவிற்கு என்ன நிலவரமென்று பார்க்கலாம் என்றபடிக்கே செவ்வாயன்று ஆபீசுக்குப் போன போதே பேக்கிங் செம விறுவிறுப்பாய் ஓடிக்கொண்டிருந்தது ! ஒரு பக்கம் செல்போன்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே இருக்க, அதன் மத்தியினில் நம்மவர்கள் பிரவுன் டேப்பை போட்டு பெட்டிகளுக்கு பேண்டேஜ் போட்டுக் கொண்டிருந்தனர் ! இப்போதெல்லாம் ஒரு சிறு எண்ணிக்கை தவிர்த்த பாக்கியெல்லாமே Legit கூரியர் தான் எனும் போது அவர்களே வண்டியனுப்பி பார்சல்களை புக்கிங் செய்திட எடுத்துப் போய்விடுகிறார்கள் ! And மாலையில் ‘டாணென்று’ கம்பியூட்டரில் டைப் செய்த ரசீதுகளை ரெடி செய்து, மறு நாள் காலையில் கையில் திணித்து விடுகிறார்கள் ! So ‘தல’ + ‘தளபதி’ உங்களை நோக்கிப் படையெடுப்பதை ரசித்த கையோடு ஆன்லைன் லிஸ்டிங்ஸ் போடச் சொல்லி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன் ! தொடர்ந்த 3 தினங்கள் தான் நான் சொன்ன “தீ” !! 

புதன் காலையில் ஆபீசுக்கு வந்த போதே நம்மாட்கள் கிறுகிறுத்து நிற்பதைக் காண முடிந்தது ! அப்போவே லைட்டாக யூகிக்க முடிந்தது – ‘தல’ + ‘தளபதி’ மேஜிக் ஒர்க் பண்ண ஆரம்பித்திருக்குமோ – என்று ! Oh yes அதுவே தான் நிகழ்ந்திருந்தது ! ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தோரும் சரி ; G Pay-ல் பணம் அனுப்பிவிட்டு ஆர்டர் செய்திருந்தோரும் சரி, புதன், வியாழன் & வெள்ளியில் அடித்துள்ளதெல்லாமே ரோஹித் ஷர்மா பாணியிலான சிக்ஸர்கள் ! Uffffff …..எனக்கு ஞாபகமிருக்க, “இரத்தப்படலம்” – முதல் வண்ணத்தொகுப்பு வெளியான வேளையிலும் சரி, டெக்சின் டைனமைட் ஸ்பெஷல் வெளியான தருணத்திலும் சரி, இது போலான கொலை மாஸ் வேகத்தினைப் பார்த்திருக்கிறேன் ! இந்த 3 நாட்களில் பார்க்கச் சாத்தியப்பட்டிருப்பது அவற்றுக்கு செம delicate தந்திடும் அதிரடிகளை !! புதன் மாலை மட்டுமே கிட்டத்தட்ட அறுபது கூரியர்கள் & தொடர்ந்த 2 தினங்களுமே அதற்கு இணையான நம்பர்ஸ் ! கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளிருக்கும் என்று நினைக்கிறேன் – “என் பெயர் டைகர்” வெளியாகி ! அதன் பின்பாய் நூறு மாத சுமாருக்கு துயில் பயின்று கொண்டிருந்த புலியார் இந்த தீபாவளிக்குக் களமிறங்குவதே இந்த அதிரடி உற்சாகத்தின் பின்னணி என்பது புரியாதில்லை ! போன வருஷம் அட்டவணையினில் இதனை நுழைக்கத் திட்டமிட்ட வேளையே எனக்கு கலர் கலரான கனவுகள் இருந்தன தான் – இரு ஜாம்பவான்கள் ஒன்றிணையும் இந்தப் பண்டிகைத் தருணம் களை காட்டினாள் எவ்விதமிருக்குமென்று ! And அந்தக் கனவு கச்சிதமாய் மெய்ப்பட – நமது காமிக்ஸ் களம் on fireplace !!

இது போதாதென – ஒரு மெகா ஸ்கூலிலிருந்து வன்மேற்கின் அத்தியாயம் 1 to 4 வரையிலான நான்கு இதழ்களிலும் தலா 100 புக்ஸ் வீதம், 400 பிரதிகள் வேண்டுமென்று ஆர்டர் தந்துள்ளனர் ! அவர்களது பள்ளியில் இந்த 4 பாக கதைச்சுற்றை மாணவியருக்குப் பரிசாய் வழங்கிடவுள்ளாராம் ! அந்தப் பள்ளியின் தாளாளர் நமது அதிதீவிர வாசகர் என்ற முறையில் பள்ளி நூலகத்துக்கு நமது புக்ஸ்களை ரெகுலராய் தருவிப்பது மாத்திரமன்றி, அவற்றை மாணவியர் மத்தியில் ஒரு பழக்கமாக்கிட தன்னால் இயன்ற சகலத்தையும் செய்து வருகிறார் ! சமீபமாய் அவர்களது நூலகப் பொறுப்பிலிருக்கும் டீச்சருடனான உரையாடலை என்னுடன் பகிர்ந்திருந்தார் – seventh & Eighth STD மாணவியருக்கு, நமது புக்ஸ்களில் பிடித்தது எவை ? புரியாத வார்த்தைகள் எவை ? என்ற ரீதியில் ! மெய்யாலுமே மிரண்டு விட்டேன் – ஓசையின்றி அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு காமிக்ஸ் வாசிப்பு motion-ஐ கண்டு !! இன்று அவர் விதைக்கும் விதைகள் விருட்சமாகிடும் நாளில் – வானமே எல்லையாகிடும் இந்தச் சித்திரக்கதைச் சோலைக்கு ! And surprise…..துவக்கத்தில் கொஞ்சமாய் நமது தமிழை உள்வாங்கிட மாணவியர் திணறினாலும், இப்போதெல்லாம் சுலபமாய் வெளுத்து வாங்குகிறார்களாம் ! And மாணவியரின் கைகளில் மிளிர்வதெல்லாமே கார்ட்டூன்கள் என்பது எனது கவனத்துக்குத் தப்பவில்லை ! So ….so …. கார்ட்டூன்களில் வறட்சி என்ற பொதுவான புகாருக்கு ஒரு தீர்வாகவும், அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு காமிக்ஸ் நுழைவாயிலாக இருந்திடவும் –  ஆன்லைன் புத்தக விழாவினில் 2 கார்ட்டூன் ஸ்லாட்ஸ் உறுதி பண்ணிடுவோமா of us ? இன்ன பிற நாயகர்களை கண்டால் தானே நீங்கள் ஓட்டமெடுக்கிறீர்கள் ? உங்களின் ஆதர்ஷ ஒல்லியார் லக்கி லூக்கையே அந்த 2 ஸ்லாட்களிலும் நுழைத்து விட்டால் ? புதுக் கதைகளோடு ? What enlighten guys ?  

Fire சேதிகளில் அடுத்ததாக – டின்டின் பற்றி ! ஒரு வழியாய் படைப்பாளிகளின் ஒப்புதல் கிட்டியாச்சூ – நமது தமிழ் பதிப்பின் முதல் இதழுக்கு ! இன்னமும் தயாரிப்பு சார்ந்த சில பல திருத்தங்களை செய்து வருகிறோம் ! So எப்படியேனும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவின் தருணத்துக்கு “திபெத்தில் டின்டின்” தயாராகி விடுவாரென்ற நம்பிக்கை துளிர் விட துவங்கிவிட்டுள்ளது ! இப்போதெல்லாம் கண்ணில்படும் கதைகளையெல்லாம் போட்டுத் தாக்கி தெறிக்க விட்டு வருவதால் – “ஆங்…வரட்டுமே..பாத்துக்கலாம் !!” என்ற ஒரு ஜாலி மூட் உங்களிடம் குடியிருப்பதாக எனக்கு சமீப நாட்களில் தெரிகிறது ! But எனக்கோ இந்த ஒற்றைத் தொடரானது ஒரு ஆயுட்கால பிரயத்தனமாய் தென்படுகிறது ! 1985-ல் கொயந்த புள்ளையாட்டம் டின்டினுக்கு உரிமைகள் கோரிப் போய் பல்பு வாங்கிய நாட்களிலேயே இந்த நாயகர் ஒரு ஜாம்பவான் ; அதற்குப் பின்பான இந்த சுமார் 40 ஆண்டுகளில் இன்னமும் அசுர உயரங்களுக்கு அவர் வளர்ந்திருப்பது கண்கூடு ! அவரை தமிழ் பேசச் செய்திட ஆகியுள்ள முயற்சிகளை பற்றியோ ; செலவுகளைப் பற்றியோ, அவரது தமிழாக்கத்துக்கு ஒப்புதல் பெற்றிட அடித்திருக்கும் குரங்கு பல்டிகளைப் பற்றியோ பேச  ஆரம்பித்தால், பொங்கல் நெருங்கி விடக்கூடும் ! So – ‘வெள்ளித்திரையில் மீதத்தைக் காண்க’ என்பதோடு விட்டு விடலாமே ? And yes – அச்சுக்குச் செல்லும் முன்பாய் previews எப்போதும் போல இருந்திடும் !

Keen on, 2024 அட்டவணையினில் கிராபிக் நாவல் சந்தாவின் ஒற்றை இதழ் குறித்தும், MYOMS சந்தாவின் 4 இதழ்களின் தேர்வினைப் பொறுத்தவரை ஒரு மாதிரியாய் ரிஸல்ட்ஸ் தெரியத் துவங்கி வருகின்றன ! அதன்படி கி.நா.வில் எந்த இதழ் ? என்று கிட்டத்தட்ட decide செய்தாச்சு ! And அந்த 4 இதழ்களின் தேர்வில் ஒரு பாதி நான் எதிர்பார்த்தது போலவும், மறு பாதி சற்றே வியப்பூட்டும் விதத்திலும் உள்ளது ! 

இன்னமும் வோட்டுப் போட்டிருகாதோரின் வசதிக்காக இதோ லிங்க் : https://strawpoll.com/e7ZJGKeK5y3

கடைசி நிமிஷ ஷாப்பிங்குக்கு நீங்க கிளம்பும் முன்பாய், எனக்கு இந்தாண்டு பண்டிகை கிடையாதென்பதால் சிஸ்கோவுக்குள் நான் மூழ்கிடும் முன்பாய் – every other fireplace தகவல் !

  • ஒரு வன்மேற்குக் களம் !! 
  • அழகானதொரு பெண்மணியே இதனில் lead personality ! 
  • யாரைத் தேடுகிறாள் ? எதற்குத் தேடுகிறாள் ? என்ற கேள்வியோடு நாம் காத்திருக்க, 5 வெவ்வேறு திக்குகளில் பயணமாகிறாள் !
  • ஒவ்வொரு திக்கின் பயணமும் ஒரு அத்தியாயம் !
  • ஒரே கதை – ஆனால் 5 ஆண்டுகளில் உருவாகியுள்ளது !
  • நாம் அத்தனை காலமெல்லாம் காத்திருக்காது – மாதம்தோறும் ஒன்று வீதம் 5 மாதங்களில் போட்டுத் தாக்கிடுவோமா – 2024-ன் பிற்பாதியில் ?
  • இதோ – ஒற்றை பக்க ட்ரெய்லர் :  

Bye all….உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ! பட்டாசுகளோடு, பலகாரங்களோடு, புது துணிகளோடு, நம்ம புது புக்ஸையும் சேர்த்துக் கொள்ளுங்கள் இந்தக் கொண்டாட்டத்தில் ! Precise Diwali all !! Detect you round !!