மந்திர எண் முப்பத்தியாறு !

 நண்பர்களே,

வணக்கம். இதிகாச ரேஞ்சுக்கு எதையெதையோ பதிவிடும் நம்ம மாமூலுக்கு முன்பாய்,  சேலம் புத்தக விழாவினில் இருந்தே பிள்ளையார் சுழியைப் போட்டு விடுகின்றேனே guys !! 

போன செவ்வாயன்று மாலையில் விழா துவங்கிய போது ஏற்பாடுகள் முழுமை கண்டிருக்கவில்லை & அடுத்த 2 நாட்களும் வருண பகவானின் உபயத்தில் நமக்கு மிதமான சேல்ஸ் தான் ! ஆனால் போன வெள்ளி முதலாய் அடுத்த கியருக்கு மாறியுள்ள சேலத்து செவர்லே, ஒவ்வொரு நாளும் சும்மா தெறிக்க விட்டுக்கொண்டுள்ளது ! விற்பனைத் தொகைகள் வங்கிக்கணக்கினை குஷி கொள்ளச் செய்வது ஒரு பக்கமெனில், மாணாக்கர் ; யூத் – என்று அடுத்த தலைமுறையினர் நமது ஸ்டாலில் அலைமோதிடும் அட்டகாசம் சும்மா ‘ஜிவ்’வென்று பறக்கச் செய்கிறது ! மாவட்ட நிர்வாகமும் சரி, பபாசியும் சரி, ரொம்பவே மெனெக்கெட்டிருப்பதைக் கண்கூடாய்ப் பார்த்திட இயல்கிறது – கல்விக்கூடங்களின் உற்சாகப் பங்களிப்பினில் ! இங்கொரு செம சந்தோஷ விஷயமும் உண்டு !! “மாயாவி ஸ்டாக் பூஜ்யம்” என்றதொரு நிலவரத்துடன் நாம் களம்காணும் முதல் புத்தகத் திருவிழா இதுவே & but துளியும் தொய்வின்றி விற்பனைகள் மாஸ் காட்டி வருகின்றன ! இம்முறை நாயகர் அல்லாத one-shot ஆல்பங்கள் றெக்கை கட்டிப் பறந்து வந்துள்ளன ! கார்ட்டூன்களும் ‘ஜிலோ’ சேல்ஸ் ! பற்றாக்குறைக்கு – பல்லடத்து டிரெய்னிங்கோ என்னவோ – ‘போன வருஷம் வாங்கிப் படிச்சோம்கா ; நல்லா இருந்துச்சு ; தோர்கல் புக்ஸ் குடுங்க !‘ என்று கேட்டு வாங்கிச் சென்ற மாணவியரும் சேர்த்தி ! லக்கி லூக் titles nearly காலி ; ஒன்றோ-இரண்டோ ஆல்பங்கள் மாத்திரமே கையிருப்பில் ! லாரன்ஸ்-டேவிட் ; ஜாக்கி ஜானி ; ஸ்பைடரார் கூட ஒற்றை இதழ் ; இரண்டு இதழ்கள் என்ற நிலவரத்துக்கு நகர்ந்துவிட்டனர் ! அந்த சிறுத்தை மனிதனோ குட்டி புக்கில் ரவுண்டு கட்டி அடித்து வருகிறான் ! இப்பொதெல்லாமே  “இந்த title காலியாகப்  போகுது சார் ; கொஞ்சம் தான் ஸ்டாக் இருக்கு ; லிஸ்டிங் எடுத்து விட்ரவா ?” என்று நம்மாட்கள் கேட்பது தான் எனது accepted caller ட்யூன் !  For certain – இந்த ஸ்டாக் காலியாகும் படலம் ஒற்றை இரவினில் நிகழ்ந்திடவில்லை தான் & காலியாகும் வேகத்துக்கு சிறிதும் குறைச்சலின்றி புதுசுகளை உள்ளுக்குள் திணித்துக் கொண்டும் இருக்கிறோம் தான் ! Nevertheless quiet – புத்தக விழாக்களின் வேளையினில் நமது கிட்டங்கி ரேக்குகள் கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ளும் அதிசயத்தை சிலாகிக்காது இருக்க இயலவில்லை ! Therefore பதிவின் துவக்கத்திலேயே இந்தக் குத்தாட்டம் ! 

And சேலம் விழாவினில் ஞாயிறு மாலையினில் நமது நண்பர்களைக் கணிசமாய் சந்திக்க இயன்றதுமே உற்சாக மீட்டர்கள் உசக்கே சென்றிடவொரு கூடுதல் காரணம் ! ஈரோட்டில் மரத்தடி மீட்டிங் இல்லையென்ற குறையை சேலத்தில் தீர்த்து விடலாம் என்று நண்பர்கள் கருதிட, சாரலைப் பராக்குப் பார்த்தபடிக்கே அந்த மாலையினை அழகாய்க் கழித்திட இயன்றது ! “மழைக்காலம்” என்ற ஒற்றை இக்கன்னா மட்டும் இடறிடாது போகும் பட்சத்தில், நமது ஈரோட்டு வாசக சந்திப்புக்கு no longer easy தர சகல ஆற்றல்களும் கொண்டிருக்கும் போலும் இந்த சேலம் விழாவானது ! 

 Reduction to terra firma – டிசம்பரின் (முதல்) 4 புக்ஸும் ரெடி ! போன வாரமே 3 புக்ஸ்  ரெடியாகியிருக்க, ‘காலனின் கால்தடத்தில்‘ கி.நா.வினை மட்டும் சட்டுப் புட்டென்று முடித்து விட்டால், டெஸ்பாட்ச் செய்த்திடலாம் என்று தான் எண்ணியிருந்தேன் ! ஆனால் ‘கா.கா.த’ கணிசமாய் மாற்றி எழுதிடுவதற்கும், எடிட்டிங்குக்கும் அவசியம் கொண்டிருக்க, நிதானமாகவே பயணிக்க வேண்டியதாகிப் போனது ! Lastly எல்லாமே ரெடி – திங்களின் டெஸ்பாட்ச்சுக்கு ! இந்த கி.நா. ஒருவித ஹாரர் த்ரில்லர் என்பதையும் ; 18+ வாசிப்புக்கு ஏற்றதென்பதையும் மறுக்கா நினைவூட்டி விடுகிறேன் of us ! 

பொதுவாய் டிசம்பரில், இதழ்களின் சகலத்தினையும் பூர்த்தி செய்தான பிற்பாடு – அப்டியே ஜன்னலோரமாய் ஒரு பொசிஷனில் டர்ன் பண்ணி வடிவேல் செட்டில் ஆவது போல், நானும் செட்டில் ஆகிவிட்டு, நாம் பயணித்து வந்த 12 மாதங்களை flashback-ல் நினைவு கூர்வது வழக்கம் ! ஆனால் குறுக்குக்குள் பிடித்திருக்கும் இந்த நேரத்தில் விஷப்பரீட்சை வேண்டாமே என்பதாலும், புதுசாய் எதையாச்சும் செய்வோமே என்ற எண்ணத்திலும், முன்னே நமக்கென காத்துள்ள பாதையினை நோக்கிப் பார்வையினைப் படர விட நினைக்கிறேன் !! So here goes :  

2024-ன் அட்டவணை – செயலாளரின் விசாலத்தினில் இருந்திடுமென்ற  எதிர்பார்ப்போடு இருந்தவர்களுக்கு, தலீவரின் ஒடுக்கத்தில் அது இருப்பதைப் பார்த்த நொடியில், கணிசமான விசனம் எழுந்தது lovely essential obvious ! ரொம்ப முன்னே, இயக்குனர் ஷங்கரின் “பாய்ஸ்” திரைப்படம் வெளியான சமயத்தில் அதன் writer அமரர் சுஜாதா சார் தந்திருந்ததொரு பேட்டி எனக்கு ஞாபகத்துக்கு வந்தது ! “பாய்ஸ்’ படத்தில் ஒரு சீனிருக்கும் – நடிகர் சித்தார்த் சென்னை மவுண்ட் ரோடில் பப்பி ஷேமாய் ஓடுவதைப் போல ! அது கணிசமான சர்ச்சைகளை அந்நாட்களில் எழுப்பியது ! அது பற்றி அந்தப் பேட்டியில் சுஜாதா சாரிடம் கேட்டிருந்த போது – “இந்த சீனுக்கு என்ன மாதிரியான ரியாக்ஷன்ஸ் எழும் ; எந்தெந்தப் பத்திரிகைகளில் எப்படி – எப்படி கழுவி ஊற்றுவார்கள் !” என்பதையெல்லாம் முன்கூட்டியே ஒரு காகிதத்தில் எழுதி, இயக்குனரிடம் பகிர்ந்திருந்ததாய் சொல்லியிருந்தார் ! நாம சுஜாதா சாரும் கிடையாது ; நாம அடிக்கும் ஒன்னரையணா லூட்டிகள் ஷங்கர் சாரின் தெருக்கோடியும் கிடையாது தான் – but 2024 அட்டவணைக்கு இங்கே ப்ளாக்கில் ; க்ரூப்களில், நம்மில் யார்-யார் எவ்விதம் react செய்திடுவர் ? என்பதை கிட்டத்தட்ட 90% துல்லியத்துடன் கணித்தே இருந்தேன் ! And இந்தச் சந்தா வெளித்தோற்றத்துக்கு நம்ம தாத்தாஸ் போல வற்றலாய்த் தென்பட்டாலும், பயணத்தின் போது அந்தப் பெருசுகளின் லூட்டிக்குச் சிறிதும் சளைத்திராதென்ற உறுதியினையும் கொண்டிருந்தேன் !  இதோ – இந்தச் சித்திரத்தை சற்றே பொறுமையாய்ப் பாருங்களேன் guys : 

23 ஈரோக்கள் + 2 ஈரோயினிஸ் = TOTAL 25 நாயகப் பெருமக்கள் ! காத்திருக்கும் 2024-ன் அட்டவணையினில் இடம்பிடித்துள்ளோரின் லிஸ்ட் இது ! And இந்தப் பட்டியலில் V காமிக்சின் ஜூலை 2024 to டிசம்பர் 2024 க்கான புக்ஸ் சேர்த்தியில்லை ! Presumably அங்கே ஜூனியர் மேற்கொண்டு அறிமுகங்களைத் திட்டமிட்டிருக்கும் பட்சத்தில் – “25” என்ற இந்த நம்பர் இன்னமுமே ஏறக்கூடும் !! And இத்தனைக்கும் பிறகு – கீழ்க்கண்ட ரெகுலர் பார்ட்டீஸ் MYOMS சந்தாவில் சீட் பிடிக்க சட்டையைக் கிழித்துக் கொண்டுள்ளனர் :

  • CIA ஏஜென்ட் ஆல்பா
  • ஏஜெண்ட் சிஸ்கோ 
  • ப்ளூகோட் பட்டாளம்
  • சோடா 
  • நெவாடா 
  • IR$
  • மேகி கேரிசன் 
  • மேக் & ஜாக் 

இது ஒரு பக்கமெனில் ஜூன் 2024 முதலாய் காத்துள்ள க்ளாஸிக் பார்ட்டீசின் லிஸ்ட்டில் :

  • மாண்ட்ரேக் 
  • காரிகன்
  • ரிப் கிர்பி
  • சார்லி
  • விங்-கமாண்டர் ஜார்ஜ் 

என்றும் காத்துள்ளனர் ! (வேதாளர் அங்கேயும் வருவார் தான் !

இது தான் களநிலவரம் எனும் போது – இந்திய கிரிக்கெட்டின் T20 டீமில் இடம்பிடிக்க நிகழ்ந்திடும் அடிதடிக்குக் கிஞ்சித்தும் குறைச்சலில்லை நம் அணிவகுப்பினில் இடம்பிடித்திடவும் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரியும் ! 

ரெகுலர் தடத்தின் இந்த FAB 25-ல் பதினோரு பேர் நமக்கு நிரம்ப காலத்துப் பரிச்சயங்கள் & மீத 14 பேருமே சமீப ஆண்டுகளின் தேடல்களின் பலன்கள் ! So கிட்டத்தட்ட 60% புச்சு & 40% ரெகுலர்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அட்டவணையில் கொணர நினைத்த steadiness இதுவே – merely becos எத்தனை மலைகளையும், கடல்களையும், காடுகளையும் தாண்டிச் சென்று புதுசு புதுசாய் நாயகர்களைத் தேடியாந்தாலும் – “லக்கி லூக் மெரி இல்லியே ! டெக்ஸ் மெரி இல்லியே !” என்ற ஒப்பீடுகள் தவிர்க்க இயலா சமாச்சாரங்கள் ஆகிடுவதை நாம் காதில் தக்காளிச் சட்னி வரும் ரேஞ்சுக்குப் பார்த்தாச்சு ! So பழையவர்களுக்கும் ; புதியவர்களுக்கும் இடையே ஒரு நெருடலில்லா சமரசம் அவசியம் என்பது நமது  priorities-களுள் பிரதானமாய் இருந்தது !  இதன் பொருட்டு புதியவர்களில் ஒரு கணிசமான பகுதியினை MYOMS சந்தாவுக்கு பேக்கப் செய்திருப்பது போல தோன்றினாலும் – ஏதேதோ காரணங்களினால் அவர்கள் நீங்கள் எதிர்பார்த்திடும் firepower சகிதம் இருக்கத் தவறியுள்ளனர் என்பதே bottomline ! இதோ – அந்த 8 புக்ஸ்களுள் எந்த நான்கு, பிரேத்யேகச் சந்தாவுக்குள் இடம்பிடித்திடவுள்ளனர் என்பது சார்ந்த உங்களின் தீர்ப்பு : 

  1. துவக்கம் முதலே முன்னணி வகித்து வந்த CIA ஏஜெண்ட் ஆல்பா முதலிடத்தில் தேர்வாகிறார் !
  2. மூன்றாம் இடத்திலேயே குந்தியிருந்த ப்ளூகோட்ஸ், கடைசி 2 வாரங்களில் rally செய்து இரண்டாமிடத்துக்கு முன்னேறித்  தேர்வாகியுள்ளனர்  ! ஜெய் கார்டூனாயா !
  3. மூன்றாமிடம் – க்ளாஸிக் மறுபதிப்புக்கு – CID ஜான் மாஸ்டர் & இரட்டை வேட்டையர் என்ற கூட்டணி இதழுக்கு (in pocket size)
  4. நான்காமிடம் – ஏஜெண்ட் சிஸ்கோ !! 
என்னைப் பொறுத்தவரைக்கும் SODA இந்தச் சுற்றிலும் பின்தங்கியிருப்பதில் வருத்தமே ; but உங்களின் ஓட்டுக்கள் உங்கள் ரசனைகளின் வெளிப்பாடுகள் எனும் போது மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறேன் ! Nevertheless இந்த பாஸ்டர்-போலீஸ்கார் நிச்சயமாய் காற்றில் கரைந்திட மாட்டார் என்பது மட்டும் நிச்சயம் !  Extra on that & the M.Y.O.M.S later !
பழக்கப்பட்டவர்களுக்கும், புதியவர்களுக்கும் மத்தியில் ஒரு steadiness இருப்பதோடு 2024-ன் அட்டவணையினில் பிரதான கவனத்தினை நாங்கள் தர விழைந்தது – ஒற்றை முக்கிய அளவுகோலுக்கே ! தேர்வாகியுள்ள கதைகள் / நாயகர்கள் – உங்கள் ஆர்வங்களை மாதாமாதம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டோராய் இருந்திட வேண்டும் என்பதே அந்த இலட்சியம் “ஆங்…இந்த ஈரோவா ? இல்லீங்கண்ணா….இந்த மாசம் டெக்ஸும், லக்கியும் போதும் !” என்று சொல்லிடும் நிலவரங்கள் இனி தொடரப்படாதென்று நிரம்பவே மெனெக்கெட்டுள்ளோம் !
  • *ஒரு பிரேக் முடிந்து தெறிக்கும் உத்வேகத்தோடு திரும்பும் லார்கோக்கு No சொல்ல நிச்சயம் யாருக்கும் இயலாது !
  • *அமேசான் கானகங்களில் ஒரு ஜீவ மரண வேட்டை நிகழ்த்திய ஜாரோப்பை skip செய்ய நிச்சயமாய் மனசு வராது !
  • *உலகெங்கும் சாகசம் செய்திடும் டின்டினுக்கு நிச்சயம் சிகப்புக் கம்பளமே தந்திடத் தோன்றும் !
  • *XIII-ன் புது சாகசம் காந்தமாய் ஈர்க்காது போகாது !
  • *டெட்வுட் டிக் இருப்பது கி.நா.சந்தாவில் தான் என்றாலுமே, “கெட்ட பய சார் இந்தப் பால்பாண்டி” என்ற அவனது அறிவிப்பில் மிரளாது போவது சுலபமாகவே இராது ! 
  • *பார்வைக்குக் கிழ போல்டுகளாய் தென்பட்டாலும் தாத்தாஸ் இன்றொரு கில்லி தொடராய் fabricate ஆகி விட்டிருப்பதை மறுக்கவே இயலாது !
  • *கலரில், crisp வாசிப்பில் வேதாளரைப் பார்க்கும் போது அவரிடம் மனசைப் பறிகொடுக்காது இருப்பது ரெம்போ கஷ்டமாய் இருக்கப் போகிறது தான் ! Moreso இரண்டாம் பாதியில் V காமிக்சில் களமிறங்கவுள்ள (கலர்) வேதாளர் கதைகள் அதிரி புதிரி விசில்களை ஈட்ட வல்லவை எனும் போது !!
  • *தொடரினில் இன்னமும் வெளிவந்திருக்கா ஒரே ஒரு ஆல்பத்துடன் நமது நண்பர்களான கேப்டன் பிரின்சும் ; ஜாலி பார்ட்டி பார்னேயும், ஜின்னும் வந்து ‘ஹல்லோ’ சொல்லும் மாதத்தினில் அவர்களை மறுதலிக்கத் தான் இயலுமா ?
  • *சுடுவது இடியாப்பங்களே என்றாலும், ஆண்டுக்கொரு தபா மலர்ந்த முகத்தோடு வீட்டுக் கதவைத் தட்டும் வாய்ப்பினையும் ரிப்போர்ட்டர் ஜானிக்குத் தந்திடாது போகவாவது இயலுமா ?
  • *டாக்டர்களின் கனவுக்கன்னியை கலாய்க்கும் சாக்கில் உள்ளாற ரசிக்கும் உள்நாட்டு / வெளிநாட்டு ஸ்லீப்பர் செல்களும் இளவரசியிடம் “வாங்க மாட்டேன் – போ !” என்று சொல்லிடுவார்களா – என்ன ? 
  • *’தனிமையே என் துணைவன்’ என்று அவர் பாடித் திரிந்தாலும், நம் கும்பலில் அவரைக் கொண்டாடாது போகத்தான் இயலுமா ?
  • *மர்மங்களே எனது உயிர்மூச்சென்று மர்ம மனிதன் மார்ட்டின் நம்மை பல விசித்திர பிரதேசங்களுக்கு இழுத்துப் போனாலுமே அந்த மனுஷனின் கைகளைத் தட்டி விடவாச்சும் மனசு வருமா நமக்கு ?
  • *ஒரு டிப்பர் லாரியில் ஏற்றக்கூடிய அளவிலான படைப்பாளிகளை ஒற்றை ஆல்பத்துக்குள் அடக்கியபடியே வன்மேற்கின் ஊடே பயணிக்கவுள்ள “மேற்கே போ மாவீரா !” இதழை skip செய்யவாச்சும் மனசு வருமா ?
  • *ஒடிசலான நவீன வெட்டியானின் களத்தினில் மென்சோகமே பிரவாகமெடுத்தாலும் அவர் மீது காமிக்ஸ் காதல் கொள்ளாது போக முடியுமா ?
இவை போன்ற கேள்விகளை ஒவ்வொரு மாதமும் உங்கள் முன்னே வைத்திட வேண்டுமென்று விழைந்தோம் – காத்துள்ள அட்டவணையினில் ! வாங்கிடவும் சரி, வாசித்திடத் தூண்டுவதிலும் சரி –  2024-ன் தேர்வுகள் சோடை போகலாது என்பதே பிரதான நோக்கம் ! இந்த நொடியினில் இன்னொருக்க இந்த FAB 25 பட்டியலைப் பார்த்தபடிக்கே – உங்கள் மனசுக்குள் கணக்குப் போடுங்களேன் guys, இவற்றுள் எத்தனையினை துயில் கிடத்தலாம் ? எத்தனையினை சுடச்சுடப் படிக்கலாமென்று ? முந்தைய நம்பர் மிகுந்திருப்பின் நிச்சயம் வியப்பு கொள்வோம் !  

Oh yes – நம்ம கூர்மண்டையரைக் கண்டு உங்களில் சிலர் மிரண்டிருக்கலாம் தான் – ஆனால் அவரை வேணாமெனில் மறுக்கும் உரிமையினையும் உங்கள் கைகளிலேயே தந்திருக்கிறோம் தானே ?! And surprise …surprise …இதுவரைக்கும் வந்துள்ள சந்தாக்களில் “ஸ்பைடரின் விண்வெளிப் பிசாசு வேணாம் எனக்கு !” என்று சொல்லியுள்ளோரை ஒற்றைக் கையின் விரல்களுக்குள் அடக்கி விடலாம் ! 

“வேதாளரா – பழைய நெடியடிக்குமே ?” என்று சில புருவங்கள் உசந்திருக்கலாம் தான் – ஆனால் அந்த இதழ் வெளியான பின்னேயும் உங்கள் அபிப்பிராயங்கள் அவ்விதமே தொடர்கின்றனவா ? என்பதைப் பார்த்து விடலாமா ?

*மாடஸ்டி சீமாட்டியாஆஆ ?” என்ற அலறல்கள் கேட்கலாம் தான் – மார்ச் மாதம் அவர்  V காமிக்சில் debut செய்திடும் வரைக்கும் ! மிரட்டும் அந்த  action block-ன் முடிவினில் நீங்களும் ‘இளவரசிப் பாசறையில்’ சேர்ந்து கொள்ள லைனில் நிற்காது போக மாட்டீர்கள் !

மேற்படி மூவர் மாத்திரமே ஒரு முந்தைய யுகத்தின் படைப்புகள் ! பாக்கி 22 நாயகப் பெருமக்களுமே சமகாலத்துப் பிள்ளையர் எனும் போது, புதுயுக சித்திர பாணிகள் ; டிஜிட்டல் கலரிங் ; கதை சொல்லும் யுக்திகள் என்று ரசிக்கலாம் ! புறா காலில் தூது கட்டி அனுப்பும் புராதன தாத்தா ஈரோஸ் இந்த 22-ல் நிச்சயமாயிட்டும் நஹி !  And நமக்கிருப்பது அந்த ஆறாயிரம் ரூபாய்களுக்குள்ளான பட்ஜெட் ; அதனுள்ளேயே கால் சத நாயகர்களையும் சாகசம் செய்திட அனுமதித்தாக வேண்டும் என்பதே திட்டமிடலாக இருந்திட வேணும் எனும் போது – “சுப்ரீமோ ஸ்பெஷல்” பாணியில் மெகா விலை இதழ்களுக்கு இடம் தந்திட இயலாதே guys ?! இந்தப் புரிதலுடன் அட்டவணையினை இன்னொருக்கா நோக்குங்களேன் ப்ளீஸ் – பின்னணியில் உள்ள நமது  அபிலாஷைகள் புரிபடாது போகாது ! 

பிப்ரவரியில் அறிவித்திடவுள்ள MYOMS முன்பதிவுகளுக்குப் பின்பாய் மேற்கொண்டு 5 நாயகர்கள் 2024-ன் கோதாவுக்குள் இறங்கியிருப்பர் ! Which implies – 2024-ல் நாம் சந்திக்கவிருப்பது 25 + 5 = 30 ஈரோக்களை !!  

And ஜூன் 2024 முதலாய் தொடர்ந்திடவுள்ள க்ளாஸிக் நாயகர்களின் மூணாம் சீசனில், இன்னொரு 5 பேரை அள்ளிப் போட்டுக் கொண்டால் 30 +5 = 35 என்றாகிடும் எண்ணிக்கை !

அப்புறம் V காமிக்சின் அடுத்த 6 மாதச் சந்தாவில் ஒரு புதியவரும் காத்துள்ளார் எனும் போது – 35 + 1 = 36 என்ற மொத்தக் கணக்காகிடும் – 2024-ன் அட்டவணைக்கு ! ஆக மாதங்கள் 12 ; நாயகர்களோ 36 !!!! 

சொல்லுங்களேன் பாஸ் – 2024-ன் நமது பயணத்தில் கரம் கோர்த்துக் கொள்ள இந்த 36 காரணங்கள் போதாதா ? என்று !!!  Bye all ; சந்தா எக்ஸ்பிரஸில் இடம் பிடிக்க விரைந்திடுவோமா ? Enjoy a gargantuan weekend ! Survey you around !

P.S :  “Simplest டெக்ஸ் வில்லர் !” என்றதொரு கணிசமான ஏற்றுமதி ஆர்டரும் இன்று கிட்டியிருக்க, ‘தல’ கடல்தாண்டிய பயணத்துக்கு ரெடியாகி வருகிறார் ! குத்துவோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு – அண்டாக்களில் பாயாசங்கள் போடப்பட்டாலுமே !

SCENES FROM SALEM