வணக்கம். சென்னையின் புறநகர் வாசகர்களுக்கெல்லாம் புது இதழ்கள் இன்னமுமே பட்டுவாடா ஆகாது தொங்கலில் இருக்கும் சூழலில், அடுத்த செட் இதழ்களைப் பற்றிப் பேச மனசு ஒப்ப மறுக்கிறது ! So நடப்பைச் சுற்றியே இன்னும் கொஞ்சம் அலசுவோமே ?
டிசம்பரின் துவக்க 4 இதழ்களில் ஆச்சர்யமூட்டும் விதமாய் high of the list இருப்பது அந்த ஹாரர் கி.நா. தான் !! வழக்கமாய் ஒவ்வொரு மாதத்தின் ஆன்லைன் ஆர்டர்களும் எனக்குச் சொல்லும் கதைகளே தனி ரகம் ! ஹீரோக்கள் அல்லாத கதை எதையேனும் நாம் இங்கே மாங்கு மாங்கென்று உசிரைக் கொடுத்துத் தயாரித்து – “ஆஹா..ஓஹோ…” என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருப்போம் ! ஆனால் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நண்பர்களோ – ‘ஏய்..அப்டிக்கா போயி விளையாடு தம்புடு !‘ என்று அதனை ஓரம் கட்டி விட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள் ! And ஏஜெண்ட்களிடம் அரங்கேறும் விற்பனைகளிலும் மிகத் துல்லியமாய் அதே pattern தான் ஊர்ஜிதம் கண்டிடும் ! So இம்மாதத்து நான்கை லிஸ்டிங் செய்த போதே – “எப்படியும் கி.நா. விற்பனையில் தேறப்போவதில்லை ; ஜானி + ராபின் + டெக்ஸ் என்ற கூட்டணி தான் விற்பனை பார்க்கும் !” என்று எதிர்பார்த்திருந்தேன் ! ஆனால் shock …shock ….இதுவரைக்குமாவது நமது selective வாசகர்கள் குச்சிமிட்டாய் தந்திருப்பது ஜானிக்கே !! பாக்கி 3 murky & white இதழ்களும் டக் டக்கென்று டிக் ஆகியுள்ளன ! “காலனின் கால்தடத்தில்” இங்கும், இன்ன பிற தளங்களிலும் ஈட்டியுள்ள opinions தான் இந்த வேகத்துக்குப் பின்னணி என்பது புரிகிறது ! Useless to say – சில நெகட்டிவ் ரிவியூக்களுமே இருந்துள்ளன தான் ; however இந்த இரத்தக்களரியான gory fashion நமக்கு ரொம்பவே புதுசென்பதால், ‘அது என்ன தான் என்று பார்த்துவிடுவோமே’ என்ற curiosity தான் சக்கரங்களைச் சுழலச் செய்கின்றன என்றுபடுகிறது !
இந்த வரிசைக் கதைகளுக்கு Flesh & Bones என்றே தான் பெயரிட்டுள்ளனர் & இதனில் வெளிவந்துள்ள கதைகள் அனைத்துமே திகைக்கச் செய்யும் ஸ்டைலில் ஆனவைகளே ! கொஞ்ச காலம் முன்னே ஒரு திகில் கி.நா.வெளியிட்டிருந்தோமே – “தனியே..தன்னந்தனியே..” என்ற தலைப்பில் ? அது கூட இந்தத் தொடரின் ஒரு அங்கமே ! என்ன- அதனில் அமானுஷ்யம் சற்றே தூக்கலாய் இருந்தது & இந்த குடல்-குந்தானி ரக gore இல்லாதிருந்தது ! “காலனின் கால்தடத்தில்” ஆல்பத்தில் அந்தக் குரூர சமாச்சாரங்கள் மட்டும் இல்லாதிருந்தால் presumably இன்னும் ஒரு ரவுண்ட் பாராட்டுக்களை கூடுதலாய் ஈட்டியிருக்கக்கூடுமோ – என்னமோ ?! But கொடுமை என்னவெனில், இந்த ஆல்பத்தின் வெற்றி சர்வ நிச்சயம் என்ற நம்பிக்கையில் திட்டமிடலைத் துவக்கிடும் சமயமே இதனை 2 பாக ஆல்பமாய் படைப்பாளிகள் திட்டமிட்டுள்ளனர் ! முதல் ஆல்பம் வெளியாகி செம ரவுசு விட்டதைத் தொடர்ந்து 2 பாக திட்டமிடலை – 3 பாக திட்டமிடலாய் நீட்டி விட்டுள்ளனர் ! So “காலனின் கால்தடத்தில்” இதழுக்கு இன்னமும் 128 + 120 = 248 பக்கங்களில் 2 பாக sequel உள்ளது ! அதே கதாசிரியர் ; அதே ரணகள பாணி ; அதே ‘பப்பரக்கா’ பாப்பாஸும் !
முதல் ஆல்பம் நிற்கும் இடத்திலிருந்து புறப்படும் கதையானது அதே கதாசிரியர்-ஓவியர் கூட்டணியில், அதே ஸ்டைலில் ; அதே தீவில் தொடர்கிறது ! முதல் இதழின் ராப்பரில் குப்புற கிடக்கும் அம்மணி இங்கே மல்லாக்க கிடப்பது மாத்திரமே வித்தியாசம் ! பாக்கி எல்லா விதங்களிலும் ditto ditto !
பொதுவாய் கதைக்குத் தேவைப்படும் இடங்களில் விரசத்தை படைப்பாளிகள் நுழைக்கத் தயங்குவதில்லை ! பெளன்சர் போன்ற தொடர்களிலெல்லாம் பழுத்த கதாசிரியர் Jodorowski விட்டு தாளித்து எடுத்திடுவார் ! ஆனால் இந்த ஆல்பத்திலோ கதையின் ஓட்டத்துக்கு, இந்த பப்பி ஷேம் மங்கையரும், டவுசர் மட்டுமே போட்டுத் திரியும் லகுடபாண்டிகளும் எவ்விதத்திலும் உதவிடுவதில்லை ! “ஜாலியாய் வந்துள்ள இளசுகள்” என்ற பாத்திரப்படைப்புகளுக்கு வலு சேர்க்க மட்டுமே அவர்களின் ரவுசுகள் ! And அந்த ரணகள violence கூட அவசியமற்றதே !! க்ளோசப்பில் குடல்-குந்தானி மேட்டர்களைக் காட்ட இம்மியும் தேவை லேது ! இது சகலமுமே அந்த கதை சொல்லும் பாணியின் template மாத்திரமே ! மேற்கு ஐரோப்பாவில் இந்த அரை நிர்வாணங்களெல்லாம் அரையணாவுக்கு கவனத்தை கோரிடாத விஷயங்கள் என்பதால் இத்தகைய template-க்குள் துணிவோடு உலவுகிறார்கள் ! ஆனால் நம் கதை அவ்விதமல்ல எனும் போது அதே தடாலடி சாத்தியமாகிடுவதில்லை !
இங்கு தலைகாட்டும் விரசத்துக்கும் ; violence-க்கும் நியாமான defence ஏதும் தந்திட இயலாது என்ற ஒற்றைக் காரணமே என்னைத் தயங்கச் செய்கிறது – காத்துள்ள 2 பாகங்களையும் வெளியிடுவதிலிருந்து ! ஆனால் விரச சமாச்சாரங்களை ஓரம்கட்டி விட்டு, கதையின் அந்த த்ரில் relate மீதும் ; மெலிதான வரலாற்றுப் பின்னணி மீதும் ; யுத்தத்தின் கோர பக்கவிளைவுகள் மீதும் focal point செய்திடும் முதிர்வு நம்மிடம் இருப்பதைக் காணும் போது லைட்டாக மண்டையை சொறியத் தோன்றுகிறது !
தவிர, ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பாய் வந்திருந்ததொரு மின்னஞ்சலும் எனக்கு இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருகிறது ! எந்தத் தொடரென்று துல்லியமாய் நினைவில்லை ; ஆனால் “அது நிரம்ப அடல்ட்ஸ் ஒன்லி பாணியிலானது என்பதால் skip செய்திருக்கிறேன்” என்று இங்கே நமது பிளாக்கில் எழுதியிருந்திருக்கிறேன் போலும் ! அதை பார்த்து விட்டு, “அது எப்படி நீ தீர்மானிக்கலாம் – எனது வாசிப்பின் எல்லை எது என்று ? விரசங்களையும் தாண்டி ஒரு படைப்பில் ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கக்கூடும் ! நீயா திரை போட்டுக்குவது எந்த ஊர் நியாயம் ?” என்று உச்சஸ்தாயியில் பொங்கியிருந்தார் ! அந்தக் கேள்வி இங்குமே பொருந்திடுமோ-என்னவோ ? என்று பட்டது !
இதோ – பாகம் இரண்டின் பிரிவியூ !
Perhaps கண்ணை உறுத்தும் அந்த அட்டைப்படத்தினை பயன்படுத்திடாது, வேறேதேனும் சைவமான ஸ்டில்லை ராப்பராக்கிடலாம் & உள்ளாற அவசியமற்ற விரசங்களை கணிசமான filter செய்திடவும் செய்யலாம் ! இந்த முதல் பாகத்திலேயே, திருத்தி எழுதும் போது ஏகப்பட்ட விரச சமாச்சாரங்களை வசனங்களில் தோணாமல் எடிட் செய்திருந்தேன் ; வீரியங்களை மட்டுப்படச் செய்திருந்தேன் ! ஆனால் அந்த “குடல் கால் கிலோ-குந்தானி அரை கிலோ” sequences எதுவும் செய்திட அனுமதிக்கா இடங்கள் !
மாமூலான கி.ந.க்கள் கண்டிடும் விதியினையே ஈட்டியிருக்கும் பட்சத்தில், அரவம் போடாமல் அடுத்த வேலைக்குள் புகுந்திருப்பேன் ! ஆனால் இந்த இதழ் ஒரு ‘ஹிட்’ ஆகிடும் பாதையில் பயணித்து வருவதால் அதற்குள் இதன் முன்னணி, பின்னணி, சைடுஅணி பற்றியெல்லாம் நண்பர்கள் அலசத் துவங்கியாச்சு ! அதிலும் ஒரு நண்பர் – இந்த ஆல்பத்துக்குப் பின்னே இன்னமும் 2 பாகங்கள் இருப்பது எனக்குத் தெரியாது போலும் என்ற பதைபதைப்புடன், வாட்சப்பில் ஒரு 17 மெசேஜ்கள் அனுப்பியுள்ளார் – படங்கள், கோரிக்கைகள் இத்யாதி..இத்யாதி என்று ! “நமக்கு இவையெல்லாமே ஒரு மகாமகத்துக்கு முன்பான பரிச்சயங்கள் நண்பரே ; ரிலாக்ஸ் !” என்று அவரை ஆசுவாசப்படுத்தி வேண்டிப் போனது ! இந்நேரத்துக்கு ஏற்கனவே வாட்சப்பில் இது சார்ந்த அலசலை அவரே துவக்கியிருந்தாலுமே நான் வியப்பு கொண்டிட மாட்டேன் – அத்தனை வேகமாய் இருந்தார் மீதப் பாகங்களும் கரை சேர்ந்திட வேண்டுமென்பது குறித்து !!
Basically – இந்த Flesh & Bones வரிசையிலிருந்து இன்னொரு கதையுமே வாங்கியுள்ளோம் – “கதிரவன் கண்டிரா கணவாய்” என்று ! ஏற்கனவே அதன் விளம்பரமும் எப்போதோ வெளியிட்டோமென்ற ஞாபகம் உள்ளது ! So இந்த வரிசையின் சகல இதழ்களும் நமக்குத் தெரிந்தவைகளே நண்பரே !!