சிம்மத்தின் சந்தோஷ ஆண்டு !

 நண்பர்களே,

வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! நலமும், வளமும், மகிழ்வும்  இல்லமெங்கும் பிரவாகமெடுக்கும் அற்புத வருஷமாய் இந்த 2024 அமைந்திட புனித மனிடோ ஆசீர்வதிப்பாராக ! புது நம்பிக்கைகளோடு, புது இலக்குகளோடு நமது ஒவ்வொரு தேடலும் வெற்றியில் முடியட்டும் !

And certain – புலர்ந்துள்ளது நமது லயனின் 40-வது பிறந்தநாள் ஆண்டுமே கூட ! இந்த ஜூலை புலர்ந்திட்டால், செங்கோலை கையில் பிடித்து நிற்கும் நமது சிங்கம் சாருக்கு கேக் மீது 40 மெழுகுவர்திகளைச் செருகிட வேண்டி வரும் ! இதோ – அதற்கு முன்னோட்டமாய் இப்போதே ரெடியாகி இருக்கார் பாருங்களேன் !  

கடந்து சென்றுள்ள இந்த நான்கு தசாப்தங்களுக்குள் நிறைய flashbacks பார்த்தாச்சு ; பேசியாச்சு ; எழுதியாச்சு – so “40 வருஷங்களுக்கு முன்னே கம்பு சுத்தினேன் பாரு”ன்னு மறுக்கா ஆரம்பிக்க எனக்கே தம் லேது ! ஆனாலும் “1984” என்ற வருஷம் மனதில் நிழலாடும் போது, ஏகமாய் blended emotions மனசுக்குள் பிரவாகமெடுப்பதைத் தவிர்க்க இயலவில்லை !  தென்பட்ட அத்தினி சுவர்களிலும், ‘ணங்கு..ணங்கு..ணங்கு’ என்று முட்டிக் கொண்ட புளகாங்கித அனுபவத்தினை(!!!) அந்த ஆண்டின் முதல் பாதியும், வீங்கிக் கிடந்த கபாலத்துக்கு ஒத்தடம் கிடைத்த அனுபவத்தினைப் பின்பாதியும் தந்திருந்தன ! அன்றைக்கு யாரும் என்னிடம் வேலை மெனெக்கெட்டு – “ஏண்டாப்பா டேய்- இந்தத் துறையிலே 40 வருஷம் குப்பை கொட்டுற வரம் உனக்கு இப்போ கிடைச்சா நீ ஹேப்பியா இருப்பியா ?“ன்னு ஒரு கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள் தான் ! ஆனால் அப்படியொரு வேளை யாரேனும் கேட்டிருந்தால், ‘ஆத்தீ…கடிச்சு,கிடிச்சு வைச்சிருவாரோ இந்தாளு ? கொஞ்சம் விலகியே போயிடுவோம் !’ என்று தான் நான் ஜகா வாங்கியிருப்பேன் !  480 மாதங்களுக்குப் பின்னேயும், சிங்கத்தின் தோளில் கரம் போட்டுப் பயணம் செய்யும் வரம் தொடர்ந்திடும் என்று ஒரு ரம்யமான சொப்பனத்தில் கூட அன்றைக்கு கற்பனை பண்ணத் தோன்றியிராது தான் ! But such is the class of existence !!! Thank you Gods above !!!

பல்லாயிரங்கள், லட்சங்கள் என்றெல்லாம் இன்றைக்கு நமது விற்பனை நம்பர்கள் கிடையாது தான் ! So “40 வருஷங்களில் இதைத் தூக்கி நட்டி வைச்சுட்டேன் ; அதை நிமிர்த்திப்புட்டேன்”  என்றெல்லாம் நெஞ்சை நிமிர்த்த முகாந்திரங்கள் லேது ! And certain – அகவைகள் 40 கண்ட பின்னேயும் amateurish ஆக பிழைகளும், பிசகுகளும் தொடர்ந்திடவே செய்கின்றன தான் ! So அனுபவத்தில் அசகாய சூரனாகிப்புட்டேனாக்கும் என்று மார் தட்டவும் வழி நஹி ! ஆனாலும் ஒரு அழகான நேசத்தினை வாழ்க்கையாய்க் கொண்டிடும் வாய்ப்பும், அதனை அடுத்த தலைமுறையின் கையில் ஒப்படைக்கும் சாத்தியமும், அன்பே உருவானதொரு நண்பர் வட்டத்தை ஈட்டிடும் சூழலும் கிட்டியிருப்பது ஆண்டவனின் கொடையே எனும் போது,  குருத ஓட்டிடுவது குண்டுச்சட்டிக்குள் தான் என்றாலுமே மனம் துள்ளுகிறது !

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாய் முத்துவின் 50-வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன தான் ; அது சந்தேகமின்றி இதை விடவும் பெரியதொரு மைல்கல் தான் ! And certain – அந்த 50 ஆண்டுகளில், துவக்கப் 15 ஆண்டுகளுக்குப் பின்பான பாக்கி 35 ஆண்டுகளும் வண்டி ஒட்டியது அடியேன் தான் ! But – விகிதாச்சாரங்கள் வேறுபட்டிருந்தாலும், எனது பங்களிப்பு பகிர்ந்ததொன்றே என்பதை மறுப்பதற்கில்லை ! So லைட்டாக அங்கே அடக்கி வாசிக்கவே தோன்றியது எனக்கு. ஆனால் இங்கோ வண்டிக்கு மாடு தேடிய நாள் முதலாய், மாட்டுக்குத் தீவனம் வைத்து, தண்ணி காட்டி, சாணி அள்ளியது வரை சகலமும் ஆல் இன் ஆல் ஆந்தைராஜா தானெனும் போது – இங்கே நோ நெருடல்ஸ் at all ! Oh certain – இந்தப் பேட்டைகளில் எப்போவுமே புது ரௌடியும் ஞானே ; மூ.ச.க்களில் சகட்டு மேனிக்கு சாத்து வாங்கிப்புட்டு…”அடுத்த பஞ்சாயத்து எந்த ஊரிலேப்பா ?” என்று கெத்து காட்டும் சுனா-பனாவும் ஞானே எனும் போது, இந்த 40-வது பிறந்தநாள் ஆண்டினை ரகளையாய் முன்னெடுத்துச் செல்ல உள்ளுக்குள் துருதுருக்கிறது ! இந்தாண்டு முதலாய் இலகுரக சுவாரஸ்ய வாசிப்புகளுக்கே முன்னுரிமை என்ற டிராக்கில் ரெகுலர் அட்டவணை பயணிக்கவிருப்பதால், வந்தே பாரத் ரயில்களின் வேகங்களை எதிர்பார்க்கலாம் ! And சிக்கும் சந்தர்ப்பங்களிளெல்லாமே ஒரு புது வந்தே பாரத் அறிவிக்கப்படுவதை போல – சைக்கிள் கேப் கிடைத்தாலும் டிசைன் டிசைனாய் ஏதேனும் shock இதழ்களை களமிறக்க முனைவோம் !  

And இந்த நொடியில் உங்களிடம் இரு கேள்விகள் !! 

கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய் ?

கேள்வி # 2 – இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ஒரேயொரு புக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பிகினி தீவுகளுக்குப் போகும் வாய்ப்பு (!!!!) உங்களுக்கு கிட்டிடும் பட்சத்தில் – what may possibly maybe be your pick ? ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால் அது உங்கள் பார்வையில் எதுவோ ?

Bye all of us….contain an comely…very just correct year ahead !! God be with us !!