ஒரு பரபர பிப்ரவரி !

 நண்பர்களே,

வணக்கம். விண்ணைத் தொடும் வியாழனில் பிப்ரவரியின் புக்ஸ் புறப்பட்டாச்சு – நாளைக்கு உங்களின் இல்லக்கதவுகளைத் தட்டிடும் பொருட்டு ! “ஜனவரியில் பிப்ரவரி”க்கு முயற்சித்தோம் தான் – ஆனால் இளவரசியின் மொழியாக்கத்தில் டீம் V கொஞ்சம் தடுமாறிப் போக, கடைசி நிமிடத்தில் நான் உட்புக வேண்டிப் போனது ! And நியூசிலாந்தில் அரங்கேறும் இந்த சாகஸத்தில், வாடிக்கையான டாக்டர்களோ, தொழிலதிபர்களோ லேது என்பதால் வசனங்கள் ஜாஸ்தியாகி விட்டன ! So செப்பனிடும் பணியும், மாற்றி எழுதும் பணியும் நேரத்தை விழுங்கி விட்டதால், ஒற்றை நாள் தாமதமாகிப் போச்சு ! இதோ – நீங்கள் பார்த்திராத V பிப்ரவரி இதழின் previews + டெக்சின் உட்பக்க preview-ம் !

அட்டைப்படம் – மாடஸ்டியின் fan + டிஜிட்டல் ஆர்டிஸ்ட்டுமான ஒரு சென்னை ஓவியையின் கைவண்ணம் ! ஒரிஜினல் unlit & white டிராயிங்கையே வர்ணமூட்டியுள்ளார் – background-ல் மட்டும் கடல்..கப்பல் என்ற additions சகிதம் ! இதனை ஜூனியர் என்னிடம் காட்டிய போது எனக்குத் தெரிஞ்ச டிராயிங் ஞானத்துடன், கண்ணு..மூக்கு…காது…கழுத்து என்று பார்த்து விட்டு, மண்டையை ஆட்டியிருந்தேன் ! நம் மத்தியினில் உள்ள விற்பன்னர்களின் தீர்ப்பு எவ்விதம் இருக்கப் போகுதோ – அறியில்லா !  ஏற்கனவே இதே கோணத்தினில் ஒரு மாடஸ்டியினை காலம் சென்ற நமது ஓவியர் மாலையப்பன் ஏழோ-எட்டோ ஆண்டுகளுக்கு முன்னே போட்டிருந்தார் என்ற ஞாபகம்…..அது வரையப்பட்ட இளவரசி ;  இது டிஜிட்டல் இளவரசி ! 

கதையைப் பொறுத்தவரை ரொம்பவே வித்தியாசமான பின்புலன் ; கதை மாந்தர்கள் என்று தடதடக்கிறது ! மருத்துவ ரசிகர்கள் மனமொடிந்து போகப்படாதே என்பதற்கோ, என்னவோ – ஒரேயொரு டாக்டர் மட்டும் கதையில் ஆஜராகிறார், சொக்காயே போடாமல் !! அது ஏன் ? என்றறிய படியுங்கள் இம்மாதத்து V காமிக்ஸ் !! செம crisp read !!  

And இதோ – போன வாரமே கண்ணில் காட்டுவதாய்ச் சொல்லியிருந்த டெக்ஸ் சாகச உட்பக்க preview :  

மொரிஸ்கோ வந்தாலே கோக்குமாக்காய் விலங்குகள் ; தாவரங்கள் ; ஜந்துக்கள் ; அமானுஷ்யங்கள் தலையெடுப்பது வாடிக்கை and இந்த ஆல்பமும் அதற்கொரு விதிவிலக்கல்ல !  கதையின் பெரும்பங்குக்கு ஒரு டெரரான காட்டேரி கும்பலாய் உலா வர, நம்மவர்கள் ஒரு ஈயச் சுரங்கத்தையே காலி செய்யும் அளவிற்கான தோட்டாக்களைப் பறக்க விடுகின்றனர் !! 224 பக்கங்களும் செம ஆக்ஷன் mode-ல் இருப்பதால் இந்த ஆல்பம், ஒரு மின்னல் வாசிப்புக்கு merely ideal என்பேன் !

இதோ – ஆன்லைன் லிஸ்டிங் : https://lion-muthucomics.com/most up-to-date-releases/1177-february-pack-2024.html

கிளம்பும் முன்பாய் திருப்பூரிலிருந்து updates !! 

சென்னை போட்டுத் தந்த பாதையினில், திருப்பூரும் இதுவரைக்குமான (அந்நகரத்திலான) விற்பனை ரெக்கார்டுகளை விளாசியுள்ளது ! நேற்றைக்கே பழைய நம்பரைத் தாண்டியாச்சு & இந்த ஞாயிறுக்குள்ளாக அங்குள்ள நமது நண்பர்களின் ஒத்தாசைகளுடன், ஒரு புது உசரத்தைக் கண்ணில் பார்த்திடுவோம் என்பது உறுதிபட தெரிகிறது ! Thanks a ton all !! அதிலும் நமது தோர்கல் முன்னேற்றக் கழகத்தின் பல்லடத்து கொள்கைபரப்புச் செயலாளர், திருப்பூரில் உள்ள வடநாட்டு ஆசாமிகளுக்கு கூட “तीस थिन में तमिल सीकना कैसे ?” என்ற தமிழ் படிக்கும் கைடோடு ஆளுக்கொரு தோர்கலை போணி பண்ணியிருப்பார் என்று உறுதிபட நம்பலாம் ! ஜெய் தோர்கல் !! ஜெய் ஜெய் திருப்பூர் !!   

And நாளை மறுநாள் முதல் (third.FEBRUARY) நெல்லை மாநகரத்தில் நமது கேரவன் நிலைகொண்டிருக்கும் ! அக்கட இருக்கக்கூடிய நமது நண்பர்கள் நெல்லையினையும் shatter hit ஆக்கிட உதவுவார்கள் என்ற நம்பிக்கை நிரம்பவுள்ளது ! ஒரே நேரத்தில் நாமக்கல் ; சிவகங்கை ; திருவாரூர் ; மயிலாடுதுறை என்று புத்தக விழாக்கள் ரவுண்டு கட்டியடிக்க, அந்த வேகத்துக்கு ஈடு தர நமக்குத் தான் தடுமாறுகிறது ! ஒவ்வொரு விழாவிலுமே கலந்து கொள்ளும் ஆட்பலம் மட்டும் நம்மிடம் இருப்பின் – தெறிக்க விடலாம் தான் ! புனித மனிடோ அதற்குமொரு வழி காட்டுவாரென்று நம்புவோம் !

 Sooner than I signal out – இதோ ஒரு குட்டியான ஜாலி நியூஸ் !! 

Bye all….ogle you around ! Happy Reading !!