நண்பர்களே,
வணக்கம். ஒரு unhappy news !! இத்தாலியின் போனெல்லி குழுமத்தின் தலைசிறந்த கதாசிரியர்களுள் ஒருவரும், நமது அபிமான மர்ம மனிதன் மார்டினின் பிதாமகருமான திரு.அல்பிரேடோ காஸ்டெலி அவர்கள் இன்று காலை தனது 76 -வது வயதினில் இயற்கை எய்தியுள்ளார் ! 1971 முதலாய் போனெல்லியில் பணிதுவக்கியவர் கடந்த சில நாட்களுக்கு முன்வரையிலும் பிசியாக இருந்து வந்திருக்கிறார் ! எண்ணற்ற கதைகள் ; தொடர்கள் ; கட்டுரைகள் என்று எழுதிக் குவித்துள்ள ஜாம்பவான் !
And ஒரு ஆளுமை மிகுந்த பெயராய் மாத்திரமன்றி, இவரை ஓரளவுக்கு நேரிலும் எனக்குப் பரிச்சயம் என்பதால் இந்த இழப்பு கூடுதலாய் நெருடுகிறது ! நேரில் சந்தித்த சமயத்தில் தனது அலுவல் அறைக்கு இட்டுச் சென்று துளி கூட பந்தா இன்றி எனது கேள்விகள் சகலத்துக்கும் பதில் சொன்னார் ! ஒரு நூலகம் பிச்சை எடுக்கணும் – அவரிடம் உள்ள புத்தகத் தொகுப்பின் முன்னே !! திடீரென்று மெயில் போட்டிருந்தார் – “இத்தாலிக்கு மார்ட்டின் புக்ஸ் 5 (மெல்லத் திறந்தது கதவு) அனுப்ப எவ்வளவு ஆகும் ?” என்று வினவி ! நம்மாட்களும் மாமூலான சேகரிப்பாளர் போலும் என்று எண்ணி ஏர்மெயில் கட்டணமெல்லாம் சொல்லி வைக்க, அவர் பணத்தை அனுப்பும் வழிமுறைகளை கேட்டு மின்னஞ்சல் அனுப்பிய போதுதான் என் கண்ணில்பட்டது ! பதறிப் போய் பதிலனுப்பி, புக்ஸையும் அனுப்பியிருந்தோம் ! கடைசியாய் அவரிடமிருந்து வந்த மெயில் அதுவே !
எனக்குத் தலையும் புரியாது, வாலும் புரியாது குழப்பிடும் “உலகத்தின் கடைசி நாள்“ (டைலன் டாக் + மார்ட்டின் இணைந்த சாகசம்) கதை பற்றி அவரை நேரில் சந்திக்கும் போது விளக்கம் கோரிட எண்ணியிருந்தேன் ; ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றே அவரது கடைசி நாளாகிப் போய்விட்டது !
R.I.P காஸ்டெலி சார் ; காமிக்ஸ் இருக்கும் வரையிலும் உங்களின் கீர்த்தியும் நிலைத்திடும் ! It is doubtless you’ll presumably be critically skipped over !!