ஹல்லோ சேலம் !

 நண்பர்களே,

சேலத்திலிருந்து வணக்கங்கள் ! வேறொரு வேலையாய் இந்தப் பக்கங்களுக்குப் பயணமாவது அவசியமாகிட, சேலத்தில் நடந்து வரும் புத்தக விழாவினை ஞாயிறுக்கு எட்டிப் பார்க்கலாமே என்ற மஹா சிந்தனையும் தோன்றியது ! So திரும்பிய திக்கிலெல்லாம் மேம்பாலங்களுடன் காட்சி தரும் இந்த நகருக்கு சாமத்தில் வந்து சேர்ந்தேன் ! ‘வந்த வேகத்திலேயே பதிவை போடுறோம்’ என்ற வைராக்கியமெல்லாம் விட்டம் வரை விரிந்த கொட்டாவிகளில் காணாது போயிருக்க, கண் முழித்துப் பார்த்தால் மணி எட்டும் சொச்சம் !! “ஆத்தீ…கன்பார்மா வயசாச்சு நமக்கு !!” என்ற ஊர்ஜிதத்துடனே இதோ பதிவில் ஆஜர் ! 

ஆண்டின் கடைசி மாதம் எட்டும் தொலைவில் நிலைகொண்டிருக்க, நாற்கூட்டணியுடன் அதன் ஆரம்பத்தையும், ரெட்டைக் கூட்டணியோடு அதன் மத்திமத்தையும் அணுகுவதென்று திட்டமிட்டுள்ளோம் ! So – டிசம்பரில் துவக்கத்துக்கென ரெடியாகியுள்ள ஆல்பங்கள் இவை நான்கே :

ரிப்போர்ட்டர் ஜானி – “ஜானிக்கொரு தீக்கனவு” 

TEX – “உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி !”

V காமிக்ஸ் – “கொலைநோக்குப் பார்வை” (ஏஜெண்ட் ராபின்)

லயன் கிராபிக் நாவல் – “காலனின் கால்தடத்தில்” 

இவற்றுள் ஜானி & டெக்ஸ் முடிஞ்சது  ; நாளை V காமிக்ஸ் அச்சாகிடும் ! So இறுதி இதழாய் கி.நா.விற்கு எடிட்டிங் மட்டும் பண்ணி முடிச்சிட்டாங்காட்டி. all location for despatch ! இதோ – இது வரைக்கும் நீங்கள் பார்த்திருக்கா 2 இதழ்களின் அட்டைப்பட previews :  

இந்த சாகஸத்தில் நம்மவர்கள் டிடெக்டிவ் அவதாரில் ரகளை செய்கிறார்கள் & களமும் நாம் நிரம்பவே பரிச்சயப்பட்டிருக்கும் சான் பிரான்ஸிஸ்கொ தான் ! அங்கிருக்கும் போலீஸ் சீப் வழக்கம் போல மிக்ஸரை சுவைத்துக் கொண்டிருக்க, துப்புத் துலக்க வகையில்லாக் கொலைகளைக் கையாளும் பொறுப்பை இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் எடுத்துக் கொண்டு கதை முழுக்க ‘ஜம்’மென்று கோச் வண்டியில் வலம் வருகின்றனர் ! இம்முறை குறுக்கு ஒடிய no குருதைப் பயணம்ஸ் or ரயில் பயணம்ஸ் ! So வித்தியாசமான சித்திரங்கள் மட்டுமன்றி, மாறுபட்ட கதைபாணியுமே இம்முறை உங்களை எதிர்நோக்கிக் காத்துள்ளது என்பேன் ! கார்சன் மட்டும் உறங்கி முழித்து அப்படியே தலையைச் சீவாமல் வந்தது போல காட்சி தருவதை கண்டுக்காது விட்டால் – இந்தப் புது ஸ்டைலும் ரசிக்காது போகாது !  

And இதோ – ஆண்டின் இறுதி V காமிக்சின் preview : 

வழக்கம் போல ராபினின் முதிர் வயது ஆல்பமிது & அவர் இளம் வயதில் முடிச்சவிழ்த்த கேசின் நினைவுகூர்தலே இம்முறையும் ! வித்தியாசமான கதை knot ; அதனை சுலபமாய், சீராய் எடுத்துச் சென்றுள்ளனர் ! பெருசாய் கார் சேஸ் ; டுமீல் டுமீல் சமாச்சாரங்கள் கிடையாது தான் ; however unruffled 94 பக்கங்களில் ‘நறுக்’ வாசிப்பு ready ! என்ன – வில்லனை மட்டும் கொஞ்சம் வீரியமானவனாய் ஆக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் ! 

So இந்த நான்கோடு டிசம்பரின் துவக்கத்தைக் கையாண்டோமெனில், 2023 அட்டவணையினில் பாக்கி நிற்கும் ஒரே இதழான ஏஜெண்ட் சிஸ்கோவின் “கலாஷ்னிகோவ் காதல்” இதழை டிசம்பரின் மத்தியினில் – Supreme ’60s தடத்தின் அடுத்த இதழோடு கூட்டணி போட்டு டெஸ்பாட்ச் செய்திட எண்ணியுள்ளோம் ! So விங்-கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல் # 1 & ஏஜெண்ட் சிஸ்கோ கைகோர்த்து அடுத்த கூரியரில் பயணமாகிடுவர் ! தடிமனான Supreme 60s புக்கையும் சேர்த்துக் கொள்ளும் போது கூரியர் செலவு சமாளித்துக் கொள்ள உதவிடும் என்பதால் இந்த ஏற்பாடு ! ஆக ஆண்டின் அறிவித்த இதழ்களை அந்தாண்டிலேயே சுபம் போட இயன்ற திருப்தியோடு முன்சென்றிடலாம் ! Supreme ’60s-ல் மாத்திரம் ஒற்றை இதழ் தொக்கி நிற்கும் and அந்த ஸ்லாட்டுக்கென காரிகனும் ரெடியாகி வருகிறார் / மாண்ட்ரேக்கும் தயாராகி வருகிறார் ! காரிகனில் வைரஸ் X ; பழிவாங்கும் பாவை – போலான க்ளாஸிக் சாகசங்களும் இடம்பிடிப்பதால் இந்த காரிகன் ஸ்பெஷல் 2 முதல் இதழைப் போல தடுமாறிடாதென்று நம்பலாம் !  

Transferring on, இன்னும் நான்கே நாட்களில் வோட்டிங் நிறைவுற இருக்கும் இந்த வினவலில் most up-to-date update : https://strawpoll.com/e7ZJGKeK5y3 

C.I.A.ஏஜெண்ட் ஆல்பா முதலிடத்தில் இன்னமும் ஆராமாய்த் தொடர்ந்திடுகிறார் ! And மூன்றாமிடத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை தான் ! ஆனால் வியப்பூட்டும் விதத்தில் ஸ்லாட்ஸ் 2 & 4 இடமாற்றம் செய்து கொண்டுள்ளன ! அதே போல கீழே உள்ள இதழ்கள் அதனதன் இடத்தினில் ‘தேமே’ என்று தொடர்கின்றன ! மேகி கேரிசன் & நெவாடா கடாசி இடங்களில் பாவமாய் தொடர்கின்றனர் – தொடக்கம் முதலாகவே !! காத்துள்ள வியாழனன்று வோட்டிங் நிறைவுற்றிடும் என்பதால் இன்னமும் வோட்டு போட்டிருக்கா நண்பர்கள் தங்களின் கடமையினை செய்திடலாமே ப்ளீஸ் ? 

ரைட்டு…மதியத்துக்கு மேல் வருண பகவானின் கருணை தொடர்ந்தால் நமது ஸ்டாலில் ஆஜராகிட உத்தேசித்துள்ளேன் ! இந்தப் பகுதிகளில் இருக்கக் கூடிய நண்பர்களை சந்திக்க இயன்றால் ஹேப்பி அண்ணாச்சி ! Bye all…ogle you around ! Dangle a chilly Sunday !