விலகு..விலகு…வேங்கை வெளியே வருது…!!

 நண்பர்களே.

வணக்கம். தமிழ் செப்பும் நல்லுலகிற்கு கவுண்டர் ; வடிவேலார் ; சந்தானம் ; பரோட்டா சூரி போன்ற மூதறிஞர்கள் நிறையவே ‘நச்’ கருத்துக்களை கல்வெட்டில் பதிக்காத குறையாய் விட்டுச் சென்றுள்ளதை நாமறிவோம் ! “நாகூர் பிரியாணியானது உளுந்தூர்பேட்டையிலிருக்கிற மிஸ்டர் நாயாருக்கு போணும்னு விதி இருந்தாக்கா – அது கிடைக்காம போகாது !” என்பது அந்தப் பொன்மொழிகளில் ஒன்றல்லவா ? அதன் நிஜத்தன்மையை கடந்த 10 தினங்களில் இந்த ஆந்தையன் உணர்ந்து வர்றான் ! 

இந்தப் பொன்மொழிப் புரிதலின் நதிமூலம் கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளுக்கு முந்தையது ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் சாகரத்தின் ஒரு Alltime Top 10-க்குள் இடம்பிடிக்கக்கூடிய தொடர் தான் கேப்டன் டைகரின் (ஒரிஜினல்) தொடர் என்பதை நாம் மட்டுமல்ல – இந்த உலகமே அறியும் ! அத்தனை அசாத்திய உச்சத்தினை கண்ணில் காட்டிய ஒரிஜினல் படைப்பாளிகள் இயற்கை எய்திய பிற்பாடு – ஒரு வெற்றிடம் உருவானதை மறுப்பதற்கில்லை ! சக்கை போடு போட்டு வந்த ஒரு நாயகனை எந்தவொரு பதிப்பகமும் அம்போவென மறந்து விடாதென்பதால் – புதுப் புது inventive டீம்களோடு ‘தங்கத் தலைவனுக்கு’ புதுசாய் ஒரு ஜென்மம் தந்திட முனைந்தனர் – with blended results ! புதுசாய் ஆட வரும் ஒரு பிள்ளையாண்டனை ஒரு சராசரியான ஆட்டக்காரரோடு ஒப்பிட்டால் தப்பில்லை ; ஆனால் ஒப்பீடுகள் சச்சின் டெண்டுல்கருடன் செய்ய நேரிட்டால், யாராய் இருந்தாலுமே டப்பா டான்ஸ் ஆடத்தானே செய்யும் ?! நடந்ததும் அதுவே ! அதிலும் அந்த ‘இளம் டைகர்‘ தனித்தடத்தினை 1975 to 2015 என்ற முப்பதாண்டு காலகட்டத்தில் வெவ்வேறு கதாசிரியர் / ஓவியர்களைக் கொண்டு 21 ஆல்பங்களுடன் பயணிக்கச் செய்யும்  முனைப்பில் ரொம்பவே தடுமாறியிருந்தனர் ! நாமும் தொடரினை ஆரவாரமாய் ஆரம்பித்து விட்டு, ஆல்பம் நம்பர் ஒன்பதோடு தள்ளாடி நின்று விட்டிருந்தோம் ! 2014-ல் “அட்லாண்டாவில் ஆக்ரோஷம்” டபுள் ஆல்பம் தான் இத்தொடரினில் நாம் வெளியிட்டிருந்த கடைசி ஆல்பம் ! அந்த ‘வடக்கு vs தெற்கு‘ என்ற உள்நோட்டு யுத்தப் பின்னணியிலேயே கதை விடாப்பிடியாய் பயணித்ததில் நீங்களும் சரி, நாங்களும் சரி அடைந்த அயர்ச்சியினில் இளம் த.த.க்கு ஒரு பிரேக் தந்திட எண்ணியதில் no secrets ! ஆனால் அந்த பிரேக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு நீடித்திடுமென்று அன்றைக்கு நான் சத்தியமாய் யூகித்திருக்கவில்லை தான் ! Presumably ஓரிரு ஆண்டுகளுக்குப் பிற்பாடாய் வண்டி மறுக்கா புறப்பட்டு விடும் என்றே நம்பியிருந்தேன் ! ஆனால் தொடர்ந்த பொழுதுகளில் த.த.வின் “மின்னும் மரணம்” ; “இரத்தக் கோட்டை” ; “தோட்டா தலைநகரம்” போன்ற க்ளாஸிக் மறுபதிப்புகளில் நாம் பிஸியாகிட, அந்த மும்முரத்தில் கொஞ்ச காலம் ஓடியது ! அப்பாலிக்கா “என் பெயர் டைகர்” & மார்ஷல் டைகர் தொடர்களுக்குள் U-டர்ன் அடிப்பதில் கைப்புள்ள வடிவேலு ரேஞ்சுக்கு என் பச்சைச் சொக்காயெல்லாம் கந்தலாகிட்டதிலும் ஜாலியாய் பொழுது போச்சு ! அந்தப் பின்னணியில் மறுக்கா இளம் டைகர் தொடரினுள் புகுந்திட ‘தம்’ சுத்தமாய் இருந்திருக்கவில்லை தான் ! பற்றாக்குறைக்கு நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் மேடமும் தொடரின் அடுத்த சில ஆல்பங்களைப் படித்துப் பார்த்து விட்டு “ப்ச்” என்று உதட்டைப் பிதுக்கியிருக்க – ஓசையின்றி ‘த.த.வுக்கு ஒய்வு தந்திருந்தோம் ! 

கொஞ்ச காலம் கழித்து “தனித்தடத்திலாவது ; accurate for முன்பதிவுஸ்” என்று வெளியிடலாமே ? என்ற கோரிக்கை வலுப்பெற்ற நாளில் – “ரைட்டு…முயற்சிப்போம் !” என்றபடிக்கே மொழிபெயர்ப்பாளர் மேடமை ‘தம்’ கட்டி எழுதச் செய்தோம் ! அவருமே கணிசமான நேரம் எடுத்துக் கொண்டாலும், 4 அத்தியாயங்களையும் கத்தையாக முடித்துத் தந்துவிட்டார் ! அதை தமிழாக்கம் செய்திட அப்டிக்கா கருணையானந்தம் அங்கிளுக்கு பார்சல் பண்ணி அனுப்பின இரண்டாவது தினமே, நம் கதவைத் தட்டிக்கொண்டு கூரியர் ரிட்டன் வந்திருந்தது ! ‘இல்லேப்பா…கதை ரொம்ப நீளமா போகுது ; செரியா புரியவும் மாட்டேங்குது ! எனக்கு இது தேறாது !” என்று சொல்லிவிட, மலங்க மலங்க முழித்தபடிக்கே அந்த 184 பக்க குவியலோடு அமர்ந்திருந்தேன் ! “ஆங்…நம்மளே எழுதிப்புட வேண்டியது தான் !!” என்றபடிக்கே இங்கிலீஷ் ஸ்க்ரிப்ட்டை தூக்கினால் – சுத்தமாய் ரெண்டு கிலோ தேறக்கூடிய அந்தக் காகிதக்கத்தை கொடூரமாய் முறைப்பது போலிருந்தது ! 

அடிக்கடி நான் சொல்லியுள்ள விஷயம் தான் இது : கதையோட்டத்தில் ட்விஸ்ட்களும், மொழிமாற்றத்தில் பல்ட்டிகளுக்கான அவசியங்களையும் கொண்டிருக்கும் கதைகள் – எப்போதுமே பணிசெய்திட சுவாரஸ்யமானவைகள் – no lower than என்னளவிற்கு ! ஆனால் நேர்கோட்டுக் கதைகள் ; routine கதைகளுக்குள் என்னை இறக்கி விட்டால், கொரில்லா செல்லுக்குள் அடைக்கப்பட்ட நாய் ஷேகர் போல டான்ஸ் ஆடித் தள்ளிவிடுவேன் ! So ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது – இந்த மொழிபெயர்ப்புப் பணி எனக்கு சுகப்படவே செய்யாத ஒன்றென்று ! என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டே முழித்த வேளையில் தான் “முன்பதிவில் சுரத்தே நஹி சார் ; மொத்தமே முப்பதோ என்னவோ புக்கிங்ஸ் தான் வந்துள்ளன !” என்ற சேதி காதுக்கு வந்தது ! ஒரு புராஜெக்ட் சொதப்பியதைக் கண்டு நான் உள்ளூர நிம்மதிப் பெருமூச்சு விட்டது அன்றைக்குத் தான் ! So கண்ணைக் கசக்கியபடியே உங்களிடம் வந்து, புக்கிங் சொதப்பலின் பின்னணியினைச் சொல்லி விட்டு கழன்று கொண்ட போது….”ஷப்பா…கிரேட் யெஸ்கேப் !” என்று உள்ளுக்குள் ஒலிப்பது புரிந்தது ! 

இதெல்லாம் அரங்கேறி வருடங்கள் கொஞ்சம் உருண்டோடியான பின்னே – ‘த.த.’ முயற்சிக்கலாமே ? என்ற கோரிக்கை மறுபடியும் வலுப்பெற –  “தமிழாக்கம் செய்ய ஆளில்லை தெய்வங்களா ; எச்சூஸ் ப்ளீஸ் !” என்று இம்முறை கைகளைத் தூக்கி சரண்டராகியிருந்தேன் ! “நான் எழுதித் தரேன் சாரே !!” என்றொரு குரல் ஒலிக்க, “யாரு…யாரு..யாரந்த ஆபத்பாந்தவன் ?” என்று சுற்றுமுற்றும் பார்த்தால், அசலூரில்லே, அசல்நாட்டிலிருக்கும் நம்மள் கி ஷெரீப்ஜி தான் கைதூக்கி நிற்பது புரிந்தது ! அவர்பாட்டுக்கு மனசு மாறி ரிவர்ஸ் கியரை போட்டுப்புடக்கூடாதே என்று ‘பச்சக்’ என்று துண்டை தோளில் போட்டு லாக் பண்ணிவிட்டிருந்தோம் ! And சூட்டோடு சூடாய் 2023 அட்டவணையிலும் “The தளபதி ஸ்பெஷல்” என்ற அறிவிப்பை ரெகுலர் தடத்திலேயே போட்டும் விட்டோம் !

கையில் இருந்த, கையால் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் முழுசையும் நம்மாட்களைக் கொண்டு ஸ்கேன் செய்யச் செய்து ; படங்களையும் மெகா பைல்களாக இல்லாது compress செய்யச் சொல்லி பாகம் பாகமாய் அமெரிக்காவுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தோம் ! முதல் பாகம் ஈ.வி.ரவுண்டு பன் சாப்பிடும் வேகத்தில் செம வேகமாய் எழுதி வந்தது ; ரெண்டாவது பாகம், பொழுது சாயத் துவங்கும் சமயத்தில் தலீவர் கொட்டாவி விடும் ஸ்பீடுக்கு வந்தது ; பாகங்கள் மூன்றும், நான்கும் – தலீவரின் வேப்பிலைப் போராட்டத்தின்  வேகத்திலேயே வந்தன ! However எனக்கோ இம்மி கூட அதில் சிக்கலிருக்கவில்லை ! இதழினை நாம் அறிவித்திருந்தது நவம்பர் 2023-க்குத் தான் & எங்களது பக்கப் பரிமாற்றங்களெல்லாம் அரங்கேறியது கணிசமான மாதங்களுக்கு முன்பாகவே ! So அவரது அலுவலக / சமையலகப் பணிகளுக்குக்  குந்தகங்களின்றி, ரிலாக்ஸாக எழுதி அனுப்பிட வேண்டி எவ்வித பிரஷரும் போடவில்லை ! And பணியின் கடுமை குறித்து எனக்குக் கிஞ்சித்தும் ஐயங்களிருக்கவில்லை என்பதால் அவரை தொந்தரவு செய்ய மனம் ஒப்பவுமில்லை !

ரைட்டு…முன்னக்கூடி எழுதி வந்திருச்சு ; கையிலே கதைக்கான கோப்புகளும் ரெடியாக உள்ளன ; முன்கூட்டியே DTP முடிச்சு ; புக்கையும் நம்மள் சீக்கிரமே முடிக்கிறான்” என்று சொல்லிக்கொண்டேன் ! நம்மாட்கள் DTP வேலைகளை போட்டுத் தாக்கி மூன்றே வாரங்களில் முழுசையும் குவித்து விட, பிழைதிருத்தம் பார்ப்பதில் நமக்கு உதவிக் கொண்டிருக்கும் 2 நண்பர்களுக்கு பக்கங்களை அனுப்பி வைத்தோம் ! நான்கு பாகங்களையும் இருவருமே ரெண்டு தபா பார்த்து முடிக்க, “கரெக்ஷன்லாம் போட்டாச்சு அண்ணாச்சி ; பிரிண்டிங்குக்கு ரெடி பண்ணிடலாமா ?” என்று மைதீன் வினவினான் ! அம்மா இயற்கையோடு கலந்திருந்த வேளை அது என்பதால்,  இம்மாம் நீள கதைக்குள் முழுசாய் புகுந்து எடிட்டிங் செய்யும் ‘தம்’மெல்லாம் எனக்கிருக்காதென்று சரியாகவே யூகித்திருந்தான் ! ஒரு கணம் யோசித்தேன் – “சரி…invent போட ஆரம்பிக்கச் சொல்லு மைதீன் ; எழுதினதும் நம்மாளுங்கதான்…கரெக்ஷன் பாத்திருக்கதும் நம்மாட்கள் தான் ! பெருசா ஏதும் நோண்ட தேவை இருக்காது…சட்டுன்னு பிரின்டிங் முடிச்சா நல்லது தான் ” என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன் ! உள்ளுக்குள் ஒரு சன்னமான நிம்மதியும் இருந்தது – காலமாய் என்னை மிரட்டிக் கொண்டிருந்ததொரு சிக்கலான பணியினை நண்பரின் சகாயத்தில் இம்மி நோவு கூட இன்றி முடித்து விட்டோமே !! என்று ! ஆனால் ராவில் மோட்டைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடந்த வேளையில் மனசு கேட்கவில்லை ; ஒருக்கா மேலோட்டமாய் வாசிச்சு மட்டும் விட்டுப்புடுவோம் என்று தீர்மானித்தேன் ! காலையில் – “மொத பாகத்தை மட்டும் கொண்டு வா மைதீன்..லைட்டா பாத்திட்டு தந்திடறேன் !” என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் 46 பக்கங்கள் என் கைகளில் இருந்தன ! இங்கே லைட்டா scroll செய்து மேலே போய், அந்த “சந்தானப் பொன்மொழியினை” மட்டும் ஒருக்கா வாசியுங்களேன் other folks !!  

டைகர் கதைகளில் என்றைக்குமே படங்களும் அதிகம் ; வசனங்களும் அதிகம் ! மின்னும் மரணம் 18 பாகங்களும் கொண்ட முழுக்கதையிலெல்லாம் உள்ள டயலாக் பலூன்களை எண்ணினாலே கிறுக்குப் பிடித்துவிடும் தான் ! And இங்கேயும் அதனில் இம்மியும் மாற்றங்கள் இருக்கவில்லை என்பதை துவக்கப் பக்கங்களே நினைவூட்டின ! பொறுமையாய் மஹிஜி பணியாற்றியிருப்பதை படித்துக் கொண்டே பக்கங்களை மெதுவாய் புரட்டும் போதே, அந்தப் பரிச்சயமான பட்டாம்பூச்சிக் குத்தாட்டம் வயிற்றுக்குள் அரங்கேறுவதை உணர முடிந்தது ! ஆங்காங்கே சில இடங்களில் கதைப் புரிதலில் சிற்சிறு இடைவெளிகள் இருப்பது போல்பட்டது ! மலரை நான் ‘புய்ப்பம்’ என்று எழுதலாம் ; நண்பர் “பூ” என்று எழுதலாம் – அதனில் இம்மியும் சிக்கல்கள் லேது ! ஆனால் கதையின் புரிதல்களில் சமரசங்கள் சுகப்படாதென்றுபட்டது ! அதிலும் ரொம்பவே பிரயாசைகளுக்குப் பின்பாய் மறுக்கா ஸ்டார்ட் ஆகியிருக்கும் இந்த டைகர் எஞ்சினுக்கு, எனது சோம்பலால் எவ்வித சிறு இடர்களும் இருந்திடலாகாதே என்று நெருட ஆரம்பித்தது ! 

இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் இருந்தா அதையும் எடுத்திட்டு வாப்பா…!” என்று மைதீனுக்கு போன் செய்த போதே அவனும் புரிந்து கொண்டான் – ‘வேதாளம் முருங்கை மரம் ஏறிப்புடிச்சி ; இந்த மண்டகப்படி இனி அடுத்த 10 நாட்களுக்காவது நீடிக்கும்” என்று ! பாக்கியிருந்த 3 பாகங்களையுமே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டான் !  வேறு வழியின்றி முழுமூச்சாய் உள்ளுக்குள் புகுந்த போது தான் நண்பரின் பணியின் பரிமாணம் முழுசுமாய்ப் புரிந்தது ! For the sheer size of the dialogues – இந்த 184 பக்கங்களுக்குப் பேனா பிடிப்பதென்பது ஒரு 250 பக்க நார்மலான கதைக்கு சமானம் என்பேன் ! And பொதுவாக இத்தனை பெரிய கதையினில் பணியாற்றும் போது ஒரு சீரான hurry alongside with the circulation கிடைப்பது அரிதென்பது எனக்கு அனுபவத்தில் தெரியும். ஒரு தெளிவான மூடில் இருக்கும் போது வரிகளில் அந்தத் தெளிவு பிரதிபலிப்பதுண்டு ! அதே சமயம் வூட்டிலே பூரிக்கட்டைகள் சந்திராயன்களாய் உருமாற்றம் கண்டிடும் நாட்களில் – பேனாவுமே தடுமாறுவதுண்டு ! So நண்பரின்  ஐந்தாறு மாத உழைப்பெனும் போது, அதனில் சில  ups & downs இருப்பது தவிர்க்க இயலா இடர் என்பது புரிந்தது ! ஆங்காங்கே பட்டி-டிங்கரிங் என்று துவங்கிய எனது படலம், திருத்தங்கள், கொஞ்சமாய் மாற்றி எழுதல், அப்பாலிக்கா மறுக்கா proof learning என்று கடந்த 10 நாட்களாய் தொடர்ந்து வருகிறது & இன்றைக்குத் தான் பாகம் 3-க்கு சுபம் போட முடிந்துள்ளது ! எஞ்சியிருக்கும் 44 பக்கங்களை தக்கி-முக்கி இந்த ஞாயிறுக்குள் முடித்து விட்டால் – நாகூர் பிரியாணியை இந்த சிவகாசி ஆந்தையன் குட்டிக்கரணம் அடித்து முயன்றாலுமே தவிர்க்க வழியே நஹி என்பது மெய்யாகியிருக்கும் ! ஜெய் சந்தான பாஹுபலி !

And கதைக்குள் புகுந்து பணியாற்றிய போது தான் புரிந்தது – இளம் த.த.வை இத்தினி காலம் பரணில் பாய்போட்டுப் படுக்கச் செய்தது பிசகென்று !! ஒரிஜினல் கதாசிரியரின் படைப்புகளோடு ஒப்பீடு செய்யும் தவறை நானுமே செய்திருப்பது மண்டைக்கு உரைக்கிறது ! ஒரு நார்மலான கௌபாய் சாகசமாக மாத்திரமே பார்த்திருப்போமெனில் இந்தக் கதைகள் எப்போதோ கரை சேர்ந்திருக்கும் என்பது glaring ! இப்போவுமே மஹிஜி துணிந்து தண்ணிக்குள் இறங்கியிருக்காவிடின், நானாக இறங்கியிருக்கவும் மாட்டேன் & காலத்துக்கு இளம் டைகர் பரண்வாசியாகவே தொடர்ந்திருப்பார் ! So இந்த முயற்சிக்கொரு துவக்கம் தந்தமைக்கும், இயன்ற most effective-ஐ தந்துள்ளமைக்கும் thanks a ton மஹிஜி ! இதழ் வெளியாகி நண்பர்களின் கைகளில் தவழும் வேளைக்கே உங்களாலும் பார்க்க முடியாதென்பது ஒரு சிறு நெருடல் தான் – ஆனால் இங்கும், க்ரூப்களிலும் அரங்கேறப் போகும் அலசல்களை எனக்கு முன்பாய் நீங்கள் பார்த்து விடுவீர்களென்பது உறுதி !  

இதோ – அட்டைப்படம் + உட்பக்க previews :

அப்புறம் ஓவிய ஆர்வல அண்ணாஸ் : முன்னும், பின்னும் ஒரிஜினல் ஓவியங்களே ! கலரிங் மாத்திரமே மாற்றியுள்ளோம் ! So ப்ளீஸ் – கொஞ்சம் பாத்து பாஸ் மார்க் போட்டு விடுங்க ! 
So ரொம்ப ரொம்ப காலம் கழித்து ஒரு ‘தல vs தளபதி’ திருவிழாவுக்கு களம் தயாராகி வருகிறது ! In actual fact இது “இளம் தல vs இளம் தளபதி” !! தளபதியுடனான பயணம் நாளைக்குள் முடிந்திடும் பட்சத்தில் ‘தல’ தெறிக்க விடும் சிக்ஸர் ஸ்பெஷல் பக்கமாய் பார்வையினை ஓட விட வேணும் ! And அங்குமே நம்ம ஷெரிஃப்காருவின் பங்களிப்பு வேறொரு விதத்தில் உள்ளது ! அது பற்றி ‘சிக்ஸர் ஸ்பெஷல்‘ பிரிவியூவின் போது !! Bye guys !! அட்டவணைப் பதிவுக்கு ஓக்கே ஓக்க வாரம் தான் என்பதால் டைப்படிக்க இப்போதே விரல்களுக்கு உரம் ஏற்றிக் கொள்ளக்கிளம்புகிறேன் !  Gaze you around ! Own a enormous lengthy weekend !!
முன்கூட்டிய சரஸ்வதி பூஜை & விஜயதசமி நன்னாள் வாழ்த்துக்கள் ! அக்டோபர் இதழ்களை இன்னமும் வாசிக்க இயன்றிருக்கா நண்பர்கள் இந்த விடுமுறைகளை பயன்படுத்திக் கொள்ளலாமே ப்ளீஸ் ? 
And sooner than I neglect – ஒரு அவசரக் கோரிக்கையும் !! இளம் டைகர் தொடரின் முந்தைய பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகப் போவதால் முன்கதையினை நினைவுபடுத்திக் கொள்ள ஒரு மினி-கதைச்சுருக்கம் தேவை ! ஒற்றைப் பக்கத்துக்கு மிகாமல் crisp ஆக யாரேனும் எழுதிக் கொடுத்தால் – சிலை வைக்கிறோமோ இல்லையோ ; அரை டஜன் ரவுண்டு பன்களை கூரியரில் அனுப்பிடுவோம் !! Please guys ? இந்த விடுமுறைகளின் போதே இயன்றால் சிறப்பு !