நண்பர்களே,
வணக்கம். பல்வேறு சலூன்களில் பலதரப்பட்ட தறுதலைகளை நம்ம ‘தல’ குமட்டோடு ‘கும்மு..கும்மு..’ என்று கும்மியெடுப்பதைப் பார்த்திருப்போம் ! ‘அப்டி போடுங்கண்ணே…இன்னும் ரெண்டு சாத்துங்க‘ என்றபடிக்கே பக்கத்தைப் புரட்டிப் போயிருப்போம் ! ஆனால் பாவப்பட்ட அந்த மிஸ்டர் தறுதலைஸ், சேதாரமான பல்செட்களோடும், பின்னியெடுக்கும் பல்வலிகளோடும், அந்தக்காலத்து வைத்தியர்களிடம் போய் வைத்தியம் பாக்க என்ன பாடு பட்டிருப்பார்களோன்னு எப்போவாச்சும் யோசித்துப் பார்த்திருப்போமா ? அந்த ஞானோதய வேளை கடந்த மூணு தினங்களாய் நேக்கு வாய்த்துள்ளது – கடைவாயில் தெறித்து வரும் பல்வலியின் உபயத்தில் !! போன வருஷமே ‘ரூட் கெனால்’ ட்ரீட்மெண்ட் என்று குடைந்து ரொப்பிய பல்லின் வேரில் மறுக்கா சீழ் பிடித்திருக்க, அதனை பொறுமையாய் தான் சீர் செய்திட இயலுமென்று டாக்டர் சொல்லி, மாத்திரைகளைத் தந்திருந்தார் ! மாத்திரையின் வீரியம் மட்டுப்படும் நொடியில், ‘தல’ கிட்டே சாத்து வாங்குற மெரியே feel ஆகத் துவங்கிட, தறுதலைஸ் பட்டிருக்கக்கூடிய கஷ்டங்களை எண்ணிப்பார்த்து கண்ணிலே ஜலம் வைப்பது போலாகிறது !! ஆனாலும் நீங்க பாவம்டா டேய் நீர்யானைகளா !! வாழைப்பழத்தை விழுங்கவே மூணு தபா யோசிக்க வைக்கிற பல்வலியோட, என்னத்தை சாப்பிட்டு ஒடம்ப தேத்திக்கிட்டு,கடாமாடுகள் மாதிரி மறுக்கா அடிவாங்க எப்புடித்தான் ஆஜராவீங்களோ ?!!
“இன்னா மேன் நேரா வன்மேற்கிலேர்ந்து இஷ்டார்ட் ஆகுது வண்டி ?” என்று கேட்கிறீர்களா – காரணம் கீதே !! ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல….நான்கு காரணங்கள் கீதே !! அந்த நான்குமே ஒற்றைப் புள்ளியில் இணைந்து “THE SUPREMO ஸ்பெஷல்” என்ற பெயருக்குள் ஐக்கியமாகின்றனவே !! And ஐயோ…சாமீ…தெய்வங்களே……இந்தப் பெயரினை நண்பர்களில் யாரேனும் முன்மொழிந்தீர்களா ? என்பது குறித்து இந்த நொடியில் எனக்கு திடீரென்ற சந்தேகம் தலைதூக்கிடுகிறது ! If certain – சிரமம் பார்க்காது ஞாபகப்படுத்திடுங்களேன் ப்ளீஸ் – ஹாட்லைனில் உரிய credit தந்திடத் தவறக் கூடாதல்லவா ?
நிறைய டெக்ஸ் & டீம் கதைகளுக்குள் சடுகுடு ஆடியுள்ளோம் தான் ; 548 பக்க நீள ஒற்றைக் கதைக்குள்ளும் உலாற்றியாச்சு தான் ; ட்ரிபிள் ஆல்பம் + டபுள் ஆல்பம் + சிங்கிள் ஆல்பம் என்ற கூட்டணி இதழையும் பார்த்தாச்சு தான் – ஆனால் இரவுக்கழுகாரின் இந்த 75-வது ஆண்டின் சிறப்பிதழில் கிட்டி வரும் அனுபவங்கள் செம queer ! நான்கு தலைமுறைகளை சார்ந்த கதாசிரியர்கள் !! நான்கு காலகட்டங்களில் உருவான கதைகள் !! நாயகர் ஒருவரே என்றாலும் அவரது கதையோட்ட பாணிகளுக்குள் உள்ள நுட்பமான மாற்றங்கள் !! காலம் எத்தனை மாறியிருந்தாலும், அந்த வன்மேற்கின் கதைக்களங்கள் இம்மிகூட மாறியிருக்கா ஆச்சர்யங்கள் – என இங்கே எனக்குக் காணக் கிடைத்துள்ள அனுபவங்கள் அனைத்துமே செம modern !! ஆனால் 712 பக்கங்கள் கொண்ட ராட்சஸ இதழ் எனும் போது, நடப்பாண்டின் அட்டவணையினை அறிவித்த நேரம் முதலாகவே, இதனில் பெண்டு கழறப் போவது சர்வ நிச்சயம் என்று கணிசமான அள்ளு விட்டுக்கொண்டிருந்தது ! முன்னெல்லாம் கருணையானந்தம் அங்கிளை டெக்ஸ் கதைகளை எழுதச் சொல்லி விட்டு டெக்ஸ் & கார்சனின் பகுதிகளை மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்க,பெருசாய் கஷ்டம் தெரிந்திடாது ! Nonetheless 224 பக்கக் கதையெல்லாம் இனி நமக்கு ஒத்து வராதென்று அங்கிள் ஜகா வாங்கிய பிற்பாடு, கடந்த 7 /8 ஆண்டுகளாகவே நம்மள் கி நாக்கார் தெருவை கூட்டாத குறை தான் ! And no diversified this month to boot !!
இதில் கூத்து என்னவென்றால் கடந்த 10 நாட்களாய் மொழிபெயர்ப்பு + எடிட்டிங் என ஒரே நேரத்தில் 4 கடைகள் விரித்துப் பணியாற்றிடுவதால், உறக்கத்திலும், குதிரைப்படைகளின் அணிவகுப்புகளும், நள்ளிரவில் “யாஹூஹூ” என்ற கூக்குரல்களோடே பாயும் போக்கிரிகளும் ; பாலைவன மோதல்களுமே கனவாய் வருகின்றன ! அர்ஜென்டினாவில் நடக்கும் இராணுவ மோதல்களில் இரவுக்கழுகாரும், சின்னப் பருந்தாரும் ஜோடி போட்டு செய்திடும் அதிரடிகளோடு கொஞ்ச நேரம் ; அபாச்சே பூமியில் அரங்கேறும் ரகளைகளில் வெள்ளிமுடியாரும், டெக்ஸும் செய்திடும் சாகசங்களுடன் கொஞ்ச நேரம் ; மெக்சிகோ எல்லையோரக் கணவாயினுள் முழு டீமுடன் ‘தல’ நிகழ்த்திடும் அதிரடியோடு கொஞ்ச நேரம் ; சியோக்ஸ் மண்ணில் ஆத்ம நண்பர்கள் இருவர் மட்டும் நடத்திடும் தேடலுடன் மீத நேரம் – என முழுக்க முழுக்க வன்மேற்கில் தான் இப்போதெல்லாம் ஜாகை ! இதே ரீதியில் இன்னும் தொடர்ந்தால், ஆபீஸ் போவதற்கு குருத ஏதேனும் மேயுதா ? வழுக்கைக் கபாலத்தை மறைக்க stetson தொப்பி கீதா ? என்றும் தேடத் தோன்றும் போலும் !
குட்டிக்கரணங்கள் பல போட்டு கலரிலான 3 கதைகளின் பணிகளுக்கும் மங்களம் பாடியாச்சு & இதோ – “பூதம் காத்த புதையல்” black & white கதைக்குள் பேனா ஓடிக்கொண்டுள்ளது ! ஏற்கனவே அட்டைப்படமெல்லாம் ரெடியாகி, நகாசு வேலைகளுக்குப் போயிருக்க, செவ்வாய் முதல் அச்சும் துவங்கிடும் !! 712 பக்கங்கள் கொண்ட முரட்டு புக் + ஹார்ட் கவர் என்பதால், பைண்டிங்கில் போதிய அவகாசம் தந்திட வேண்டியிருக்கும் !! So இயன்றமட்டுக்கு நம் தரப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி விட்டால் “HAPPY 75-th தல & டீம் !!” – என உற்சாகமாக வாழ்த்துச் சொல்லி கேக்கை கொஞ்சம் விழுங்கிக்கொள்ளலாம் அல்லவா ? So corpulent steam forward என்று விரட்டி வருகிறோம் வண்டியை !
4 தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகள் கதாசிரியர்களாக இருந்தாலும், இங்கே ஓவியப் பொறுப்பின் பெரும்பான்மை Galleppini என்ற ஜாம்பவானின் கையில் இருப்பதைக் காணவுள்ளீர்கள் ! 2 கதைகளுக்கு அவரது தூரிகை சித்திரங்கள் தீட்டியிருக்க, பாக்கி இரண்டில் வேறு ஓவியர்கள் களமிறங்கியுள்ளனர் !
ஒற்றை இதழாக இருப்பினும், 4 தலைமுறைகளில் வெளியான கதைகள் என்பதால் ஒவ்வொன்றிலும் காத்துள்ள அனுபவம் ரொம்பவே diversified :
- பிதாமகர் போனெல்லியின் கைவண்ணத்திலான சாகசமோ உருவாக்கப்பட்டிருப்பது 1967-ல் ! அதன் பின்பாய் 1970 ; 1990 ; 2002 ; 2007 ; 2016 ; 2023 ஆகிய ஆண்டுகளில் இந்த 81 பக்க சாகசம் மறுபதிப்பு கண்டுள்ளது !!
- அவரது புதல்வரான செர்ஜியோ போனெல்லியின் ஆக்கம் உருவானது : 1982-ல் ! பின்னாட்களில், 1985 ; 1997 ; 1998 ; 2003 ; 2009 ; 2010 ஆகிய ஆண்டுகளில் ரீப்ரின்ட் செய்துள்ளனர் !
- கிளாடியோ நிசி அவர்களின் கைவண்ணத்திலான கதை படைக்கப்பட்டது 1990-ல் & 2006 ; 2009 ; 2011 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டுள்ளது !
- இன்றைய ஜாம்பவான் போசெலி அவர்களின் படைப்பான “வந்தார்….வென்றார்…” வெளியானது 2009-ல் ! And 2012 ; 2014 & 2016 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டுள்ளது ! முதல் 3 கதைகளும் க்ளாஸிக் கமர்ஷியல் டெக்ஸ் பாணியில் இருக்குமென்றால், இதுவோ “கிங் ஸ்பெஷல்” இதழில் வெளியான ஆழமான, அழுத்தமான சாகசத்தின் ஜாடையினில் இருந்திடும் ! Genuinely நிறைய டெக்ஸ் ஆர்வலர்களின் all time favorites பாட்டிலுக்குள் இந்த அதிரடிக்கு உயரிய இடமுண்டு ! Truth to checklist, இந்த சாகசத்தினை ரொம்ப ரொம்ப முன்னமே வெளியிட எனக்கு செம ஆசை தான் ; ஆனால் அதன் மொழியாக்கம் நிச்சயம் சுலபமாய் இருக்கவே போவதில்லை என்பதை என்னுளிருக்கக்கூடிய சோம்பேறிமாடன் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க, தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றேன் ! Nonetheless sooner or later we are there – in ஆர்ஜென்டினா ! கடல் கடந்து கியூபாவுக்கு தல பயணப்பட்ட பொழுது நமக்கு கிட்டிய அனுபவமானது, கொஞ்சம் விட்டலாச்சார்யா பப்படம் ரேஞ்சில் இருந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம் தான் ; but இம்முறையோ இது செம ரியலிஸ்டிக் கதைக்களம் கொண்டதொரு saga ! க்ளைமாக்சில் தந்தையும், மகனும் முன்னெப்போதும் நாம் பார்த்திரா sequence-ல் நம்மைக் கட்டுண்டு போகச் செய்வது க்ளாஸிக் போசெலியின் மாயாஜாலம் என்பேன் ! என்னை செமத்தியாய் நாக்குத் தொங்கச் செய்த சாகசமும் இது தான் ; பணியின் இறுதியில் ஒரு இனம்புரியா நிறைவைத் தந்த சாகசமும் இது தான் !