மூணு மலைகளும் ஒரு மலையுழுங்கியும் !

 நண்பர்களே,

வணக்கம். இன்னொரு நெடும் பயணம் முன்நிற்க , பதிவை சித்தே சீக்கிரமாய்ப் போட்டு விட்டால் தலீவரைப் போல நேரத்தோடு கட்டையைக் கிடத்தும் மக்களுக்கு சுலபமாகிடுமே என்று எண்ணினேன் – and right here I’m !!  

ஜூலையில் கிட்டத்தட்ட இதே நேரம்…..! கோவைப் புத்தக விழாவுக்கு ரெடியாகிக் கொண்டிருந்தோம் ! And ஈரோட்டில் நமது சந்திப்புகளுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்தும் சீரியஸாகப் பேச ஆரம்பித்திருந்தோம் ! தொடர்ந்த பரபரப்பான முப்பது நாட்கள், ஒரு மின்னல் வேக ஓட்டத்தில் கடந்து சென்றிருக்க, இதோ – இன்றைக்கு கொஞ்சமே கொஞ்சமாய் மலைப்போடு திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது ! பொதுவாய் யாரேனும் மலையையே பெயர்த்து என் முன்னால் நட்டு வைத்தால் கூட – “ஓஹோ..?” என்றபடிக்கே மோவாயைத் தடவிக் கொண்டு நகரும் எருமைத்தோல் பார்ட்டி நான் ! என்னை மலைக்கச் செய்ய ரொம்பவே பெரிய மலைகள் அவசியமாகிடுவதுண்டு ! ஆனால் கடந்துள்ள இந்த 30 நாட்கள் வாய் பிளந்து அதிசயிக்கச் செய்ய, மூன்று மெகா முகாந்திரங்களைத் தந்துள்ளன என்றால் மிகையாகாது !! 

To commence off – நாம் நிறையவே பேசிவிட்ட ஈரோடெனும் நிறைவான திருவிழாவின் நிகழ்வுகள் !! இப்போதெல்லாம் “ஈரோடு” என்பது ஒரு ஊர் என்ற நிலை தாண்டி ; ஒரு விற்பனை சேத்திரம் என்பதைத் தாண்டி ; ஒரு அழகான புத்தக விழா நகரம் என்பதையெல்லாம் தாண்டி – ஒரு உணர்வாய், ஒரு emotion ஆக உருமாறியிருப்பதை இந்தாண்டு பதிவு செய்துள்ளது  ! “காமிக்ஸ் கிரிக்கெட் லீக்” என்று நண்பர்கள் ஆரம்பித்த போது – லைட்டாய் உள்ளுக்குள் நான் ‘என்னத்தே கன்னையாவாய்’ மண்டையைச் சொரிந்தது மெய்யே ; ஆனால் discontinuance of the day அதகளப்படுத்திக் காட்டிவிட்டது மட்டுமல்லாது – இதுவொரு தொடர்கதையும் ஆகிடுவதற்கான  முதல் புள்ளியையும் போட்டு விட்டிருந்தனர் நண்பர்கள் ! லோகோ டிசைனிங் என்ன ; பயிற்சிகள் என்ன ; வீடியோ தயாரிப்புகள் என்ன ; டி-ஷர்ட்கள்  என்னவென்று துவக்கம் முதல் “சுபம்” போடும் தருணம் வரை தெறி  மாஸ் ! இது ஒரு பக்கமெனில், இன்னொரு பக்கமோ “மலைகளை இடம்பெயர்ப்பதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி மேட்டரு” என்று நிரூபிக்கும் விதமாய், கடைசி ஒற்றை வாரத்துக்குள் ஒரு சர்க்கஸையே நடத்திடும் அளவிலான முயற்சிகளை உள்ளே போட்டு, அந்தச்  சனிக்கிழமையின்  சந்திப்பினை ஒரு உச்சமாக்கிச் சாதித்துக் காட்டிய நண்பர்கள் குழுவின் விஸ்வரூபம் ! And அன்றைய பொழுதினை தங்களது வருகைகளால், மலர்ந்த முகங்களால், உற்சாகத் துள்ளல்களால் சிறப்பித்த வாசகப் பட்டாளம் ! இந்த ஒட்டுமொத்த புள்ளிகள் மூன்றுமே ஒன்றிணையும் நொடியினில், ஈரோடு ஒரு அட்டகாச ரங்கோலியாய் காட்சி தந்த அழகு நொடிகள் என்னை மலைக்கச் செய்த முகாந்திரம் # 1 !

இரண்டாவது முகாந்திரமோ – a great bigger canvas – முழுக்க முழுக்கவே விற்பனை சார்ந்த களம் !! கொரோனா லாக்டௌன் கொடுமைகள் ஒரு முற்றுப்புள்ளி கண்ட பிற்பாடு ; மீண்டும் புத்தக விழாக்களை  நடத்திட அரசு அனுமதி தந்த பிற்பாடு, மக்களிடையே ஒரு  உணர்ச்சிப் பிரவாகம் கரைபுரண்டோடியது அப்பட்டமாய்  தெரிந்தது ! பூச்சாண்டி முகமூடிகளைப் போட்டுக் கொண்டே திரிய இனியும் அவசியங்களில்லை என்றான அத்தருணத்தில் தமிழக  முடுக்குகளிலெல்லாம் புத்தக விழாக்கள் அரங்கேறின ; and வெகு சொற்பம் நீங்கலாய், பாக்கி அனைத்திலுமே அனைவருக்குமே அசாத்திய, அழகான விற்பனைகள் ! ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடப்பாண்டில் நிலவரம் சற்றே மாறுதல் ! பூட்டப்பட்டிருந்த கதவுகள் திறந்த நொடியின் euphoria ; அந்த உற்சாக வெள்ளம் ஆயுளெல்லாம் தொடர்ந்திடாதே ?! அது வடிந்தான பின்னே – அன்றாடங்கள், விலைவாசிகள் என்ற மல்யுத்தங்களில் மக்கள் ஈடுபடும் அவசியங்களின்  மத்தியில்,  புத்தகக் கொள்முதல்கள் சற்றே  பின்சீட்டுக்குச் செல்லும் சங்கடம் நடைமுறையானது ! சின்னவர்கள் ; பெரியவர்கள் ; புதியவர்கள் ; பழையவர்கள் என்ற பேதங்களின்றி, பதிப்பகத் துறையினில் கணிசமானோர் ஏதோவொரு ரூபத்தில் இந்த ரிவர்ஸ் கியரை நடப்பாண்டினில் சந்தித்தே வருகின்றனர் ! ஆனால்…நமக்கான ஸ்கிரிப்ட் எழுதப்படுவது விண்ணிலுள்ள புனித மனிடோவின் பிரேத்யேகப் பேனாவினால் எனும் போது, விதிவிலக்குகள் இல்லாது போகுமா – என்ன ? விண்ணில் உள்ளவரின் வரங்களும், இங்குள்ள உங்களின் வரவுகளும் ஒன்றிணைந்து – நடப்பாண்டை நமக்கொரு ரெகார்ட் பிரேக்கிங் ஆண்டாக அமைத்துத் தந்துள்ளன ! உங்கள் அன்பின் பிரதிபலனாய் – 2023-ன் சகல புத்தக விழாக்களிலும் நாம் தொட்டிருப்பது புதுப் புது உயரங்களை & சென்னையும், கோவையும், ஈரோடுமே அந்தப் பட்டியலில் on top of the listing !  ‘பொம்ம’ புக்ஸ் தான் ; சின்னஞ்சிறு வட்டம் தான் ; ‘இன்னுமா இதையெல்லாம் படிக்கிறே ?’ என்ற வினவல்களையெல்லாம் வரவழைக்கும் model தான் – ஆனால் இந்தச் சிறு வட்டத்தின் மெய்யான ஆற்றல் எத்தகையது என்பதை upclose தரிசித்திட இப்படியொரு சந்தர்ப்பம் அமையும் போது மலைப்பில் மிரளாது இருக்கத் தான் முடியுமா ? You presumably also can very successfully be simply improbable of us  !! So இதுவே எனது முகாந்திரம் # 2 !!

முகாந்திரம் # 3 – சொல்லலாமா ? வாணாமா ? சொல்வதானால் நிகழக் காத்திருக்கும் கூத்துக்கள் பற்றித் தான் தெரியுமே – அப்புறமும் அந்தத் திருவாயை மூடிக்கணுமா ? – இல்ல பரவால்ல …பாத்துக்கலாம்னு தொடரலாமா ? என்ற குயப்பத்தை உள்ளாற ஏற்படுத்தியது ! However நானாக  சொல்லாது விட்டாலும், விஷயம் சீக்கிரமே வெளியே தெரியாது போகாதெனும் போது, நானே சொல்லிடலாமென்று தீர்மானித்தேன் ! அது வந்து …அதாகப்பட்டது …..இப்போ நான் என்ன சொல்ல வர்றேன்னா ….successfully,how build I reveal you ?….அது வந்துங்கண்ணா ….வெளியான பன்னிரெண்டாம் நாளே “கார்சனின் கடந்த காலம்” MAXI மறுபதிப்பு விற்றுத் தீர்ந்து விட்டது ! காலி….போயிண்டே… முடிஞ்ச்சூ….. carry out .. ஸ்டாக் காலி ! 

Oh sure – நாம் அச்சிட்டிருந்தது ஒரு மெகா எண்ணிக்கை அல்ல தான் ! இதழ் அறிவித்த தருணத்தில் ஒரு ஏகோபித்த ஆதரவெல்லாம் பதிவாகியிருக்கவில்லை எனும் போது, ஒரு மாமூலான ‘டெக்ஸ்’ பிரிண்ட்ரன் திட்டமிட தைரியம் இருந்திருக்கவில்லை ! Undoubtedly – “ரொம்ப ஆவேசப்பட்டுட்டியோ சூனா.பானா ?” என்று கொஞ்சமாய் வயிற்றில் புளியைக் கரைக்கவும் செய்திருந்தது தான் ! ஆனால் காத்திருந்த MAXI தயாரிப்பில் இந்த இதழ் நிச்சயமாய் பிரமிப்பூட்டும் என்று எனக்குப்பட்டது ! அச்சுத்துறையினில் எத்தனை அனுபவம் இருந்தாலுமே, புதிதாய் ஒரு சைசில் ; ஒரு layout-ல் ஒரு புக்கைத் திட்டமிடும் போது, பூர்த்தி செய்து அதனைக் கையில் ஏந்திப் பார்க்கும் வரையிலும், அது சார்ந்த மானசீக உருவகங்கள் எல்லாமே கொஞ்சம் முன்ன பின்ன தான் இருந்திடுவது வாடிக்கை !  ஆனால் இங்கு மட்டும் எனக்குள்ளான பட்சி செம உரக்கக் குரல் கொடுப்பது கேட்டது – இது ஷோக்கா சொக்க வைக்கும் ஒரு சொப்பன சுந்தரியாகிட தவறாதென்று ! மிகச் சரியாக அத்தருணத்தில் ஆச்சர்யமொன்று அரங்கேறியது – எனது திட்டமிடலுக்கு  உரமூட்டும் விதமாய் ! Would you watched it – ஆர்ட் பேப்பரின் விலைகள் மெள்ள மெள்ள குறையத் துவங்கின !! மறு நொடியே முதல் ரக பேப்பருக்கு ஆர்டர் – போட்டோம் “கா.க.கா”வுக்கு மேலும் புஷ்டி சேர்க்க உதவட்டுமே என்று !! அதுவுமே ஒரு காரணம் – உங்கள் கரங்களில் ஜொலிக்கும் பொழுது, அந்த இதழ் செம கனமாக இருந்ததற்கு  ! Add to that – மாக்சி சைசில் உங்களது குடும்ப போட்டோக்கள் முதல் பக்கத்தை மேற்கொண்டும் மெருகூட்ட – பேக்கிங்குக்கு முன்னே அடுக்கிக் கிடந்த புக்ஸைப் பார்த்த போது  ஜில்லென்று இருந்தது !! நிஜத்தைச் சொல்வதானால் – “கா.க.கா.” ரிலீஸ் கண்டதற்கு 5 நாட்கள் முன்னமே books ரெடியாகி விட்டிருந்தன ! ஆனால் இம்மாதத்து டெஸ்பாட்ச் 8 இதழ்கள் கொண்டதொரு மெகா முயற்சி என்பதாலும், ஈரோட்டில் உங்கள் முன்னே unveil செய்திடவும் வேணும் என்பதாலும் , புக்ஸை மூடாக்குப் போட்டு பத்திரப்படுத்தி வர நேரிட்டது ! வெளியே ஆபீஸ் ரூமில் வைத்திருந்தால், வரக்கூடிய வாசகர்களின் கண்களில் பட்டுவிடுமே என்ற பயத்தில், எனது ரூமுக்குள்  குவித்திருந்தோம் ! ‘ரெடியாகிடுச்சு ; ஆனா கண்ணிலே காட்ட வழியில்லை’ என்ற போது பொறுமை காப்பது ரொம்பவே படுத்தி எடுத்தது தான் ! At final ஈரோடும் வந்து, புக்ஸை ரிலீசும் செய்து , எனது எதிர்பார்ப்பினை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறிய  தருணத்தில், உள்ளுக்குள் ஒரு நூறு ரைஸ்குக்கர்களின் விசிலையும் விஞ்சும் நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது ! ஆனாலும் வெறும் பன்னிரெண்டே நாட்களில் கிட்டங்கியை கார்சனார் காலி செய்யுமொரு சூழல் புலருமென்று சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை ! நம்மாட்கள் நேற்று காலை தகவல் சொன்ன போது காது வரைக்கும் நீண்டது எனது புன்னகை !! THANKS A TON GUYS !!! 

ஒரு நூறு முறை சொன்னதே தான் ; மறுக்காவும் சொல்லாதிருக்க முடியவுமில்லை – இந்த வாசக வட்டமானது, இந்தியாவின் வேறு எந்தவொரு காமிக்ஸ் எடிட்டருக்கும், கனவில் மட்டுமே சாத்தியமாகிடக் கூடிய ஒன்றாக்கும் !! ! For definite – நம்மை விடவும்  எண்ணிக்கைகளில் மிகக் கூடுதலாய் ஹிந்தியில்…பெங்காலியில் விற்கிறார்கள் தான் ; ஆனால் நாம் முயற்சிக்கும் குரங்கு மார்க் பல்ட்டிக்கள் அவர்களுக்குத் துளி கூட பரிச்சயம் நஹி !! புது முயற்சிகளை ; ஆத்மார்த்தத் தேடல்களை இத்தனை வாஞ்சையோடு வரவேற்க இனியொரு அணி புதுசாய் நிலாவிலிருந்து, சந்திராயனில் புட்போர்ட் அடித்து வந்தால்  தானுண்டு ! If truth be told outlandish guys !!

And…and…நம்ம ஸ்பைடராரின் “THE BIG BOYS SPECIAL” கூட ரொம்ப காலம் ஸ்டாக்கில் இராது போலும் !! “கொரில்லா சாம்ராஜ்யம்” காலி ! மறுபதிப்பு மாயாவியின் முக்காலே மூணு வீசம் காலி ! லக்கி லூக் கணிச இதழ்கள் தரை தட்டும் நிலவரத்தில் !! “கதை சொல்லும்  காமிக்ஸ்”  – கிட்டத்தட்ட காலி ! டெக்சின் மேஜர் ஹிட் இதழ்களெல்லாமே இரண்டிலக்க எண்ணிக்கைக்கு நகர்ந்தாச்சு ; லாரன்ஸ்-டேவிட் புக்ஸ் nearly long previous ; க்ளாஸிக் இதழ்களின் கையிருப்புமே (வேதாளன் ; சார்லி) குறைஞ்சூ !! இத்தனைக்கும் இந்த 2 இதழ்களும் புத்தக விழாக்களுக்கு பயணித்திருக்கவில்லை !! Arresting reveal !!! 

மேற்படித் தகவல்கள் உங்களில் பெரும்பான்மைக்கு மட்டில்லா மகிழ்வினைத் தந்திடும் என்பதில் எனக்கு ஐயங்களே இல்லை ! நம் பொருட்டு மகிழ்ந்து, கூடி இழுக்கும் இந்தத் தேரின் வேகத்தினைக் கண்டு வியப்பது 99% எனில் – இன்னொரு ஒற்றைச் சதவிகிதத்துக்கோ – “ஆஹா…ஆஹா…ஸ்டாக் அவுட்டான சகலத்தையும் டிஜிட்டல் பிரிண்ட் போட்டு “சேவை” பண்ற வாய்ப்பு அமைஞ்சிட்டதே பெருமாளே…பெருமாளே..!!” என்று துள்ளிக் குதிக்கும் குஷி பிறக்குமென்பது உறுதி ! இங்கே சின்னதாய் ஒரேயொரு இடைச்செருகல் of us – காலியாகி விட்ட புக்ஸ் எவையேனும் உங்களுக்குத் தேவைப்பட்டால் பொறுமை ப்ளீஸ் – அவை சார்ந்த ஒரு குறிப்பிட்ட அளவிலான கோரிக்கைகள் வரப்பெறும் வேளையில், நிச்சயமாய் reprint செய்திடுவோம் ! And relaxation assured – விலைகள் நியாயமாகவே இருந்திடும் ! 

Transferring on – காத்திருக்கும் செப்டெம்பரின் இதழ்கள் சார்ந்த முதல் பிரிவியூ – பல்லடத்தில் பூரிப்பை ஏற்படுத்தத் தவறாதென்பேன் ! இதோ – பிரபஞ்சத்தின் புதல்வனின் நடப்பாண்டின் ஸ்லாட் – “மரணத்தின் நிறம் நீலம்” ! இரு தனித்தனி சாகசங்கள் ; ஆனால் தொடரும் ஒரு முடிச்சுடன் என்ற template இந்த ஆல்பத்துக்குமே பொருந்தும் ! Fantasy என்ற ஜானர் உங்களுக்கு பிரியமானதெனில் – தோர்கலும் அவரது பயணங்களும் உங்களை கட்டுண்டு வைத்திருக்கும் என்பது உறுதி ! இதோ – நமது சென்னை ஓவியரின் கைவண்ணம் + நமது கோகிலாவின் மெருகூட்டலுடனான முன்னட்டை ! And அந்த எழுத்துரு – நண்பர் ஜெகத்தின் கைவண்ணம் ! 

வழக்கம் போல உட்பக்கங்களில் சித்திரங்கள் ; வர்ணங்கள் என்று வசீகரிக்கின்றன ! புது வாசகர்களையுமே இந்த ஜானர் வசீகரிக்குமெனில் சூப்பர் ! அவ்வித casual வாசகர்களையும் கவர்ந்திட வேண்டுமென்பதற்காகவே ஒன்றுக்கு, இரண்டாய் இருந்த ஒரிஜினல் அட்டைப்படங்களை பயன்படுத்திட முனையவில்லை ! அவை இரண்டுமே ரொம்பவே வீக்காக தென்பட, புதிதாய் போட்டோம் இந்த டிசைனை – pointless to claim இன்னொரு தோர்கல் அட்டைப்படத்தின் தழுவலாய் ! So டெம்போவெல்லாம் வைத்துக் கடத்தியிருக்கோம் ; ஜெய் தோர்கல் !!

And போன வாரத்து அந்தக் கேள்விக்கான வோட்டெடுப்பில் ஒரு வேட்பாளர் க்ளியராக safe zone -ல் இருக்க, பாக்கி இருவருக்கு மத்தியில் குடுமிப்பிடி சண்டை நடக்காத குறை தான் ! Neck to neck ரேஸ் ! இன்னமும் நீங்கள் வோட்டுப் போயிருக்கா பட்சத்தில் – இதோ இன்னமும் வாய்ப்புள்ளது guys !! இதோ லிங்க் : https://strawpoll.com/Qrgebka1bZp

போன வாரம் மட்டுமே கேள்வியா – இதோ இப்போவுமே ஒரு வினா உள்ளது உங்களுக்கென ! Moreso – அந்தக் கேள்வி தொடர்பான இதழ் அடுத்த மாதம் ஆஜராகவிருப்பதால் :

லூட்டியடிக்கும் தாத்தாக்களின் மூன்றாம் ஆல்பம் அடுத்த மாதம் வெளிவரக் காத்துள்ளது ! ஸ்டெடியாக முன்னேறி வரும் இந்தத் தொடரினில் இப்போது வரை 7 ஆல்பங்கள் பிரெஞ்சில் உள்ளன ! இவர்கள் தொடரலாமா – வேணாமா ? என்பதல்ல எனது கேள்வி ; for definite இவர்கள் நம் மத்தியில் ஆஜராகியே தீருவர் ! My quiz is – ரெகுலர் அட்டவணையில் நடப்பாண்டைப் போலவே இவர்கள் தொடர்வது ஓ.கே.வா ? அல்லது – இவர்களை ஆன்லைன் மேளா தருணத்து ஸ்பெஷல் இதழ்களாய்க் கொண்டு செல்வது உத்தமமா ? தாத்தாக்களின் ஜாகஜங்களை நீங்கள் ரசிக்கிறீர்களா-அல்லது எனக்கோசரம் பொறுத்துக் கொள்கிறீர்களா ? பதில்ஸ் ப்ளீஸ் ?

Bye all….gather a sexy weekend ! Glimpse you around !