நண்பர்களே,
வணக்கம். வண்டி வண்டியாய் வந்து சேர்ந்திருக்கும் இதழ்களை வாசிக்கவும், அலசவும் இந்தக் குட்டிப் பதிவினை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், கொஞ்சமாய் மூச்சு விட்டுக்கொண்டு, ரிப் கிர்பி ஸ்பெஷலையும், செப்டெம்பரின் இதழ்களையும் காலத்தோடு ரெடி பண்ணும் வேலையைப் பார்த்திடுவேன் !! So இது உங்களுக்கான வேளையே guys !! பின்னணியினில் ஓசையின்றி 2024-ன் அட்டவணை சார்ந்த பதிவுகள் ஓடி வருவதால், இங்கே நான் சில final minute கேள்விகளை மாத்திரமே முன்வைப்பதாக இருக்கிறேன் ! அதற்கு முன்பாய் ஒரு பொதுவான observation !
“கார்சனின் கடந்த காலம்” பின்னிப் பெடல் எடுத்து வருகிறது ; BIG BOYS ஸ்பெஷல் மூட்டை மூட்டையாய் விற்பனை கண்டு வருகிறது ; “பேரிக்காய்ப் போராட்டத்துக்கு” பலத்த மவுசு உள்ளது ; “மந்திர மண்டலம்” நடப்பாண்டின் blockbuster !! மாயாவி சார் எப்போதும் போல ரகளை செய்து வருகிறார் & லக்கி லூக் கூட மறுபதிப்புத் தடங்களில் சிக்ஸர் அடித்து வருகிறார் ! இன்னொரு பக்கமோ “வேதாளருக்கு ஜே ; ரிப் கிர்பி வாழ்க ; வருங்கால அமெரிக்க ஜனாதிபதி சார்லி !!” என்றெல்லாம் traditional குரல்கள் ஒலித்து வருவதையும் கேட்டு வருகிறோம் ! So மேலோட்டமாய்ப் பார்த்தால், சத்தமேயின்றி “பெருசுகள் படையானது” நம் அணிவகுப்பை டெம்போ வைத்துக் கடத்தி விட்டது போலவே தோன்றலாம் ! வழுக்குப்பாறைகளிலிருந்தும், இன்ன பிற கி.நா.காதல் சேத்திரங்களிலிருந்தும் சிவந்த பார்வைகள் நம்மைத் துளைத்தெடுக்க முகாந்திரங்கள் மெய்யாலுமே உண்டு தானோ ? என்றும் படலாம் ! ஆனால், அட்டவணைப் பணிகளுக்குள் புகுந்திருக்கும் நொடியில் தான் தெரிகிறது – nothing also can additionally be further from the reality என்பது ! எப்படி என்கிறீர்களா ?
நம் மத்தியில் மறுபதிப்புகள் ரவுசு செய்து வரும் இந்த வேளையினில் – ரெகுலர் தடத்தில் புதியவர்களின் ஆதிக்கம் கிட்டத்தட்ட முழுமையடைந்திருப்பதை பாருங்களேன் :
*டேங்கோ புதியவரே !
*ஆல்பாவும் புதியவரே !
*ஏஜென்ட் சிஸ்கோ newcomer தான் !
*ரூபின் புது வரவே !
*தாத்தாஸ் புதியவர்களே !
*IR$ ரெம்போ புதுசு !
*(காத்திருக்கும்) நெவாடா செம புதுசு !
*ஜம்பிங் பேரவை ஸாகோரும் புதியவரே !
*(காத்துள்ள) மிஸ்டர் நோ கூடப் புதியவரே !!
*டெட்வுட் டிக் புச்சு !
*SODA சமீப வரவே !
So மெது மெதுவாய் ஒரு சமகால வாசிப்பின் பக்கமாகவும், நாம் பயணித்து வருகிறோம் – ரெகுலர் தடங்களிலாவது என்பது shapely noteworthy evident !
இன்றைக்கு நமது ரெகுலர் தட நாயகர்களில் டெக்ஸ் வில்லர் செம சீனியர் ; ditto with லக்கி லுக் & சிக் பில் & தட்டை மூக்கார் !! லார்கோ & தோர்கல் பத்தாண்டுப் பிரமுகர்கள் ; ப்ளூகோட் பட்டாளமும் அவ்விதமே ! And ரெம்போ …ரெம்போ ரெம்போ மூத்தவர் இளவரசி மாடஸ்டி மட்டுமே !
That implies – ரெகுலர் அணிவகுப்பினில் அடுத்த சில ஆண்டுகளுக்காவது இடம் பிடித்திடப் போகும் நாயகர்கள் யாரும் ‘திடு திடு’வென்று ஓட்டமாய் ஓடிப் போய் சாலையோரமாய் இருக்கக்கூடிய போன் பூத்தில் காசு போட்டு, காக்கா கலரிலான காலாவதியான இயந்திரத்தை டயல் பண்ணும் கொடுமைகளை இந்த AI தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க அவசியமிராது ! காலச் சக்கரத்தின் சுழற்சிக்கு கிஞ்சித்தும் அசராத ஜாம்பவான்களான டெக்ஸ் வில்லரையும், லக்கி லூக்கையும் தவிர்த்த பாக்கிப் பேர் அனைவருமே சுகருக்கு மாத்திரை தேடும் பார்ட்டிகளாகத் தென்படவே காணோம் ! இந்த மாற்றம் கொஞ்சம் சிந்தனைக்குப் பின்பானதும் தான் ; சில தொடர்கள் “மங்களம்” கண்டதன் பலனாய் நம் மீது திணிக்கப்பட்டதுமே தான் ! காரணம் எதுவாயினும் – இன்றைய நமது ரெகுலர் தடப் பயணமானது – “மாடுகள் மீது மோதாத ‘வந்தே பாரத்’ கோச்களில் !
அதே சமயம், ஒரு இணைத்தடத்தில் – க்ளாஸிக் நாயகர்கள் in corpulent bloom too !
முத்து காமிக்சில் எனது கணக்குப்படி வெளியான மொத்த வேதாளர் கதைகளே பதினாங்கோ ; பதினைந்தோ தான் ! ஆனால் 2022-ல் துவங்கிய SMASHING ’70s முதலாய் அதற்குள் நாம் பார்த்துள்ள வேதாளர் கதைகள் அதை விடவும் ஜாஸ்தி ! இன்னொரு பக்கமோ 36 ஆண்டுகளுக்குப் பின்பாய் சுஸ்கி * விஸ்கி சக்கை போடு போடுகிறார்கள் ! ஸ்பைடரார் on inquire of ஆஜராகி வருகிறார் ; இரத்தப் படலம் பற்றிச் சொல்லவே வேண்டாம் – மறுபதிப்புக்கு மறுபதிப்புக்கு மறுபதிப்பு என்று வண்டி ஓடி வருகிறது !
So – “இந்த அணி ; அந்த அணி ; பயசு-புச்சு” – என்ற பஞ்சாயத்துக்களுக்கெல்லாம் புகுந்திடாமல் ஒரு கழுகுப் பார்வையில் இந்தக் கள நிலவரத்தை பார்க்கும் போது – இனம்புரியா ஒரு குஷி மேலோங்குகிறது ! இதுவரைக்குமான இந்த 51 ஆண்டுகளில், இப்படியொரு share-ன் மத்தியினில் நாம் பயணித்துள்ளோமா ? – தெரியலை ! பழசை நாம் ஆதரிப்பதில் புதுமை ஏதுமில்லை தான் ; ஆனால் புதுசாய் ஒட்டு மொத்தமாய் அரவணைக்கும் இந்த வேளை appears to be like shapely modern !!
இது பற்றிய உங்களின் பார்வைகள் என்னவோ guys ? இது தான் இன்றைய கேள்வி # 1. Please imprint : “பழசு தேவலாமா – புதுசு தேவலாமா ?” என்பதல்ல எனது கேள்வி guys ; இரண்டுமே கலந்தடித்துச் செல்லும் இந்த நாட்கள் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்னவென்று மாத்திரமே வினவுகிறேன் !
கேள்வி # 2 : காத்துள்ளது லயனின் நாற்பதாவது ஆண்டெனும் போது 2024-ன் அட்டவணையில் நிறையவே கவனம் தந்திட எண்ணுகிறேன் ! So புதியவர்களில் யாரேனும் ஓரிருவரைக் கழற்றி விட வேண்டியிருக்குமா ? அல்லது ஆணி பிடுங்காது நிதானம் காத்தால் போதுமா ? All factual with the current line-up ?
கேள்வி # 3 : சுஸ்கி -விஸ்கி : நோஸ்டால்ஜியா படலத்தினை தாண்டியாச்சு ; முன்னே மினி-லயனில் வெளியான 3 கதைகளையும் மறுபதிப்பில் பார்த்தாச்சு & பற்றாக்குறைக்கு 1 புதுசையும் பார்த்தாச்சு ! இனி இவர்களோடு தொடர்ந்து பயணிப்பதாயின் – புதுக் கதைகளே ! சொல்லுங்களேன் மக்களே – இந்தச் சுட்டிகளும், பெருசுகளும் தொடரலாமா ?
கேள்வி # 4 : லயனின் மைல்கல் ஆண்டினில் நீங்கள் பார்க்க விரும்பக்கூடிய மறுபதிப்பு என்றால் எதனைச் சொல்வீர்களோ ? ஒரேயொரு சாய்ஸ் மாத்திரமே ப்ளீஸ் !
கேள்வி # 5 : ரிப்போர்ட்டர் ஜானி….. ரூபின் …..SODA ….மூவருமே அவரவர் பாணிகளில் செம offbeat நாயகர்ஸ் / நாயகி ! இவர்கள் மூவரையும் ஒரே ஆண்டில் ; ஒரே அட்டவணையில் நுழைப்பது லைட்டாக இடியாப்ப overkill போல படுகிறது ! 2024-க்கு மூவரில் ஒரேயொருவரை மட்டும் ஓரம் கட்டுவதாயின் – யாரை நோக்கி விரல் நீட்டுவீர்களோ ?
கேள்வி # 6 : லயனின் ஆண்டுமலருக்கென பெரூசா பட்ஜெட் போடலாமா ? என்ற மஹாசிந்தனை ஓடி வரும் ருணத்தில் சற்றே வியப்பூட்டும் தகவல் ஒன்று !
‘தல’ 75 வது ஆண்டிது என்பதை நாமறிவோம் ! இங்கே நாம் அதற்கென 700 பக்கங்களில் ; 4 விதக் கதைகளோடு THE SUPREMO SPECIAL ரெடியாவதும் தெரிந்ததே ! எனக்கோ, போனெல்லி இதெற்கென என்ன திட்டமிட்டிருப்பரோ ? என்ற குறுகுறுப்பு ! கொஞ்ச மாதங்கள் முன்னமே வினவியிருந்தேன் ; தகவல் கிட்டியிருக்கவில்லை ! சில தினங்களுக்கு முன்னே குட்டியான அறிவிப்பாய் வந்தது – டெக்சின் இதழ் # 755 அக்டொபர் முதல் தேதிக்கு வரவுள்ளது – 132 பக்கங்களில் ஒரு வண்ணத்திலான ஒன்-ஷாட் சாகசமாக என்று ! ‘தல’ ஆண்டுமலர் # 75 இதழும் இதுவே தான் போலும் !
பூசாரியே சைக்கிளில் போகிறச்சே பெருச்சாளி புல்லெட்டில் போகுதோ ? என்ற எண்ணத்தினைத் தவிர்க்க இயலவில்லை ! So ரெம்போ ஊடு கட்டி அடிக்காமல், லயன் ஆண்டுமலர் # 40-க்கொரு practical பட்ஜெட் சொல்லுங்களேன் – பார்க்கலாம் ?
Bye guys….செப்டெம்பர் இதழ்களினில் பணியினைத் தொடர நடையைக் கட்டுகிறேன் ! Occupy a stress-free weekend ; stumble on you round !
மக்களே….இந்த போட்டோவுக்கும், தலைப்புக்கும் சம்பந்தமே கிடையாதுங்கோ ! |