நண்பர்களே,
வணக்கம். மெகா டெக்ஸ் பணிகளை உருண்டு, புரண்டு ஒரு வழியாய் கரை சேர்த்தாச்சு ! 700 பக்கங்களாக துவங்கிய திட்டமிடல் 712 ஆக முன்னேறி, இப்போது 720 என்று நிறைவடைந்துள்ளது ! அதில் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் எனது பேனாவிலிருந்து எனும் போது, திருவாளர் நாக்கார் தெருவைக் கூட்டிக் கொண்டு கிடப்பதில் வியப்புகளில்லை தான் ! And அச்சும் முடிந்து, சகலமும் நாளை பைண்டிங் செல்கிறது ! அங்கே காலில் வெந்நீரை ஊற்றாது புக்ஸை நிறைவாய் முடித்து வாங்கிட இயலும் தருணத்தில் டெஸ்பாட்ச் இருந்திடும் – so அதுவரையிலும் பொறுமை ப்ளீஸ் guys !
And இம்மாதத்தின் இன்னொரு டெக்ஸ் சாகசமும் கூட திங்களன்று அச்சுக்குச் செல்லவிருக்கிறது – நம்ம V காமிக்சின் உபயத்தில் ! சகோதரனின் சகாப்தம் – டெக்சின் அண்ணாரின் கதை ! பென்சில் மீசையும், சாந்தமான முகமுமாய் காட்சி தரும் சாம் வில்லரோடு பயணிக்க, இந்த மாதத்து V பயணச்சீட்டினை வைத்துக் காத்துள்ளது ! இதோ – ஒரிஜினல் அட்டைப்படமும், உட்பக்க பிரிவியூவும் :
மறுக்கா நினைவூட்டி விடுகிறேன் folk ; இது V காமிக்சின் வெளியீடு ! So அதற்கான இறுதி க்வாட்டர் சந்தா செலுத்தி விட்டீர்களா ? என்று ஒருவாட்டி உறுதி செய்து கொள்ளுங்களேன் ப்ளீஸ் ? இன்னமும் செய்திருக்கவில்லை எனில் – இதோ உள்ளது அதற்கான விபரம் :
*ரெகுலர் சந்தாக்களில் உள்ளோர் எனில் : ரூ.325
*அல்லாதோர் – ரூ.425
Transferring on, அக்டோபரின் இதழ் # 3 – நான் ரொம்பவே எதிர்பார்த்திடும் தாத்தாக்கள் படலம் ! இதோ – லூட்டியடிக்கும் பெருசுகளின் மூன்றாவது ஆல்பத்தின் பிரிவியூ :
Yet again அட்டைப்படத்துக்கு ஒரிஜினல் டிசைனே – வண்ணச் சேர்க்கையில் மட்டுமே மாற்றத்துடன் ! கதைத்தலைப்பின் எழுத்துரு – நண்பர் ஜெகத்தின் ஜாலம் ! And கதையின் ஓட்டத்தைப் பொறுத்தவரைக்கும் வசன நடை எப்போதும் போலவே raw ஆகவே இருந்திடவுள்ளது ; பிரிவியூ பக்கமே அதை பறைசாற்றிடுவதைப் பார்த்திடலாம் ! ‘இதை இன்னும் கொஞ்சம் நாசூக்காய் கையாண்டிருக்கலாமே ?’ என்ற விமர்சனங்கள் வருமென்பதை யூகிக்க முடிந்தாலும், இந்தத் தொடரின் தன்மைக்கும், கதாப்பாத்திரங்களின் இயல்புக்கும் – ‘உள்ளது உள்ளபடியே” என்ற பாணி தான் suit ஆகுமென்பது எனது நம்பிக்கை ! அது மாத்திரமன்றி, “18+க்கான வாசிப்பு” என்ற பரிந்துரை சகிதம் வந்திடவிருக்கும் ஆல்பத்துக்கு வசன பாணியில் சமரசம் செய்திட அவசியங்களும் இராதென்பது எனது திண்ணமான எண்ணம் ! So முன்கூட்டியே be ready ப்ளீஸ் !
ஒன்றுக்கு இரண்டாய் ‘தல’ ஆல்பங்கள் அதிரடியாய் களமிறங்கும் மாதத்தில், பொதுவாய் வேறெந்த இதழ் வெளியானாலும் விற்பனையில் சட்னி ஆவது வாடிக்கை ! அது தெரிந்திருந்தும், ஒன்றுக்கு மூன்றாய் பெருசுகளை இம்மாதம் களமிறக்கி விட்டுள்ளேன் ! “இழக்க ஏதுமில்லை” என்பதையே வாழ்க்கையின் தாரக மந்திரமாய்க் கொண்டு பயணிக்கும் பெருசுகள், இந்த மோதலில் இருந்து எவ்விதம் வெளிப்படுகிறார்கள் என்று பார்ப்பதே இம்மாதத்தின் எதிர்பார்ப்புகளுக்குள் எனக்குப் பிரதானமானது ! பார்ப்போமே !!
இம்மாதம் இன்னொரு இதழும் உண்டு ; and அதுவும் வண்ண இதழே ! “பேய் புகுந்த பள்ளிக்கூடம்” என்ற 32 பக்க டைலன் டாக் கலர் த்ரில்லர் தான் அது ! சந்தாக்களோடு நாம் பிராமிஸ் செய்திருந்த 4 விலையில்லா இதழ்களின் வரிசையில் இது # 2. மீதமிருக்கும் இரண்டுமே ‘டெக்ஸ்’ கலர் மினிஸ் – for November & December ! அமானுஷ்யங்களை ஆய்வு செய்திடும் இந்த புதிர் ஹீரோவின் லேட்டஸ்ட் பாணியிலான கதை இது ; ரொம்பவே crisp கதைக்களம் + சித்திரங்கள் + கலரிங் என வசீகரிக்கிறது ! As fashioned இங்கே லாஜிக்குக்கு பெருசாய் இடம் நஹி தான் – ஆனால் மின்னலாய்ப் பறக்கும் இந்த 32 பக்க ஆல்பத்தை மறுபடியும் வாசிக்கத் தோன்றாது போகாதென்பேன் !
And that winds up the October previews !!
இதோ – 2 வாரங்களுக்கு முன்னே கேட்டிருந்த மறுபதிப்புகள் சார்ந்த கேள்விக்கான உங்களின் பதில்கள் !!
80 + 47 = 127 பேர் “வாசிப்பும் உண்டு” என்று பதிலளித்திருப்பதில் மெய்யாலும் எனக்கு வியப்பே ! And 176 பேர் இதனில் பொறுப்பாய் வோட்டளித்திருப்பதை பார்க்கும் போது, the ballotstands credible ! இந்த பதிலானது தானாய் எனது அடுத்த கேள்வியையும் வரவழைக்கிறது !
இதோ இந்த லிஸ்டை சித்தே பாருங்களேன் guys :
- லார்கோ வின்ச்
- வெய்ன் ஷெல்டன்
- ஜில் ஜோர்டன்
- மேஜிக் விண்ட்
- டைலன் டாக்
- ஜூலியா
- டயபாலிக்
- டெட்வுட் டிக்
- தோர்கல்
- ப்ளூகோட்ஸ் பட்டாளம்
- ஜானதன் கார்ட்லேண்ட்
- கமான்சே
- ட்யூக்
- ஜெரெமியா
- பெளன்சர்
- Smurfs
- லியனார்டோ தாத்தா
- ரின்டின் கேன்
- மேக் & ஜாக்
- கர்னல் க்ளிப்டன்
- தாத்தாஸ்
- ஏஜென்ட் சிஸ்கோ
- C.I.A ஏஜெண்ட் ஆல்பா
- SODA
- டிடெக்டிவ் ரூபின்
- டேங்கோ
- ஸாகோர்
- நெவாடா
- அண்டர்டேக்கர்
- ரிங்கோ ஸ்டார்
- ஸ்டெர்ன்
- I.R.$
- LADY S
- மிஸ்டர் நோ
- சுட்டிப் புயல் பென்னி
- கார்ட்டூன் – “அட மொக்கை போடாதேப்பா” என்று சொல்லி விட்டீர்கள் !
- எதிர்கால அபோகாலிப்ஸ் தொடர் – “அட நீ ஓரமா போவியா ? ஒரு ஜெரெமியாவே போதும் நைனா” என்று தீர்ப்புச் சொல்லி விட்டீர்கள் !
- டார்க் காமெடி பாணிகள் – ‘என்னமோ நீ சொல்றே…அதுக்கோசரம் படிக்கிறோம்” என்று புரிய வைத்து விட்டீர்கள் !
- கி.நா.ஸ் – ‘அடி வாங்காம ஓடிப்புடு !’ என்று அன்பாய் எச்சரித்து விட்டீர்கள் !
- Checklist – “புடிக்கும் ; ஆனா விற்காது !” என்று மண்டையில் குட்டுடன் சொல்லியாச்சூ !