நண்பர்களே,
வணக்கம். தீபாவளியும் வந்து போயாச்சு ; பட்டாசுகளையும் வெடித்து முடித்தாச்சு ; பட்சணங்களை வீர வரலாற்றின் லேட்டஸ்ட் அத்தியாயமாகவும் ஆக்கியாச்சு ; and இதோ – மறுக்கா அதே செக்குமாட்டு இயல்புக்கும் திரும்பியாச்சு ! இப்டிக்கா இன்னும் ஒரு மாசத்தை ஒட்டிப்புட்டால், அப்புறம் – “கிருஸ்துமஸ் வரப் போகுதுடோய் ; புது வருஷம் பொறக்கப் போகுதுடோய்” என்று அடுத்த உருட்டை ஆரம்பித்து விடலாம் ! அதன் பின்பாய் பொங்கல் !! வாழ்க்கையே ஒரு வட்டமென்று வெள்ளித்திரையின் மூதறிஞப் பெருமக்கள் சொன்னது இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் போலும் !!
நம்மைப் பொறுத்தவரைக்கும், 2 heavyweight நாயகர்களின் அதகளத்துடனான தீபாவளி போட்டுத் தாக்கியிருக்க – மெது மெதுவாய் நடப்பாண்டின் இறுதி மாதம் நோக்கிய நமது பயணத்தினை அரங்கேற்றி வருகிறோம் ! உங்களில் எத்தனை பேர் டைகராருடன் முரட்டுத் தூக்கங்களைப் போட்டீர்களோ தெரியாது ; எம்புட்டு பேர் இளம் ‘தல’யை தலைமாட்டில் வைத்தபடிக்கே குறட்டைகள் விட்டீர்களோ – தெரியாது ; ஆனால் நம்மளவில் இந்த ஜாம்பவான்களுக்கு மத்தியிலான ரேஸில் Younger Tex முன்னணியினில் இருக்கிறார் ! அந்த 6 அத்தியாய தெறி சாகசமானது இங்கு பெற்றிருந்த rave evaluations-களைப் பார்த்த போதே புரிந்தது – இந்த இதழ் சூப்பர் ஹிட் என்று ! But unexcited – பத்தாண்டுகளுக்குப் பின்பாய் “உள்ளேன் ஐயா” போட்டிருக்கும் இளம் டைகர் இந்த ரேஸில் முந்திடக்கூடும் என்ற சின்ன எண்ணமிருந்தது என்னுள் ! Alas – ‘எதிர்ப்படுவோர் யாராக இருந்தாலும் சப்பளித்து விட்டு நகர்ந்து கொண்டே இருப்பேனாக்கும் !’ என்ற டெக்சின் முழக்கத்தின் முன்னே இளம் வேங்கையாரும் சித்தே வழி விடத்தான் வேண்டியிருக்கிறது ! So “அதிகாரி பாயாசம்” என்பதெல்லாமே “அதிகாரி பாசம்” என்ற வாஞ்சையின் மாறுவேஷமே என்பது சந்தேகமற இம்முறை நிரூபணமாகியிருக்க, THE SIXER SPECIAL leads the November tear ! இங்கே சின்னதொரு இடைச்செருகலும் of us :
ஒவ்வொரு மாதமும், புக்ஸ் தயாரான நொடி முதலாய், அவற்றை ஒருவாட்டி அழகாய்ப் புரட்டி விட்டு, அடுத்த மாதத்தின் பணிகளுக்குள் ஆழ்ந்திடுவதே எனது வாடிக்கை ! உங்களின் ஆன்லைன் ஆர்டர்கள் ; ஏஜெண்ட் ஆர்டர்ஸ் என்ற சகலத்தையும் நம்மாட்களே பார்த்துக் கொள்வார்கள் ! ஆனால் இம்முறையோ எனக்குள் ஒரு curiosity – ‘தல’ vs ‘தளபதி‘ என்ற போட்டியில் ஆர்டர்கள் எவ்விதம் கிட்டுகின்றன ? என்பதை அறிந்திட ! So ஒரு மூணு நாட்களுக்கு ஆர்டர்களையெல்லாம் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! And sure – போன பதிவினில் சொன்னது போலவே தீபாவளிக்கு முன்பான 4 நாட்களிலும், டெக்ஸ் + டைகர் இதழ்கள் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தன ! ஆனால், V காமிக்சில் வந்திருந்த “வன்மேற்கின் அத்தியாயம் இதழ் # 4“-க்கு கிட்டியிருந்த ஆர்டர்ஸ் பிம்பிலிக்கா பிலாக்கி ரேஞ்சே தான் ! தொண்ணூற்றி சில்லறை இதழ்கள் டெக்சிலும், டைகரிலும், ஆன்லைனில் ஆர்டராகியிருக்க, “மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” பெற்றிருந்ததோ வெறும் 8 பிரதிகளுக்கான ஆர்டரினை மட்டுமே !
Neatly-known person energy சற்றே குறைச்சலாய் கொண்டிருக்கும் அத்தனை நாயக / நாயகியரையும் 2024-ன் அட்டவணையினில் waiting லிஸ்டில் கொண்டு அமுக்கியதில் நண்பர்கள் நிறையப் பேருக்கு நிறைய கடுப்ஸ் இருந்திருக்கும் என்பதில் no secrets and tactics ! ஆனால் எனது அந்தத் தீர்மானத்தின் பின்னணியினில் இருந்தது இத்தகைய நிகழ்வுகளில் கற்றுக் கொண்டிருந்த பாடங்கள் மாத்திரமே ! கடைக்குப் போய் வாங்கும் நண்பர்களும் சரி, ஆன்லைனில் அந்தந்த மாதங்களில் வாங்கிடும் அன்பர்களும் சரி – கொஞ்சமே கொஞ்சமாய் ரெண்டாம் நிலையில் இருக்கக்கூடிய நாயகர்களின் ஆல்பங்களுக்கு கூட நாசூக்காய் “NO” சொல்லி விடுகின்றனர் ! அதன் பலனாய் அந்த இதழ்களெல்லாமே கையில் தேங்கி விடுகின்றன ! So மிஸ் பண்ணிட சாத்தியமேபடாதென்ற ரகத்திலான இதழ்களையாய் தேடிப்பிடித்து 2024-ன் அட்டவணையின் ரெகுலர் தடத்தில் புகுத்தியிருப்பது a step in this route ! And இனி வரும் காலங்களில் மாதா மாதம் “எதை skip செய்யலாம் ?” என்ற கேள்விகளுக்கு இடமே தரப்படாதென்ற தீர்மானத்தில் பிறந்துள்ளதே ROUTE 2024 ! வாசிப்பில் ஒரு இலகுத்தன்மையும், சுவாரஸ்யமும் ஒட்டிக் கொள்வதன் சௌஜன்யங்கள் என்னவென்பதையும் ; “வாங்குறோம்-படிக்க மாட்டேங்கிறோமே !” என்ற குறுகுறுப்பின்றிப் பயணிப்பதன் சுகங்களையும் 2024-ன் பயணம் நமக்கு உணர்த்தும் என்ற திட நம்பிக்கை எனக்குள்ளது !
Intelligent on, 2024 -ன் கி.நா. குட்டித்தடத்தில் இதழ் # 3 ஆக இடம் பிடிக்க வேண்டியது நவீன வெட்டியான் ஸ்டெர்ன் தானா ? அல்லது கமர்ஷியல் கி.ந.வான “துணைக்கு வந்த மாயாவி” இதழா ? என்ற கேள்விக்கு 150 நண்பர்கள் பதில் தந்துள்ளனர் ! And 91 பேர் வெட்டியானுக்கு தங்களது ஓட்டுக்களை போட்டு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் ! So அந்த கமர்ஷியல் கி.நா. ஏதேனும் ஆன்லைன் மேளா ஸ்லாட்டினை தேடிக் கொள்ள வேணும் போலும் !
And 2024-ன் Invent My Own Mini சந்தா (MYOMS) பிரத்யேக தடத்தினில் நீங்கள் பார்த்திட விரும்பும் 4 இதழ்கள் பற்றிக் கேட்டிருந்தோமல்லவா ? விறுவிறுப்பான வோட்டிங் இன்னமும் அங்கே தொடர்ந்திடுகிறது & ஒற்றை நாயகர் மட்டும் இது வரைக்கும் தொடர்ச்சியாய் முன்னிலையில் இருந்து வருகிறார் and அவர் தான் CIA ஏஜென்ட் ஆல்பா ! 2 to 4 வரையிலான மீத positions ரொம்பவே சின்ன வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்திடுகின்றன & எந்த நொடியிலும் அந்த வரிசைதனில் மாற்றம் நிகழலாம் தான் போலும் ! இதோ – இன்னமும் வாக்களித்திருக்கா நண்பர்களின் பொருட்டு அந்த hyperlink இன்னொருமுறை : https://strawpoll.com/e7ZJGKeK5y3
Further down the line, டிசம்பரில் மொத்தம் 5 இதழ்கள் இருந்திட வேணும் :
*ரிப்போர்டர் ஜானி சாகசம் – “ஜானிக்கொரு தீக்கனவு”
*TEX – “உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி !”
*V காமிக்ஸ் – ஏஜென்ட் ராபினின் “கொலைநோக்குப் பார்வை“
*ஏஜெண்ட் சிஸ்கோ தோன்றும் “கலாஷ்னிகோவ் காதல்”
*லயன் கிராபிக் நாவல் – “காலனின் கால்தடத்தில்”
எனக்கே இது லைட்டாய் overkill போல தோன்றுகிறது என்பதை மறுக்க மாட்டேன் ! ஆண்டின் பிற்பாதியில் ஈரோடு ஸ்பெஷல்ஸ் ; அப்புறமாய் டெக்சின் பிறந்த நாள் ஸ்பெஷல் & அதன் பின்னே டபுள் தீபாவளி ஸ்பெஷல்ஸ் என்ற திட்டமிடல்கள் சரமாரியாய்த் தொடர்ந்திருக்க, அட்டவணையினை இம்மியும் மாற்றியமைக்க வழியில்லாது போனது ! அதன் பலனாய் இந்த டிசம்பரில் 5 என்ற குவியல் !! வாசிப்பதில் நீங்கள் சமாளித்து விடுவீர்கள் என்றாலும், கடைகளில் விற்பனைக்கு வாங்கிடும் நமது முகவர்கள் இதனில் கொஞ்சமாய் தடுமாறுவார்கள் என்பது மாத்திரம் உறுதி ! So உங்களுக்கு ஓ.கே. எனில் இந்த ஐந்தில் விலை கூடுதலான ஏஜெண்ட் சிஸ்கோவை மட்டும் டிசம்பர் 20 வாக்கில் தனியாக அனுப்பிடலாமா ? என்ற எண்ணம் ஓடி வருகிறது ! உங்களின் recommendation என்னவோ guys ? சூட்டோடு சூடாய் போட்டுத் தாக்கி விடலாமா – அல்லது சிஸ்கோ மாத்திரம் தாமதித்து வரட்டுமா ?
சிஸ்கோ பணிகளுக்குள் புகுந்திட நான் கிளம்பும் முன்பாக சில updates :
எங்களுக்கு ரெம்போவே அருகாமையில் உள்ள விருதுநகரில் 2 தினங்களுக்கு முன்பிலிருந்து புத்தக விழா துவங்கியுள்ளது and அங்கே நமது ஸ்டால் நம்பர் 26 ! தினமும் கணிசமான பள்ளி மாணாக்கர் வருகை தந்து கொண்டிருக்க, ஆபத்பாந்தவர்களாய் கைகொடுத்து வருவன – ஐம்பது ரூபாய்க்கு உட்பட்ட விலைகளிலான நமது இதழ்களே ! கொஞ்சமாய் காசோடு வரும் பிள்ளைகள், ஆசை தீர மற்ற கலர் இதழ்களை நாள்தோறும் புரட்டி ரசிக்கத் தவறுவதில்லை ! “வீட்டிலே சொல்லி அந்த புக்ஸ் வாங்கி தர கேப்போம் !” என்றபடிக்கே பிள்ளைகள் கிளம்பும் போது சற்றே நெருடலாக இருப்பதை மறுக்க மாட்டேன் ; however சுடும் யதார்த்தங்களை மறப்பதற்கும் இல்லையே !
And காத்திருக்கும் 21 தேதி முதலாய் சேலத்திலும் புத்தக விழா துவங்கிடுகிறது ! போன வருஷம் தூள் கிளப்பிய அதே இடத்தில் தான் இம்முறையும் விழா நடந்திடவுள்ளது எனும் போது செம ஆர்வமாய்க் காத்துள்ளோம் ! நமது நண்பர்களில் கணிசமானோர் சேலத்திலும், சுற்று வட்டாரங்களிலும் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் போது வரும் காலங்களில் வாசக சந்திப்பினை அக்கட ஒருவாட்டி முயற்சிக்கலாம் என்றே தோன்றுகிறது ! பார்க்கலாமே !!
இது சற்றே சோகமானதொரு update ! பிராங்கோ-பெல்ஜிய படைப்பாளிகளுள் முக்கியமானவரான Bob De Groot இயற்கை எய்தியுள்ளார் ! க்ளிப்டன் கதைகளிலும் சரி, லியனார்டோ தாத்தாவின் கதைகளிலும் சரி, இவரது கைவண்ணங்களை நாம் ரசித்துள்ளோம் ! RIP sir ….!
Bye all….look for you around ! Like a relaxing weekend !
P.S : இதோ – நவீன வெட்டியான் கெலித்துள்ள வாக்கெடுப்பின் cloak shot :