தி சென்னை எக்ஸ்பிரஸ் ’24

 டின்டினியன்ஸ்,

வணக்கம். ஒற்றை வாரத்தில் இது மூன்றாவது தபா – நமது ஆபீஸ் அல்லோலம் + கல்லோலம் பார்த்திடுவதற்கு ! போன சனியன்று சிஸ்கோ & விங் கமாண்டர் ஜார்ஜ் புறப்பட்டதெல்லாம் நிலாவுக்கு ஆர்ம்ஸ்ட்ராங் கிளம்பிய காலமாட்டம் ஏதோ ஒரு யுகமாய்த் தென்பட, தொடர்ந்த புதனன்று டின்டின் + இளம் டெக்ஸ் + லார்கோ + கலர் வேதாளர் என்ற கூட்டணியும் கிளம்பியிருந்தது ! And அது பற்றாதென்று, நேற்று மாலை கிளம்பியுள்ளது – சென்னை எக்ஸ்பிரஸ் ’24 !! 

சென்னைப் புத்தக விழா சார்ந்த பேக்கிங் பணிகள் டிசம்பரில் துவங்கிய போதே – “என்ன இல்லை ?…என்ன அத்தியாவசியத் தேவை ?” என்றொரு பட்டியல் போட்டிருந்தோம் ! மாயாவியின் கையிருப்பினை கூட்டுவது ; கொஞ்சமாகவேணும் லாரன்ஸ்-டேவிட் & ஜானி நீரோ மறுபதிப்புகளைத் தயார் செய்வது ; லயனின் 40 வது ஆண்டினில் கூர்மண்டையர் ஸ்பைடராருக்கும் இடம் தருவது – என்று தீர்மானித்தோம் ! அப்புறம் சென்னையின் செல்லப்பிள்ளையான லக்கி லூக்கை தேற்றுவது தான் கடினம், அவரது ஆல்பங்களின் கையிருப்புகளையாவது இயன்றமட்டுக்குக் கூட்டுவது என்றுமே தீர்மானித்தோம் ! அப்புறம் பள்ளிப்பசங்களிடம் செம ஹிட்டடித்துள்ள அந்தச் சிறுத்தை மனிதனின் அடுத்த ஆல்பத்தை ரெடி செய்வதென்றும் குறித்துக் கொண்டேன் ! 

‘ஒரு மாசம் இருக்குல்லே…பாத்துக்கலாம் ; ரெடி பண்ணிக்கலாம்‘ என்று தகிரியமாய் லிஸ்டை டோட்டல் போட்டால் 9 இதழ்கள் தேறியது ! அந்த நொடியினில் எனக்குத் தெரியாது – விங் கமாண்டர் ஜார்ஜ் குனிய வைத்துக் குமுறுவாரென்பது ! So அதற்கென செலவாகிய பொழுதுகளை உபரியாகக் கருதி, தி சென்னை எக்ஸ்பிரஸ் ’24  என்று இந்தத் திட்டமிடலுக்குப் பகுமானமாய் பெயரும் இட்டு விட்டேன் ! “அம்புட்டும் மறுபதிப்புகள் தானே ; இப்டிக்கா பிரிண்ட் பண்ணி, அப்டிக்கா சென்னைக்கு அனுப்புறோம் ” என்ற எண்ணமும் உரம் சேர்த்தது எனக்கு ! ஆனால் பெயரளவிற்குத் தான் இவை மறுமதிப்புகளே தவிர, டிஜிட்டல் யுகம் துவங்கிய பிற்பாடு இந்த இதழ்களுள் எவற்றையுமே நாம் வெளியிட்டிருக்கவில்லை ! எல்லாமே நெகட்டிவ் எடுத்து பிரிண்ட் செய்திடும் அலாவுதீன் காலத்து டெக்நாலஜியின் பிள்ளைகள் என்பதால் – ஒன்று பாக்கியில்லாமல் அத்தனையையும் பிள்ளையார் சுழியிலிருந்து துவக்கிடும் அவசியம் எழுந்து நின்றது ! So 848 பக்கங்களை afresh தமிழில் DTP செய்வதிலிருந்து துவங்கிட வேண்டியிருந்தது !! And மறவாதீர்கள் ப்ளீஸ் – இந்தக் கூத்துக்கள் சகலமுமே டின்டின் & புதிய இதழ்களின் பணிகளுக்கு மத்தியிலேயே தான் டிராவல் செய்தும் வந்தன !! முன்னுரிமை – புதுசுகளுக்கு ; எக்காரணம் கொண்டும் DTP ; பிராசசிங் ; அட்டைப்படம்ஸ் ; அச்சு ; பைண்டிங் – என எந்தவொரு இடத்திலும் புதுசுகள் பின்னுக்குப் போயிடலாகாது என்பதை மட்டும் நம்மாட்களிடம் உரக்கச் சொல்லியிருந்தேன் !  

சத்தியமாய்த் தெரியலை – எங்கிருந்து இவ்வளவு பணிகளை நம்மாட்கள் முடித்தார்களென்று !! மொத்தம் 5 டிசைனர்கள் – உட்பக்கங்கள் ; அட்டைப்படங்கள் – என்று புகுந்து விளையாட கிட்டத்தட்ட வாரத்துக்கு மூன்று புக்ஸ் பிரிண்டிங்குக்கு துள்ளிக் குதித்துக் கிளம்பியிருந்தன !! இதற்கெல்லாம் மத்தியில் மொழிபெயர்ப்பின் மொக்கைகளைப் பூசி மெழுகிடும் பணிகள் எனக்கு !! லாரன்ஸ்-டேவிட் மத்தியில், சமீப காலத்து இதழ்களின் சகலத்திலும் “லாரன்ஸ் is the சீனியர் ; so டேவிட் அவரை மருவாதியோடு சரவணர்ர்ர்ர்ர்ர்” என்று விழிக்கும் விதத்தில் அமைத்திருக்கிறோம் ! அதே போலவே லக்கி லூக் – ஜாலி ஜம்ப்பர் மத்தியிலான உரையாடல்களில் மரியாதை குறைச்சல் இல்லாதவாறு எழுதியும் வருகிறேன் ! ஆனால் அந்நாட்களின் இந்த இதழ்களில் – டேவிட் ஜகஜமாய்  ‘என்னடா தம்பி‘ ரேஞ்சுக்கு லாரன்ஸை கூப்பிடுவதும், ஜாலி ஜம்ப்பர் – மொதலாளியை வா-போ பாணிகளில் விழிப்பதும் என்னைத் திரு திருவென விழிக்கச் செய்தன ! சரி, ரைட்டு,,,அவற்றைத் திருத்துவோம் என்றபடிக்கே உள்ளே புகுந்தால், சலூன்களில் ஒலிக்கும் பாடல்களில் “அழகான பொண்ணு தான் ; அதுக்கேத்த கண்ணு தான்” ரேஞ்சுக்கு முந்தைய மொழியாக்கங்கள் இருந்தன ! சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த கவிஞர் முத்துவிசயனாருக்கு இது அடுக்குமா ? அல்லது பொறுக்குமா ? So “ஒரு நாள் போதுமா ? இன்றொரு நாள் போதுமா ? நான் கரெக்ஷன் போட இன்றொரு நாள் போதுமா ?” என்று ‘திருவிளையாடல்’ பாலையா ரேஞ்சுக்கு களமிறங்க நேரிட, அடுத்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட பாதிக் கதைகளைத் திருத்தி எழுதும் படலம் அரங்கேறியது !! ரைட்டு, நமது டிரேட்மார்க் குட்டிக்கரணங்கள் ஆச்சு ; பிரிண்டிங்கும் ஆச்சு ; ஆனால் உச்ச ரஷில் உள்ள சிவகாசியில் இவற்றை பைண்டிங் செய்து வாங்கணுமே ?!!! அங்கு தான் புனித மனிடோ நமது பைண்டருக்கு இறகுகளை நல்கினார் – பறந்து, பறந்து பணியாற்றும் பொருட்டு !! So “அரக்கன் ஆர்டினி” & ஜானி in ஜப்பான்” & “சிறுத்தை மனிதன்” மாத்திரம் நான் ஊருக்குத் திரும்பிய பிற்பாடு கரெக்ஷன் பார்த்த கையோடு பிரிண்ட் & பைண்ட் ஆகிட வேண்டும் ; பாக்கி புக்ஸ் ஆறும் சென்னை bookfair வந்தாச்சு !

Needless to impart, இவை சகலமும் மறுபதிப்புகளே & அனைத்துமே சென்னையின் புத்தக விழாவுக்கோசரம் ரெடியாகியுள்ளவைகளே ! So இப்போது தான் சந்தா செலுத்தி விட்டு பாக்கெட்டில் பொத்தலோடு இருக்கும் பட்சத்தில், no worries guys – உங்களுக்குத் தோதுப்படும் வேளைகளில் இவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் ! ராவோடு ராவாய் காலியாகிப் போகுமென்ற பயம் தேவையில்லை ! தேவையான இதழ்களை மட்டும், தேவையான நேரத்தில் வாங்கிக் கொள்ளலாம் ! சென்னைப் புத்தக விழாவின் முழுமைக்கும் ஆன்லைனில் ஆர்டர் செய்வோருக்குமே அந்த 10% டிஸ்கவுண்ட் இருந்திடும் என்பது கொசுறுத் தகவல் !! 

AND PLEASE NOTE – 9 இதழ்களும் ஒருசேர தேவையெனில் நான்கு நாட்களின் அவகாசம் அவசியமாகிடும் நம்மாட்களுக்கு ! ஏற்கனவே entrance desk-ல் ஸ்டெல்லா மாத்திரம் தானிருக்க, இந்த சென்னை எக்ஸ்பிரஸின் பளுவினையும் இந்த நொடியிலேயே ஏற்றி விட்டால் தடுமாறிப் போவாள் ! So ஆர்டர் செய்திடும் பட்சத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் பொறுமை ப்ளீஸ் ! 

ரைட்டு, இப்போதைக்கு இந்தப் பதிவுக்கு “சுபம்” போட்டு விட்டு, புத்தக விழாவில் தலையைக் காட்ட கிளம்ப முனைகிறேன் guys ! இயன்றால் இன்றிரவோ, நாளை பகலிலோ இங்கு மறுக்கா ஆஜராகிறேன் !! Bye fascinated with now ! Leer you spherical ! Respect a fine weekend !!