டின்டின் தான் வாராரு….!

 நண்பர்களே,

வணக்கம்.நான்கே நாட்களின் இடைவெளியில் ஆபீஸ் மறுக்கா அல்லகோலம் கண்டு நின்றது இன்று பகலில் ! ஜனவரி ’24-ன் இதழ்களின் டெஸ்பாட்ச் எப்போதென்று கேட்டிருந்த போது – “லட்சியம் புதன்” என்றிருந்தேன் ! பைண்டிங் நண்பரும் சரி, நம்மாட்களும் சரி, அந்த இலட்சியத்தை நிச்சயமாக்கிட உதவிட, புத்தாண்டின் முதல் மாதத்து ஜாம்பவான் இதழ்கள் இன்று மதியம் கிளம்பியாச்சூ ! And துளி சந்தேகமும் இன்றி, இம்மாதத்து prove stealer சர்வ நிச்சயமாய் டின்டின் தான் என்பேன் ! கதைக்குள்ளோ, மொழிபெயர்ப்புக்குள்ளோ புகுந்திடும் முன்பாகவே, இதழின் அமைப்பும், அந்தத் தயாரிப்புத் தரமும் தந்திடவுள்ள impact – தாடைகளில் வேதாளர் பதித்திடும் கபால முத்திரை கும்மாங்குத்தைப் போலிருக்கும்  ! Becos – முடித்து வந்த இதழ்களைப் பார்த்த போது நானே மிரண்டு போய்விட்டேன் !! 

காலங்காலமாய் புத்தகத் தயாரிப்புத் துறையில் கால்பதித்துக் கிடப்போர் என்ற முறையில் – “ஆங்…நாங்க பாக்காததா ?” என்ற ஒரு தெனாவட்டு உள்ளுக்குள் இருப்பதை மறுப்பதற்கில்லை ! ஆனால் டின்டினின் தயாரிப்புக்கென படைப்பாளிகள் போட்டிருந்த ஏகப்பட்ட  கண்டிஷன்கள் நிறையவே மலைக்கச் செய்திருந்தன ! அச்சை விடவும், பைண்டிங்கில் இங்கே 200% நிபுணத்துவம் தேவைப்படும் என்பது புரிந்தது ! And நமக்கு பணி செய்து தரும் பைண்டிங் நிறுவனங்கள், பாதி இயந்திரங்கள் ; பாதி மனித உழைப்பு என்றே செயல்பட்டுவருகின்றன ! ஆனால் டின்டினுக்கு தேவையாகிடும் ending முழுக்க முழுக்க இயந்திரங்களிலேயே செய்தாலொழிய சாத்தியமாகாது என்பது புரிந்தது ! So முழுக்க முழுக்க புத்தக ஏற்றுமதி மட்டுமே செய்து வரும் ஒரு மெகா குழுமத்திடம் பணிகளை ஒப்படைப்பது என்று தீர்மானித்தோம் ! லட்சங்களில் பணியாற்றிடும் அந்த நிறுவனத்திடம் நமது சுண்டைக்காய் பிரிண்ட்ரன் பற்றிப் பேசவே கூச்சமாக இருந்தது தான் ! But ஒரு பரஸ்பர நண்பர் மூலமாய் பணியினை அவர்களிடம் ஒப்படைத்தோம் ! டிஜிட்டல் கோப்புகளையும், பேப்பரையும் மட்டும் அனுப்புங்கள் – முடித்த புக்ஸை டப்பிகளில் வாங்கிப் போக மட்டுமே நீங்கள் மெனெக்கெட வேண்டியிருக்கும் என்று அவர்கள் சொன்ன போது – ‘அடடே…இந்த டீலிங்   கூட நல்லா தான் இருக்கும் போலிருக்கே ?’ என்று மனது ஒற்றை நொடிக்கு மகிழ்ந்தது ! மறுநொடிக்கொ அவர்களது பில் தொகை என்னவாக இருக்குமென்ற எஸ்டிமேட் வந்த போது சப்தநாடிகளும் அடங்கிப் போயின ! “ஆங்….நம்ம மாமூலான பைண்டிங்கிலேயே கிட்டக்க நின்னு பாத்து-பாத்து செஞ்சு வாங்கிட்டா போதாதா ?” என்ற கேள்வியோடு உள்ளுக்குள் சபலப் பேய் தறி கெட்டு ஆட்டம் போட்டது ! ஆனால் உடன் வந்திருந்த ஜூனியர் எடிட்டர் – “இந்த ஒருவாட்டி விஷப்பரீட்சை வாணாம் ; கூடுதல் செலவு தான் ; but பார்த்துக் கொள்ளலாமே ?” என்று சொல்ல, நானும் ஒரு மாதிரியாய் ஒத்துக்கொண்டேன் ! தொடர்ந்த 15 நாட்களுக்கு அவர்களிடமிருந்து பேச்சும் லேது-மூச்சும் லேது ! போச்சுடா சாமீ என்றபடிக்கே போன் அடித்தேன் ; பதைபதைப்பை மறைக்க முயன்றபடிக்கே ! ஆனால் இங்கே அடிச்ச லப்பு-டப்பு போனிலேயே கேட்டதோ என்னவோ – “No டென்க்ஷன்ஜி ; சொன்னபடிக்கே டிசம்பர் 31 தேதிக்கு டெலிவரி பண்ணிடுவோம் !” என்றார் அவர்களது MD ! 

தொடர்ந்த நாட்களில் அவர்கள் பணியினைத் துவங்கிய போது கொஞ்சம் கொஞ்சமாய் பராக்குப் பார்க்க ஆரம்பித்தோம் ! And ‘இந்தத்துறையில் பழம் தின்னு கொட்டை போட்டுப்புட்டோம்’ என்ற மமதைகளை ஒரே நாளில் தீ வைக்கப் பண்ணிவிட்டார்கள் ! ஒவ்வொரு கட்டத்திலும் பணியினை அவர்கள் அணுகிய விதங்களில் ஒரு நூறு பாடம் படிக்க நமக்கு சரக்கிருந்தது ! பிராஸஸிங்கில் துவங்கி, அச்சு ; பைண்டிங் என்று அவர்கள் அடுத்தடுத்து பணிகளில் முழுக்கவே இயந்திரங்களோடு களமிறங்கத் துவங்க – ‘ஆவென்று’ வாய்பிளந்து நின்றோம் ! சொன்னபடிக்கே ஞாயிறு மாலையில் புக்ஸ் பேக் செய்யப்பட்டு ரெடியாக இருந்தன ! டப்பியை உடைத்து ஒரு புக்கைக் கையில் ஏந்திய போது மேலே, முதல் பத்தியில் நான் சொன்ன ‘தாடையிலே வேதாளர் கும்மாங்கும்மு’  feeling பிரவாகமெடுத்தது ! Fully radiant printing & making !! நாளைக்கு மட்டும் கூரியரில் புக்ஸ் உங்களை பத்திரமாக  எட்டிப்பிடித்து விட்டால் – இப்போது நான் விட்டம் வரை விரியும் வியப்போடு செய்திடும் சிலாகிப்பினை நீங்களும் செய்யாது போக மாட்டீர்கள் என்பேன் ! நமது 52 ஆண்டு காலப் பாரம்பரியத்தில் இதுவொரு Awesome உச்சம் என்றால் மிகையாகாது !

ரைட்டு…டின்டின் தயாரிப்புப் புராணம் போதுமெனில் – அதற்கடுத்த நிலை பக்கமாய்ப் போலாமா ? ஞாயிறு அதிகாலை, தூக்கம் பிடித்தும், பிடிக்காமலும் உருண்டு கொண்டிருந்த வேளையில் ஒரு மெகா சிந்தனை தோன்றியது ! அன்றைய ரோசனைகளின் பலனே இதோ – பாருங்களேன் guys :

1990-களில் தினமலர் வாரமலரில் வாசகர்களை ஜாலி டூராய் குற்றாலம் கூட்டிப் போவதும், வாசகர்கள் செம ஹாயாக கொண்டாடுவதும் வருடாந்திர நிகழ்வுகள் ! அதே போல நாமும் எப்போவாச்சும் முயற்சித்தாலென்ன ? என்று யோசிப்பேன் அவ்வப்போது ; அப்பாலிக்கா அடுத்த பணியின் மும்முரத்துக்குள் கவிழ்ந்தடித்துப் படுத்தும் விடுவேன் ! ஆனால் இம்முறை ஒரு சர்வதேச ஜாம்பவான் நம் மத்தியில் கால்பதிக்கும் குதூகலத் தருணத்தில் நண்பர்களில் ஒருவரை இந்த சாகசம் துவங்கிடும் நேபாளத்துக்கே அனுப்பினாலென்ன ? என்று குறுகுறுத்தது ! நமக்குத் தான் மண்டைக்குள் குடைய ஆரம்பித்துவிட்டால் இருப்பு கொள்ளாதே !! So – இதோ, டின்டின் திபெத் நோக்கிப் பயணிப்பதை ரசிக்கும் கையோடு நேபாளம் போக நீங்களும் ரெடியாகிடலாமா ? 

இந்த அறிவிப்பு சார்ந்த உங்களின் reactions என்னவாக இருக்குமென்று அறிந்திட செம ஆவல் ! Typically நான் ஜிங்கு ஜிங்கென்று குதித்தபடிக்கே எதையேனும் அறிவிக்கும் தருணங்களில் இங்கு கொட்டாவிகள் திமிறியும் உள்ளன & vice versa too ! ஆகையால் ஓவராய் துள்ளிக்குதிக்க இக்கட முகாந்திரம் உள்ளதா ? அல்லது கொட்டாவிகளே மிகுந்திடப் போகின்றனவா ? என்று சொல்லுங்க பாஸ் ! அப்புறம் அறிவிப்புக்குள் இன்னொரு  அறிவிப்பும் இருப்பதைக் கவனியுங்களேன் !

பாக்கி இதழ்கள் பற்றி நாளை காலை replace செய்கிறேன் ! இப்போதைக்கு bye guys ….see you around !

சென்னையில் விழா ஆரம்பிச்சாச்சு & முதல் நாள் மாலையே விற்பனையில் அதிரடிகளும் ஆரம்பம் !! PLEASE DO VISIT US FOLKS !!