டிசம்பருக்குப் பிரியாவிடை !

 நண்பர்களே,

வணக்கம். வருஷத்தில் கடைசி தினம் ! நல்லா வடிவேலை போல ஒரு பொசிஷனில் டர்ன் பண்ணி நின்று கொண்டு கடந்துள்ள ஆண்டினை சித்தே திரும்பிப் பார்க்க முனைவோமா ? ஆனால் flashback mode-க்குள் நுழைந்திடும் முன்பாய் இந்த டிசம்பர் பற்றி கொஞ்சம் பேசி விடுகிறேனே !

4 இதழ்களை டிசம்பரின் துவக்க வாரத்தில் அனுப்பியதெல்லாமே ஏதோவொரு காலத்தின் நினைவாட்டம் உள்ளது உள்ளுக்குள் – merely becos அவற்றைத் தொடர்ந்து இங்கு அரங்கேறி வந்துள்ள கூத்துக்கள் ஒரு கோடி ! ஏற்கனவே சொல்லியிருந்தேன் தான் – விங்-கமாண்டர் ஜார்ஜின் ஸ்பெஷல் தொகுப்பின் பணி இடர்கள் பற்றி ! In hindsight – ஜார்ஜை டிசம்பருக்குள் நுழைக்க நினைத்ததே எக்கச்சக்கச் சுணக்கங்களுக்கு துவக்கப்புள்ளி என்பது புரிகிறது ! சென்னைப் புத்தக விழாவின் தேதிகள் அறிவிக்கப்பட்ட கையோடு நமது ஆட்கள் bookfair முஸ்தீபுகளில் இறங்கியவர்களாய் என்னிடம் நீட்டிய ஓலையில் குறிப்புகள் இவ்விதமிருந்தன :

  • மாயாவி புக்ஸ் – பூஜ்யம்
  • லாரன்ஸ்-டேவிட் புக்ஸ் – பூஜ்யமோ பூஜ்யம்
  • ஜானி நீரோ – லேது 
  • ஸ்பைடர் – ஒண்ணே ஒண்ணு 
  • லக்கி லூக் – மூணே மூணு 
  • கதை சொல்லும் காமிக்ஸ் புக்ஸ் – சொற்பம் 

சென்னைப் புத்தக விழாக்களுக்கு மாயாவி மாம்ஸும், லாரன்ஸ் சித்தப்ஸும், ஜானி நீரோ மச்சான்ஸ்சும் இல்லாது போய் கடை விரித்தால் என்ன மாதிரியான துடைப்பக்கட்டைச் சாத்துக்கள் விழும் என்பதை கண்கூடாய் நேரில் பார்த்தவன் என்ற முறையில் அவசரமாய் நிலவரங்களை சரி செய்திட வேண்டும் என்பது புரிந்தது ! ஜவ்வு மிட்டாயாய் ஜார்ஜ் இழுத்துக் கொண்டே போக, மழைகள் சார்ந்த இடர்களும் கோர்த்துக் கொள்ள, எனக்குள் பதட்டமும் தொற்றிக் கொண்டது ! இன்னொரு கொடுமை என்னவெனில் நடப்பாண்டில் சிவகாசிக்கு கிட்டியுள்ள காலெண்டர் & டயரி ஆர்டர்கள் வரலாறு கண்டிரா ஒரு புது உச்சம் !! அதை எண்ணி மகிழலாமென்றால் – ஊருக்குள் உள்ள சகல பைண்டிங் நிறுவனங்களும், தினசரி காலண்டர்களுக்கு படங்களை அட்டை மீது ஒட்டித் தரும் பணிகளுக்கும், மாதாந்திரக் காலண்டர்களுக்கு மேலே டின் அடித்துத் தரும் பணிகளுக்கும் ஆட்கள் போய்விட்டார்கள் என்று கையைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார்கள் ! இன்னொரு பக்கமோ டயரிகளின் பணிகள் பிசியோ பிசி ! ஆண்டுதோறும் டிசம்பரில் அரங்கேறிடும் நிகழ்வுகளே – ஆனால் இந்தாண்டின் ஆர்டர்கள் ஒரு புது உச்சம் ! So நம்மளைப் போலானோரை – ‘அப்டி ஓரமா நின்னு வெளாடிட்டு இருங்க தம்பி !’ என்று ஓரம்கட்டி விட்டார்கள் ! 

நானோ ஒரு டஜன் மறுபதிப்புகளுக்கு லிஸ்ட் போட்டு வைத்து விட்டு, இன்னொரு பக்கம் ஜனவரியின் புது புக்ஸ் நான்கினையும் வேக வேகமாய் பணிமுடித்து அச்சுக்குக் கொண்டு செல்லும் முனைப்பில் இருந்தேன் ! கடைசி 10 தினங்களில் எனக்கும் சரி, நமது டீமுக்கும் சரி, எங்கிருந்து இத்தனை ஆற்றல் கிட்டியதோ, சத்தியமாய்த் தெரியாது, ஆனால் பிசாசுகளாட்டம் தினமும் ஒரு புக்கை முடித்து பிரிண்டிங்குக்கு அள்ளி இறைத்துக் கொண்டிருந்தோம் ! And மறுபதிப்பு தானே – அப்டியே இருக்கட்டும் என்று விடவும் மனமின்றி, ஒவ்வொன்றிலுமே இயன்ற திருத்தங்களை செய்திடத் தவறவில்லை ! அதிலும் குறிப்பாய் லக்கி லூக் மறுபதிப்பு லிஸ்டானது ஒன்றிலிருந்து இரண்டாகி, இரண்டிலிருந்து மூன்றாக முன்னேற்றம் கண்டிட, முன்னாட்களில் நமது கார்ட்டூன் மொழியாக்கங்கள் எத்தனை பெத்த மொக்கைகளாய் இருந்து வந்துள்ளன என்பது புலனாகியது ! செம க்ளாஸிக் கதைகளுக்கு மொழியாக்கத்தில் மெருகூட்டிடாது அப்டிக்கா தொடர்ந்திட  கிஞ்சித்தும் மனம் ஒப்பவில்லை & கிட்டத்தட்ட 3 ஆல்பங்களுக்குமே 50% க்கும் அதிகமாய் மாற்றி எழுத வேண்டிப் போனது ! 

To minimize a vastly lengthy story short – ஏஜெண்ட் சிஸ்கோ + விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல் + விலையில்லா கலர் டெக்ஸ் இதழ்களை டெஸ்பாட்ச் முடித்து விட்டு ;   டின்டின் புக்ஸ்களை அட்டகாசமாய் ரெடி பண்ணி வாங்கி விட்டு, லார்கோவை தெறிக்கும் கலரில் அசாத்தியமான அழகில் அச்சிட்டு விட்டு, வேதாளரையும் கலரில் போட்டுத் தாக்கிவிட்டு, இளம் டெக்ஸை அட்டகாசமானதொரு புதுக் காகித ரகத்தில் அச்சிட்டு விட்டு, மறுபதிப்புகளில் 8 இதழ்களை (இது வரையில்) பிரிண்ட் பண்ணி விட்டு, பிடித்திருந்த செம ஜல்ப்புக்கு மாத்திரைகளை விழுங்கி விட்டு நேற்றிரவு கட்டையைச் சாத்திய போது மிதப்பது போலிருந்தது ! மாத்திரைகளின் slay ஆ ? கடைசி 6 நாட்களில் நம்மாட்கள் தாண்டியுள்ள புது உசரங்களின் பெருமிதமா ? சொல்லத் தெரியலை – ஆனால் இதோ, ஞாயிறு காலையில் லேட்டாக கண்முழிக்கும் போதுமே மனசுக்குள் ஒரு இளையராஜா டியூன் ஓடிக்கொண்டிருந்தது !  

ரைட்டு….இனி நடப்பாண்டின் ரிப்போர்ட் கார்ட் பக்கமாய்ப் போகலாமா ? Truth to expose – தீவிர, அதி தீவிர வாசக நண்பர்களை தவிர்த்த பாக்கிப் பேர் நடப்பாண்டின் ஒரு பாதியை வாசித்திருந்தாலே பெருசு என்று தான் நினைக்கிறேன் ! ‘பொம்மை பாக்க’ மட்டுமே நேரம் இருந்திருக்கும் நண்பர்களுக்கு 2023-ன் பயணத்தினை நினைவூட்டும், விடுபட்ட இதழ்களை வாசிக்க ஊக்குவிக்கவும் இதோ – இந்த அட்டைப்படங்களின் தொகுப்பு உதவினால் செம !    

மேற்படி இதழ்களை நீங்கள் ஆராமாய் அசை போட்டுகொண்டு இருங்க guys  ; ரிப்போர்ட் கார்டை ரெடி பண்ணி விட்டு ஒரு மணி நேரத்துக்குள் தொடர்கிறேன் !  இதில் எத்தனை வாங்கினீர்கள் ? வாசித்தீர்கள் ? என்று பதிவிட்டால் will scheme for absorbing finding out !

Part 2 :

வழக்கம் போல, நாம் ஆரம்பிக்கப் போவது TOP OF THE YEAR 2023 – ஆண்டின் டாப் 3  இதழ்கள் தேர்விலிருந்து ! Please account for – இவை முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட அபிப்பிராயங்களே அன்றி, எவ்வித தீர்ப்பும் அல்ல ! So உங்களது யூகங்களோடு நான் ஒத்துப் போயிருக்காவிடின், relax…..ப்ரீயா விடுங்க ! 

எனது பார்வையில் 2023-ன் இதழ் # 1 – இளம் டெக்ஸ் ஒரு 6 பாக அதிரடியில் பின்னிப் பெடலெடுத்த “THE சிக்ஸர் ஸ்பெஷல்” தான் ! நாமெல்லாம் எப்போதுமே ‘தல’ பின்னால் அணி திரளும் ரசிகக்கூட்டம் தான் என்றாலுமே, இந்த அட்டகாசமான கதைச் சுற்றில் ஒரு அட்டகாசமான தீபாவளி விருந்தின் திருப்தி கிட்டிடாது போயிருக்காது என்பது எனது நம்பிக்கை ! Yes – கலரில் இது சாத்தியமாகியிருந்தால் இன்னும் மிரட்டலாக இருந்திருக்கும் தான் ; ஆனால் கலரோ, கறுப்போ – அந்த அனல் பறக்கும் கதைக்களத்தை வீரியம் rankings unprecedented !!

எனது பார்வையில் நடப்பாண்டின் இதழ் # 2 – ஏப்ரலில் வெளியான XIII flow -off – “எந்தையின் கதை” தான் ! பொதுவாகவே ஒரு ஜாம்பவான் கையாண்ட தொடருக்குள் அடுத்த தலைமுறையினர் தலைநுழைக்கும் போது – மாற்றங்கள் பளீரென்று தென்படாது போகாது ! கேப்டன் டைகர் தொடரில் கதாசிரியர் சார்லியேவுக்குப் பின்பான அத்தனை பேரும் தலைகீழாய் நின்று தண்ணி குடிச்சாலும் அவரது உச்சங்களை நெருங்கக் கூட முடியவில்லை ! கோசினி & மோரிஸுக்குப் பின்பாய் லக்கி லூக்கை அந்தப் பழைய அற்புதத்தில் ரசிக்க இயலவில்லை ! XIII தொடரிலேயே பிதாமகர் வான் ஹாமுக்குப் பின்பான படைப்பாளிகளின் எல்லைக்கோடுகள் எவையென்பதை பார்த்தும் விட்டோம் ! அப்படிப்பட்டதொரு சூழலில், XIII-ன் flow off தொடரினில் புதுசு புதுசாய் படைப்பாளிகள் களமிறங்கிய போது outcomes were a mixed obtain என்பதில் வியப்பிருக்கவில்லை ! “விரியனின் விரோதி” மங்கூசின் flashback போன்ற செம ஆல்பங்களும் உண்டு ; “பெட்டி பார்னோஸ்வ்க்கி” போன்ற சுமார்களும் உண்டு என்ற புரிதல் கிட்டிய பின்னே தான் இத்தொடரில் ரொம்பவே selective ஆக இருத்தல் அவசியம் என்று தீர்மானித்தேன் ! அதன் பின்பான “சதியின் மதி” (கால்வின் வாக்ஸ் flashback) அழகான ஆல்பமாய் அமைந்ததெனில், இந்தாண்டில் வந்திருக்கும் “எந்தையின் கதை” உறுதியான சிக்ஸர் என்பேன் ! ஒரு மிதமான வெற்றித் தொடருக்கே flow off எழுதுவதென்பதே நாக்குத் தொங்கச் செய்யும் சமாச்சாரம் ! ஆனால் XIII போன்றதொரு செம சூப்பர் ஹிட் தொடருக்கு, அத்தனை குழப்பங்களுக்கு இடையேயும், துளியும் நெருடல்களின்றி ஒரு பின்கதையினைப் புனைவதென்பது இமாலயப் பணி ! அதைக் கச்சிதமாய்ச் செய்து ; சித்திரங்களிலும், கலரிங்கிலும் கலக்கியிருந்த டீமுக்கு hats off !! துளியும் சந்தேகங்களின்றி இந்தாண்டின் finest # 2 ! 

மூன்றாமிடத்தினை பிடிக்க மூன்று இதழ்களுக்கு மத்தியில் போட்டி என்பேன் ! 

  • சம்மர் முடிந்து மழை தலைகாட்ட ஆரம்பித்த நேரத்தில் வெளியான “சம்மர் ஸ்பெஷல்” 
  • இரவுக் கழுகாரின் 75 வது பிறந்தநாள் மலரான The SUPREMO ஸ்பெஷல்”
  • தாத்தாஸ் – துள்ளுவதோ முதுமை !
பைண்டிங்கில் சொதப்பல்களின்றி வெளியாகியிருப்பின் “சம்மர் ஸ்பெஷல்” சந்தேகமின்றி வெற்றியைத் தட்டிச் சென்றிருக்கும் தான் ! அதே போல “அட்டைப்பட தல ரசிக்கலே” என்ற முகாரிகளும் இல்லாது போயின் Supremo ஸ்பெஷல் அந்த இடத்தினை ஈட்டியிருக்கும் தான் ! மாறாக, பெருசுகள் காஷுவலாய் வந்தார்கள் ; தங்களின் டிரேட்மார்க் லூட்டிகளைச் செய்தார்கள் ; and இதோ – ஆண்டின் மூன்றாவது finest என்ற வெற்றியையும் ஜோப்பிகளுக்குள் போட்டுக்கிளம்பி விட்டார்கள் ! இந்தத் தொடர் முழுமை காணும் நேரத்துக்குள் நம் மத்தியில் தாத்தாக்களுக்கு செம ரசிகர் மன்றமொன்று உருவாகாது போயின் நிஜமாகவே வியப்படைவேன் ! தாத்தாஸ் ஒரு மாஸ் நாயகர்களாக அடியெடுத்து வைத்து விட்டார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது ! 
Precise….டாப் எவை ? என்று பார்த்த கையோடு டப்ஸா எவை ? என்று பார்த்து விடலாமா ? 
இம்மி கூட சந்தேகமே இன்றி 2023-ல் மிகப் பெரிய பல்பு வாங்கியது மைக் ஹேம்மர் தான் ! “மரணம் சொன்ன இரவு” தெறிக்க விடுமென்று எண்ணியிருந்தேன் ; மாறாக உங்களைக் கதற விட்டது தான் பலனாகிப் போனது ! இங்கிலீஷில் படித்த போது இந்தக் கதையும் சரி, ஆர்ட்ஒர்க்கும் சரி, சூப்பராகவே தென்பட்டது எனக்கு ! ஆனால் போன ஜனவரியில் வெளியான சமயத்தில் நிகழ்ந்ததே வேறு !! Sorry of us !
பல்பு வாங்கிய பட்டியலில் இடம் # 2 – V காமிக்சில் வெளியான “சென்று வா..கொன்று வா..” என்பேன் ! Girl killer …ஸாகோரை வேட்டையாடப் போகிறாள் ; அனல் பறக்கப் போகிறதென்று எதிர்பார்த்தால் கங்கு கூடப் பறக்கவில்லை !! 
இடம் # 3 – இதோ இந்த டிசம்பரில் வெளியான ‘தல’ ஜாகஜமான “உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி !” தான் என்பேன் ! ரொம்பவே மர்மமான துவக்கம் ; சோப்பரான பில்டப் என்று ஆரம்பித்து விட்டு ஒரு சோன்பப்டிக்காரரைப் போன்ற அப்பிராணியை வில்லன் என்று காட்டி, க்ளைமாக்சில் சுறா ; இரா என்றெல்லாம் ரவுசு அடித்து விட்டு “சுபம்” என்று போட்ட போது மெய்யாலுமே யோசிக்கத் தோன்றியது !! சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து, வில்லனை ஒரு தடாலடிப் பேர்வழியாய் காட்டியிருந்தால் இந்த ஆல்பம் ஒரு செம ஹிட் ஆகியிருக்குமே என்ற ஆதங்கம் அலையடித்தது ! Phew !! 

சரி…”உச்சம் எது ?” “பள்ளத்தில் எது ?” என்று பார்த்தான பின்னே, 2023-ன் கமர்ஷியல் ஹிட்ஸ் எவை என்று பார்க்கலாமா ? இதோ – பட்டியல் :
  • கார்சனின் கடந்த காலம் 
  • காலனின் கால்தடத்தில் (!!!!!!!!!!)
  • தி சிக்ஸர் ஸ்பெஷல் 
  • TEX – தி சுப்ரீமோ ஸ்பெஷல் 
  • The Gigantic Boys ஸ்பெஷல்
  • குற்ற நகரம் கல்கத்தா 
மேற்படி 6 இதழ்களுமே விற்பனையில் புரட்டி எடுத்துள்ளன !! Commercial hits of 2023 என்றால் இந்த 6 தான் !
அதே போல விற்பனையில் ஏமாற்றம் தந்த இதழ்களை பட்டியல் போடுவதாயின் : 
  • சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் # 2 
  • உயிரைத் தேடி – dusky & white தொகுப்பு
  • நெவாடா 
இதில் சுஸ்கி & விஸ்கி தான் an house of topic ! முதல் ஆல்பத்தை தெறிக்க விடும் வகையில் வரவேற்றோம் ; ஆனால் அதற்கு கிஞ்சித்தும் சளைக்காத இரண்டாம் தொகுப்போ பாம்பு டான்ஸ் ஆடுவதை பார்க்கும் போது ஒண்ணுமே புரிலிங்கண்ணா ! வெறும் நோஸ்டால்ஜியா மோகம் தானுங்களா கோப்பால் ??? என்ற கேள்வியே இங்கு நிற்கின்றது ! இயன்றால் பதில்ஸ் ப்ளீஸ் of us ? 
So 2023-ன் ரிப்போர்ட் கார்ட் இதுவே – எனது பார்வையில் ! 
இனி உங்களின் அபிப்பிராயங்களை அறிந்திட ஆவல் ! உங்களது TOP 3 ; டப்ஸா 3 எவை என்று பதிவிடுங்களேன் guys ?

Bye interested by now other people….perceive you around ! இந்தாண்டுக்கு இன்று டாட்டா சொல்லி விட்டு, நிறைய நம்பிக்கையோடு புத்தாண்டினை வரவேற்றிடத் தயாராகுவோமா ? அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் all ! நாளை காலை கூரியர்கள் உங்கள் கதவைத் தட்டிடுவார்கள் என்பதை நினைவூட்டிய கையோடு கிளம்புகிறேன் ! 2024 – சந்தோஷத்தின் ஆண்டாய் நம் அனைவருக்கும் அமையட்டும் ! 
Day 1 of Year 40 too !!

நமது ஸ்டால் நம்பர்கள் : 364 & 365 !! Please enact focus on with of us !!