டிக் அடித்த டிக் !

 நண்பர்களே,

வணக்கம். ஜனவரி புலர்வதை ரசித்து, சென்னை விழாவின் விஸ்வரூபத்தை தரிசித்து ; , ஒரு ஜாம்பவான் நாற்கூட்டணியின் வெற்றியினையும் நுகர்ந்து – இதோ பிப்ரவரியில் நிற்கிறோம் ! ஆனால்….ஆனால்….”டின்டின்” என்ற மந்திரச்சொல்லின் பிரவாகம் இன்னமும் அடங்கிய பாடில்லை ! திருப்பூர் புத்தக விழாவின் must aquire லிஸ்ட்டில் “திபெத்தில் டின்டின்” இடம் பிடித்துள்ளதென்றால், ஏஜெண்ட்களிடமும், நம்மிடம் ஆன்லைனில்  வாங்குவோரும் இன்னமுமே தெறிக்க விட்டுக்கொண்டுள்ளனர் ! Nearly தினசரி ஏதேனும் ஒரு ஊரின் முகவர் மறுக்கா ஆர்டர் தந்து கொண்டிருக்கிறார் & ஒவ்வொரு மாலையிலும் புதுசு புதுசாய் இல்லங்களைத் தேடி டின்டின் பிரதிகள் கூரியரில் படையெடுத்துக் கொண்டும் உள்ளது ! இதில் icing on the cake – ஐரோப்பிய சேகரிப்பாளர்களின் ஆர்வப் பிராவகமுமே – பெல்ஜியத்துக்கு மட்டுமே 3 கணிசமான எண்ணிக்கையில் ஏர்-மெயில்கள் போயுள்ளன ! ஒரு உலகளாவிய ஜாம்பவானின் நிஜமான வீச்சு என்னவென்பதை இத்தனை தசாப்தங்களுக்குப் பின்பாய் தரிசிக்கும் வாய்ப்பாய் இதனை பார்த்திடுகிறோம் ! Oh yes – வெற்றி நாயகர்கள் நமக்குத் புதியவர்கள் அல்ல தான் – ஆனால் இதுவரையிலுமான நமது அணிவகுப்பின் சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லைகள் இருந்து வருகின்றன ! டின்டினைப் போல “வானமே எல்லை” என்றோர் வெகு சொற்பமே !

*மாயாவி – strictly a British wide name ! இன்னும் சொல்லப் போனால் இவருக்கு இங்கிலாந்தில் உள்ள பிரபல்யத்தினைக் காட்டிலும் தமிழில் உள்ளது பன்மடங்கு அதிகம் என்பதை படைப்பாளிகளே சொல்லியுள்ளனர் !

*டெக்ஸ் – இத்தாலியில் ஒரு அசாத்தியர் ; பிரேசிலில் ; போர்ச்சுகலில் ; க்ரோவேஷியாவில் ; துருக்கியில் ; தமிழில் ஒரு அசாத்திய சூப்பர் ஸ்டார் ! ஆனால் ஐரோப்பாவிலேயே பல முன்னிலை காமிக்ஸ் மார்க்கெட்களில் ‘தல’ யின் presence கிடையாது ! And உலகின் முதல் மார்க்கெட்டான அமெரிக்காவில் ரொம்ப சமீபமாய் தான் காலூன்ற முயற்சித்து வருகிறார் ! உலகின் மார்க்கெட் # 2 ஆன ஜப்பானில் nopes !

*லக்கி லூக் : ஏகப்பட்ட மொழிகளில் ஐரோப்பாவில் கோலோச்சி வரும் பிஸ்தா தான் ; nonetheless ஒரிஜினல் பிதாமகர்களான மோரிஸ் & கோஸினிக்குப் பின்பாய் தொடரின் பிற்பகுதியில் உள்ள சில மிதரகக் கதைகள், தொடரின் நியாயமான அங்கீகாரத்துக்கு லைட்டாய் ஸ்பீட்-பிரேக்கர் போடுகின்றன ! 

*XIII – ஐரோப்பிய அதிரடி வெற்றித் தொடர் ! அதைத் தாண்டிய வீச்சு வேறெங்கெல்லாம் என்று அலசிட வேண்டி வரும் !

*கேப்டன் டைகர் – Ditto !! ஐரோப்பிய கண்டத்தினுள் ஒரு உச்ச ஆளுமை ! அதன் பின்னே வீச்சின் அளவு அதே வேகத்தில் கிடையாது !

மெய்யான ஒரு உலகளாவிய attain கொண்டதொரு கதைவரிசையினை அடையாளம் காட்டிடுவதானால் SMURFS நீலப் பொடுசுகளை சுட்டிக்காட்டிடலாம் ! ஐரோப்பாவில் ; அமெரிக்காவில் ; சீனாவில் ; ஜப்பானில் என்று இவர்களின் வெற்றித்தடங்கள் பதியாத தேசங்கள் வெகு குறைச்சல் ! ஆனால்…..ஆனால்…நம் மத்தியில் இவர்களுக்கு உருப்படியானதொரு அங்கீகாரம் இல்லாது போனது தான் துரதிர்ஷ்டமே !!

And yes – வேதாளருக்கு ஒரு global attain உண்டு தான் ! James Bond-க்குமே தான் !

ஆனால் அகவை 95 ஆகியும் புராதனம் கிஞ்சித்தும் தொனிக்காது ; எல்லைகளே இல்லா வீச்சுடன், அனைத்து வயதினருக்கும் ஏற்புடையதொரு நாயகராய் மிளிரும் டின்டின் முற்றிலும் வேறொரு உசரத்தில் இருப்பது புரிகிறது ! In point of fact இவருக்கு சவால் விடக்கூடிய பிரபல்யம் ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் தொடருக்கு இருக்கலாம் தான் – nonetheless அவர்களைத் தமிழ் பேச வைப்பதும், அதனை நீங்கள் ரசிக்கும் சாத்தியங்களும் சிரமங்களின் இமயம் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது ! இப்போதைக்கு அடுத்த டின்டின் டபுள் ஆல்பத்தினை ஆகஸ்டுக்கு ரெடி பண்ணிட இப்போதே கரணம் போட ஆரம்பிச்சாச்சு ! இந்தத் தொடரின் 24 ஆல்பங்களையும் நமது வரிசையில் அணிக்கோர்க்கச் செய்யும் தினத்தில், நமது கேட்லாக்கின் ரேஞ்சே வேறு மாதிரி இருக்கும் போலும் !! Phewwwww & Fingers Crossed wide time – பயணிக்க ஏகமோ ஏக தூரம் இருப்பதால் !!! 

Transferring on, இம்மாதத்து இதழ்கள் வெளியாகி ஓரிரு நாட்களே ஆகியுள்ளன தான் – ஆனால் early inclinations காட்டுவதெல்லாம் நமது புதுத் தாரக மந்திரத்தின் அவசியத்தினையே ! வழக்கமாய் ஆன்லைன் ஆர்டர்களில் டெக்ஸ் இதழ்களைத் தேர்வு செய்து விட்டு, மீத இதழ்களுக்குள் இங்கி-பிங்கி-பாங்கி போடும் படலமே நடைமுறையில் இருந்திடும். ஆனால் இம்முறையோ – முக்கால்வாசி ஆர்டர்கள் மூன்று இதழ்களுக்குமே & பாக்கி கால்வாசி டெட்வுட் டிக் இல்லாது ஆர்டர்கள் ! இதனைப் புரிந்து கொள்வதில் சிரமமே இல்லை தான் – நமது டிக் பையன் கடுங்காப்பி போலானவன் என்பதால் ! கடுங்காப்பி அத்தினி பேருக்குமே ரசிக்கும் என்று எதிர்பார்க்க இயலாது தானே ?! So ‘தல’யும், இளவரசியும் இம்மாதத்தினை ஆங்காங்கே தெறிக்க விடுவர் என்பதை ஏற்றுக் கொள்வதில் நம்மளவில் சிரமங்களில்லை !

டெட்வுட் டிக் !! 

நேற்றே நம்ம பத்து சாருக்கான பின்னூட்ட பதிலில் இது குறித்து எழுதியிருந்தேன் ! இந்த நாயகனை ஒரு நார்மலான காமிக்ஸ் வட்டத்துக்கு அறிமுகம் செய்வதென்பது – கல்யாணப் பந்தியில், கோவக்காய் கூட்டு + பாவக்காய் பொரியல் என்பதை பரிமாறுவதற்குச் சமம் என்பேன் ! ஆனால் ‘கோவக்காயோ, பாவக்காயோ, அதையும் ரசித்துத் தான் பார்ப்போமே ; நல்லா இருந்தா ஏற்றுக் கொள்ளவும் செய்வோமே ?!’ என்ற பக்குவம் உங்களைத் தவிர்த்த இன்னொரு இந்திய மொழியின் காமிக்ஸ் வட்டத்துக்கு நஹி என்பதே bottomline ! ரிட்டையர் ஆகி, ஊட்டுல குந்திக் கிடக்கும் பல் போன நாட்களில் இந்தப் பயணத்தினை அசை போடும் தருணங்களில், நான் எண்ணி வியக்கவும், மலைக்கவும் போகும் சமாச்சாரங்களின் பட்டியலில் உசரே இருக்கப் போவன  – தாத்தாஸ் ; நவீன வெட்டியான் ஸ்டெர்ன் ; டெட்வுட் டிக் ; நிஜங்களின் நிசப்தம் போலான offbeat முயற்சிகளாகவே இருந்திடும் ! பத்தில் ஒன்பது காமிக்ஸ் எடிட்டர்கள் நிராகரிக்கக்கூடியவற்றை ‘டிக்’ அடிக்க மட்டுமன்றி, அவை காணும் வெற்றிகளை ரசிக்கும் வரமும் வாய்த்திருப்பது எனக்கன்றோ ?!  

And டெட்வுட் டிக்கின் வெற்றி ஒற்றை ஆல்பத்தின் flash in the pan அல்லவே ! மொத்தம் 7 அத்தியாயங்கள் கொண்ட 425 பக்கக் கதைவரிசை இது ! முதலிரண்டு பாகங்களைப் போட்டுவிட்டு, வரவேற்பைப் பார்த்துவிட்டு மீதத்தை வாங்கிக் கொள்ளும் possibility நமக்கு இருந்தது ! ஆனால், உங்களின் ரசனைகள் மீதான நம்பிக்கை + குரல்வளை வரைக்கும் கட்டைவிரலை தினித்துப் பார்க்கும் ஆனந்தம் – ஒன்றிணைந்து மொத்த 425 பக்கங்களையும் ‘ஏக் தம்’மில் வாங்கிடப் பணித்தன ! And இதோ – 7 மினி ஆல்பங்களையும், மூன்று ரெகுலர் ஆல்பங்களில் பூர்த்தி செய்து நிற்கின்றோம் – டிக்குக்கு வாஞ்சையாய் டாட்டா சொன்னபடிக்கே ! நம்மைப் பொறுத்தவரை வெள்ளைக்கார துரைமார்-கருப்பு அடிமைகள் என்ற கோட்பாடெல்லாம் பரிச்சயம் கிடையாது – அமெரிக்காவினில் போல  ! நாமே ஒரு காலத்தில் தோல் கருத்த அடிமைகளாய் பார்க்கப்பட்டோர் தான் என்பதால் நமக்கு டிக்கின் வாழ்க்கையோடு ஒன்றிடுவது அத்தனை பெரிய சிரமமாக இருந்திடக்கூடாது தான் ! ஆனால் யதார்த்தம் அதுவல்ல என்பேன் – no longer lower than காமிக்ஸ் வாசிப்பினைப் பொறுத்த வரையிலும் ! இந்த 52 ஆண்டுகாலப் பயணத்தில் நாம் பார்த்துள்ள நாயக / நாயகியர் அனைவருமே வெளீர் தோல் கொண்ட அமெரிக்கர்களோ ; பிரிட்டிஷாரோ ; ஐரோப்பியர்களோ தான் ! If truth be told வெள்ளைத் தோல் கொண்டிரா ஒரே நாயக வட்டம் – நம்ம smurfs மாத்திரமே ! Oh yes – ஏஜென்ட் ராபினின் உதவியாளன் மார்வின் வெள்ளையன் அல்ல ; நமது XIII-ன் ஆதர்ஷத் தோழி ஜோன்ஸ் வெள்ளை அழகி கிடையாது ; டைகர் & டெக்சின் பல சாகசங்களில் கறுப்பினர்களுக்கு நல்லதொரு பங்களிப்பு சாத்தியப்பட்டுள்ளது தான் – ஆனால் வெள்ளையர் அல்லாத ஒருவரை ஒரு தொடரின் ஹீரோவாக நாம் பார்த்துள்ளதாக எனக்கு நினைவே இல்லை !  So நம்மையும் அறியாது – ஒரு காமிக்ஸ் வாசிப்பின் இலக்கணமாய் இந்த நிறபேதம் அமைந்திருப்பது ஒரு அரூப சமாச்சாரம் ! So இப்படியொரு ஹீரோவை ஏற்றுக் கொள்வது மாத்திரமன்றி, அவனது வாயிலிருந்து அருவியாய் கொட்டிடும் கலீஜ்களை உள்வாங்கிக்கொள்வதும் நமக்கே ஒரு மாறுபட்ட பரீட்சார்த்த முயற்சி தான் ! And நீங்கள் அந்தப் பரீட்சையில் அடி தூள் கிளப்பியுள்ளீர்கள் என்பது நமது பயணப் பெருமிதங்களுள் ஒன்று !  

In point of fact – ஆள் தான் கரடு முரடாய் இருக்கிறான் சரி, குறைந்த பட்சமாய் அவனை ஒழுங்காகப் பேசவாவது செய்திருக்கலாமே ? என்ற விசனம், கி.நா.மீது பெருசாய் அபிமானம் இல்லாத நண்பர்களுக்குத் தோன்றிடலாம் தான் ! ஆனால் ஒரு ஓவியர் எவ்விதம் கதாசிரியரின் கற்பனைக்கு உயிர் கொடுக்கிறாரோ – அதற்கு இணையான பங்கு ஸ்கிரிப்டுக்குமே உண்டு தானே ? So நான் கதாசிரியருக்கான தமிழக கூரியர் பாயாக வலம் வரும் போது பார்சலிலுள்ள முகவரிக்கே தானே பட்டுவாடாவைச் செய்திட வேணும் ? நான்பாட்டுக்கு எக்ஸ்டரா நம்பர்களைப் போட்டு வைத்தால், இந்தத் தொடரின் வீரியத்துக்கே ஆப்படிச்சாப்போல ஆகிடும் அல்லவா ? வார்த்தைகளில் நாசூக்கு பற்றியெல்லாம் பெருசாய் கவலை கொள்ளாது ; ‘நம்ம மூத்திர சந்து தானே…நாலு சாத்து வாங்குனா வாங்கிட்டுப் போய்க்கினே இருப்போம் !’ என்று நான் தீர்மானித்ததன் பின்னணி இதுவே ! இன்று கோர்வையாய் படித்துப் பார்க்கும் போது டிக்குக்கு ஜென்டிலான பேச்சு பாணியினைத் தந்திருந்தால் இந்தத் தொடர் விளக்குமாற்றுப் பூசை வாங்கியிருக்கும் என்பது புரிகிறது ! Pheww !!

இம்மாதத்தின் surprise packet என்னளவில் மாடஸ்டி தான் ! கோணாம்பட்டியிலேயே இன்றைக்கு IPhones புழக்கத்தில் இருக்க, கதை நெடுக மாடஸ்டி “அல்லோ…கோப்பால்…இங்கே உங்க மருமாள் நலம் !! கவலையை விடுங்க !” என்று ஆசுவாசப்படுத்தும் sequences கணிசம் ! ஆனால் இளவரசியின் கதாப்பாத்திரத்தின் வலிமையின் முன், சிலபல அயல்நாட்டு சக்திகளைத் தவிர்த்தோருக்கு வெறெந்தப் பிசிறும் தட்டியிருக்கவில்லை என்பது ஒரு சந்தோஷ ஆச்சர்யம் ! And கதை அரங்கேறும் நியூசிலாந்து ; அந்த மவ்ரீக்கள் ; நமது வாசிப்புகளுக்கு புதுசு என்பதுமே “ஒரு பண்டமாற்றுப் படலம்” இதழின் freshness க்கு ஒரு காரணியாக இருக்கலாம் ! In point of fact – மாடஸ்டி-கார்வின் நட்பின் அந்தப் பிரதிபலிப்பு நமக்கெல்லாம் செம பிடித்தமான விஷயம் என்பது once again நிரூபணம் கண்டுள்ளது ! ஆஹா…இனி subsequent quit இளவரசி டைஜஸ்ட் தான் !! என்று நம்ம கரூர் ராஜசேகர் சார் குதூகலிக்கக்கூடும் தான் – ஆனால் சுவீட்டை சாதம் ரேஞ்சுக்குப் பரிமாறினால் திகட்டிப் போய்விடும் என்பதே எனது அபிப்பிராயம் ! Presumably ஒன்றுக்கு இரண்டாய் சுவீட்களைப் பரிமாறிடலாம் ; அதற்கு மேலென்றால் பற்களுக்கும் பிரச்சனை ; ஜீரணத்துக்குமே !!

இம்மாதத்தின் டெக்ஸ் ஒரு வித்தியாச combo என்பேன் ! ‘மொரிசுக்கோ தான் வராரு…..மர்மம் தரப் போறாரு…!!’ என்ற சாங்கோடு கதை துவங்கினாலும், இது முழுக்கவே நம்ம தல டீமின் ஆவர்த்தனமே ! நம்மைப் போலவே மொரிஸ்கோவும் அகலப் பிளந்த வாயோடு அந்த “ஷுப்காப்ரா” சைத்தான்களை பராக்குப் பார்த்தபடியே பயணிக்கிறார் ! முழுக்க முழுக்க ஆக்ஷன் ; தோட்டாக்களின் தோரணம் ; with a ingredient of the supernatural – என்று தடதடக்கும் இந்தக்கதைக்கு ஓவியங்கள் ஒரு ஜீவநாடி எனலாம் ! சும்மா ப்ரேமுக்கு ப்ரேம் ஓவியர் மிரட்டியிருப்பது மொரிஸ்க்கோவின் டீமை மட்டுமல்ல – நம்மையும் தான் ! அட்டைப்படமும் டெரராய் அமைந்திருக்க, டெக்சின் தொடரோட்டம் தொடர்கிறது !   

Taking a look ahead, இன்றைக்கு திருப்பூர் புத்தக விழா நிறைவுக்கு வருகிறது & நெல்லையில் நேற்று தான் விழா துவங்கியுள்ளது ! திருப்பூரின் அசுர வேகம் நெல்லைக்கு சாத்தியமாகிடுமா ? என்பதை தொடரும் தினங்களில் பார்த்திடும் அதே மூச்சில், பிப்ரவரி 17 & 18 தேதிகளில் சென்னையில் அரங்கேறிடவுள்ள COMIC CON பற்றிய சிந்தனைகளும் ஓட்டமெடுத்து வருகின்றன ! கிறுகிறுக்க வைக்கும் கட்டணங்கள் தான் ஸ்டாலுக்கு ; நுழைவுக் கட்டணமும் தொள்ளாயிரமோ என்னவோ தான் & இந்த 2 நாட்களில் காமிக்ஸ் விற்பனை என்பதெல்லாம் எம்புட்டு தூரத்துக்கு சாத்தியம் என்பது மர்மமே – but இவர்கள் இந்தியாவுக்குள் கால்பதிக்கும் நகர்களிலெல்லாம் அதிர்வெடி வெற்றியினை ஈட்டி வருகின்றனர் ! இதோ – போன வாரம் ஹைதெராபாத்தில் நிறைவுற்றிருக்கும் HYDERABAD COMIC CON-ல் இரு தினங்களின் அட்டெண்டன்ஸ், வாய் பிளக்கச் செய்யும் 37000-மாம் !!! So நாம் பத்தாண்டுகளுக்கு முன்பாய்ப் பார்த்திருந்த விழாவுக்கும், இப்போதைக்கும் என்னென்னெ மாறியுள்ளன ; 2k இளசுகளின் ரசனைகள் என்னவென்பதை பராக்குப் பார்க்கவாச்சும் CHENNAI COMIC CON-க்கு வருகை தாருங்கள் guys என்பேன் ! ஒரு தக்கனூண்டு 2 x 2 மீட்டர் ஸ்டாலில் நமது இதழ்களில் selective ஆன தலைப்புகளோடு ; இங்கிலீஷ் காமிக்ஸ்சும் சேர்த்து present off செய்திடவுள்ளோம் ! And yes – ஞாயிறு காலை கொஞ்சமாச்சும் நண்பர்கள் தேறும் பட்சத்தில் டின்டின் கூப்பனின் நேபாள குலுக்கலையும் போட்டுத் தாக்கி விடலாம் ! Hope to gaze you guys !!

Bye for now….gain a wide Sunday all ! Detect you spherical !