ஜாம்பவான்களின் ஜனவரி..!

நண்பர்களே,

வணக்கம். தொடும் தொலைவினில் புத்தாண்டும் ; சென்னைப் புத்தக விழாவும் காத்திருக்க, புது இதழ்கள் ; மறுபதிப்புகள் என்று ஆபீஸே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடக்கிறது ! கொட்டித் தீர்த்த மழையில் நாம்  சேதங்களின்றித் தப்பியிருப்பினும், பைண்டிங்கிலும், கூரியர் டப்பி செய்து தரும் நிறுவனத்திலும், இயந்திரங்கள் மழை நீரில் குளித்திருக்க, செப்பனிடும் பணிகள் முடிந்து, கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்கு இப்போது தான் திரும்பி வருகின்றனர் ! So ஏஜெண்ட் சிஸ்கோ + விங் கமாண்டர் ஜார்ஜ் வரும் வாரத்தில் புறப்பட்டு விடுவார்கள் ! மன்னிச்சூ ப்ளீஸ் ! And ஏதேதோ காரணங்களின் பொருட்டு 2023-ன் இரண்டாம் பாதி முதலாய்த் தொற்றியிருந்த தாமதப் பிசாசை, காத்திருக்கும் பிப்ரவரி முதலாய் துரத்தியடித்து விடலாம் என்பது உறுதி ! மாதத்தின் முதல் தேதியெனும் அந்த ஸ்லாட்டை இனி கோட்டை விட மாட்டோம் – that is a promise !

சென்னைப் புத்தக விழாவின் துவக்கம் ஜனவரி 5 என்றிருந்து, அப்புறமாய் ஜனவரி 4 ஆக மாறி, இறுதியில் ஜனவரி 3 க்கென தீர்மானமாகியிருக்க,ஓடோ ஓடென்று ஓடிக்கொண்டிருக்கிறோம் – ஆளுக்கொரு வண்டி வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு !! சும்மாவே ஒரு புது வருஷத்தின் முதல் மாத இதழ்களுக்கு நிரம்ப கவனம் தேவையாகிடும் & இம்முறையோ இரட்டிப்பு மெனக்கெடல் தேவையாகின்றது ! # One : ஒரு புது வாசிப்பு அனுபவத்திற்கான ப்ராமிஸுடன் 2024 க்கு துவக்கம் தந்திடவுள்ளோம் ! # Two : இந்த ஜனவரி ஜாம்பவான்களுக்கான ஜனவரி !! So முன்னெப்போதுமே இல்லாததொரு பட்டாம்பூச்சி நடனம் தொந்திக்குள் ! ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல – நான்கு (காமிக்ஸ் உலக) பெத்த தலைக்கட்டுகள் ஒரே நேரத்தில் களமிறங்கிடுகிறார்கள் எனும் போது, அவர்களுக்கான முதல் மரியாதைகளில் துளியும் குறைபாடு இருந்திடலாகாதே ! 

சந்தேகமின்றி ஜனவரியின் (நமது) highlight சாகசவீரன் டின்டின் தான் ! ஏற்கனவே இதைச் சொல்லியுள்ளேனா – தெரியவில்லை, ஆனால் உலகம் சுற்றும் இந்த ரகளையான நாயகரை தமிழுக்குக் கொணர கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகளின் முயற்சிகள் அவசியப்பட்டிருந்தன ! And நடப்பாண்டின் ஜனவரி இறுதியில், ஆங்குலேமில் இதற்கான ஜெயம் கிட்டிய போது, ஒரு முழு பிளேட் சுக்கா ரோஸ்ட்டை கண்ட கார்சனாட்டம் வாயெல்லாம் பல்லாச்சு எனக்கு !  ‘ஊருக்குப் போறோம், புக்கை ரெடி பண்றோம், ரவுசு விடறோம் !’  என்பதே உள்ளுக்குள்ளான உற்சாக மைண்ட்வாய்ஸ் -அந்த நொடியில் !! ஆனால் எனக்குத் துளியும் தெரிந்திருக்கவில்லை  – மெய்யான உசரம் தாண்டும் வைபவமே இனிமேல்தான் காத்துள்ளதென்பது ! ‘அட, எம்புட்டு பதிப்பகங்களோட ; எத்தினி நாயகர்களோட பணி செஞ்சிட்டோம்…..இவரோடயுமே அன்னம், தண்ணீ புழங்க லேசா பழகிக்கலாம் !‘ என்று நினைத்திருந்தவனுக்கு அடுத்தடுத்த படிகளில் தான் புரிந்தது – மற்றவர்கள் – மற்றவர்கள் தான் & டின்டின் – டின்டின் தான் என்பது ! 

மொத்தமே 24 ஆல்பங்களைக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை அசாத்திய வெற்றியோடு தாண்டுவதெல்லாம் ஜாம்பவான்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் சாத்தியமாகிடாதே ?! And ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு மொழியிலும் டின்டின் வெளியாகிக் கொண்டிருந்தாலும், மொழிபெயர்ப்புத் தரத்தில் ; ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கதைக்கும் பாணிகளில் ; தயாரிப்புத் தரத்தில் இம்மியூண்டு கூட வேறுபாடு இருந்திடலாகாது என்பதில் அத்தனை கவனமாய் உள்ளனர் ! தயாரிப்பின் ஒவ்வொரு அங்குலத்தினையும் நம்மோடு கரம்கோர்த்து அவர்கள் பார்வையிட்டு வந்தது மாத்திரமன்றி, தமிழாக்கத்தினையும் கவனமாய் பரிசீலித்து வந்தனர் ! இங்கே கேப்டன் ஹேடாக்கின் ‘கடா முட’ டயலாக்குகள் தவிர்த்த பாக்கியெல்லாம் பெருசாய் நெட்டி வாங்கும் ரகமல்ல தான் என்பதால் தம் கட்டி எழுதி முடித்து விட்டேன் ! ஆனால் கேப்டனின் வசை பாடும் வசனங்கள் பக்கமாய்ப் போன போது தான் வேடிக்கையே துவங்கியது ! 

இது குறித்து ஏற்கனவே இங்கொரு பதிவிட்டதும், நண்பர்களில் சிலர் தங்களுக்குத் தோன்றிய வரிகளை பரிந்துரை செய்திருந்ததும் நினைவிருக்கலாம் ! ஆனால் அந்த மாமூலான  “கிழிஞ்சது கிருஷ்ணகிரி” ; “கிழிஞ்சது லம்பாடி லுங்கி” போன்ற சமாச்சாரங்கள் கேப்டனுக்கு ஒத்துப் போகாதென்பதால் அவற்றை பயன்படுத்திட வழியிருக்கவில்லை ! மனுஷன் ஒரு மாலுமி ; ஒண்டிக்கட்டை ; கப்பல் பயணம் & விஸ்கி என்பதே அவரது வாழ்க்கை என்பதால், அவர் போடும் கூப்பாடுகளில் கடலும், கடல்சார் சமாச்சாரங்களுமாய் இருத்தல் பிரதான தேவை என்றாகியது ! So ஒரு 80 பக்க நோட்டையே போட்டு, சாமத்தில் தோணுவதையெல்லாம் கிறுக்கி வைக்க ஆரம்பித்தேன். இங்கு தான் நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் பங்களிப்பு நிரம்ப உதவியது ! அவருக்குத் தோணுவதையெல்லாம் எனக்கு அனுப்பிடுவார் & நன்றாக இருக்குதோ-இல்லியோ, சகலத்தையும் குறித்து வைத்துக் கொண்டேன். அதே போல எனக்குத் தோணும் வரிகளை அவரிடம் soar செய்து பார்ப்பேன் ! “இன்ன இன்ன காரணங்களுக்காய் இவை நல்லாயில்லை !” என்று அவர் சொல்ல, “இது இதுலாம், இதுனாலே தேறலே !” என்று நான் சொல்ல, இந்தப் பரிவர்த்தனைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓடி வந்தன ! ‘அட புலவய்ங்களா….நீங்க எழுதுறது தேறுமா – இல்லையான்னு தீர்மானம் சொல்லப் போறதே நாங்க தான் ! அடங்குங்க !” என்று நடுவே படைப்பாளிகளின் பரிசீலனை டீம் சொல்ல, மாதங்கள் ஓட்டமாய் ஓட்டமெடுத்தன ! In essence கேப்டனின் கூப்பாடுகளில் அர்த்தம் ஏதும் லேது ; மனுஷன் கோபத்தில் கொப்பளிக்கும் போது வெளிப்படும் கச்சா முச்சா வார்த்தைகளே அவை ! சரி, இங்கிலீஷில் உள்ள template-ஐ பின்தொடரலாம் என்றால், அங்கே நின்றோரோ தஞ்சாவூர் பெரியகோவிலின் நந்தியினை விட பிரம்மாண்டமானோர் ! பிரெஞ்சிலிருந்த டின்டினை  ஆங்கிலப்பதிப்புக்கென மொழிமாற்றம் செய்திட 1958-ல் களமிறங்கிய Leslie Lonsdale Cooper & Michael Turner இந்தத் தொடருக்கே ஒரு புதுப் பரிமாணத்தை வழங்கினார்கள் என்றால் அது மிகையே ஆகாது ! So காலத்தை வென்ற அவர்களின் வரிகளுக்கு முன்னே நாம் எதை போட்டுப் பார்த்தாலும் மொக்கையாகவே தெரிந்தது ! நாட்களின் ஓட்டத்தோடு நிரம்ப நிரம்ப அடித்தல், திருத்தம், மறுதிருத்தம் என்ற கூத்துக்களுக்குப் பின்பாய் கொஞ்சம் ஸ்கிரிப்ட் finetune ஆகியிருந்தது போல் பட்டது ! 

படைப்பாளிகளும் அதனை approve செய்திட, நம் மத்தியில் ரெகுலராய் டின்டினை (சு)வாசிக்கும் நண்பர்களிடம் மேலோட்டமான அபிப்பிராயக் கோரல் ; “டின்டின் வீசம்படி எவ்வளவு ?” என்று கேட்டாலும் கார்ட்டூன்களை நேசிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உரையாடல் – என்று சுற்றி வந்தோம் ! இறுதி stretch-ல் கார்த்திக் மறுக்கா தனது பங்களிப்பினை செம active ஆக செய்திட, மூன்று நாட்களுக்கு பட்டி-டிங்கரிங் ரணகளமாய்த் தொடர்ந்தது. கிட்டத்தட்ட 7 மாதங்களாய் நான் ஒருவனே, ஒரே கோணத்தில் பார்த்து வந்த  ஸ்கிரிப்ட் – வாசகப் பார்வைகளில்  / விமர்சகப் பார்வைகளில் எவ்விதம் எடுபடுகிறது ? என்று தெரிந்து கொள்ளவே இத்தனை கூத்துக்களும் ! தவிர, கேப்டனுக்கு நாம் இன்று செட் செய்திடும் template தான் இனி தொடர் முழுக்கத் தொடர்ந்திடும் எனும் போது இயன்றமட்டுக்கு முயற்சித்து விட்டோம் என்ற திருப்தி கிட்டும் வரை கண்ணில்பட்ட தூணிலெல்லாம் மண்டையை முட்டிக்க எனக்குத் தயக்கமே இருக்கவில்லை !  And எனது 40 வருஷ சர்வீஸில் ஒற்றை கதைக்கு இம்புட்டு நேரம் செலவிட்டதே லேது ; so பற்பல வகைகளில் ஒரு first ஆகிடும் (தமிழ்) டின்டின் உங்களிடமும் thumbs up வாங்கினால் ஒரு பெரும் பெருமூச்சு விட்டுக் கொள்வேன் ! FINGERS CROSSED !! Thanks a ton கார்த்திக் & inputs தந்த all நண்பர்ஸ் !! Obviously உங்களிடம் யோசனைகள் கேட்டு விட்டு, லெப்ட்டுக்கா, ரைட்டுக்கா என்றெல்லாம் போய், புளிய மரத்தில் வண்டியை விடுவதையும் நான் செய்துள்ளேன் தான் ! நாம என்னிக்கி சொல்பேச்சு கேக்குற ஒழுங்குப் புள்ளையா இருந்திருக்கோம் ? 

பிராசசிங் ; அச்சு ; பைண்டிங் – என எதையுமே நாம் கையாளாமல், டாப் பதிப்பகங்களுக்கு புக்ஸ் தயார் செய்து ஏற்றுமதி செய்திடும் ஒரு அசலூர் குழுமத்திடம் ஒப்படைத்துள்ளோம் ! அவர்களின் பரிந்துரைப்படி செம திக்கான ; செம செம திக்கான பேப்பரில் இந்த இதழ் அச்சாகிடவுள்ளது ! அடுத்த சில நாட்களில் புக்கை ரெடி செய்து தந்து விடுவதாக ப்ராமிஸ் செய்துள்ளனர் ; so ‘பதக்’ பதக்’ என்று அடித்துக் கொள்ளும் நெஞ்சோடு காத்துக் கிடக்கின்றோம் !! 

Transferring on, ஜனவரியின் subsequent ஜாம்பவான் நம்ம கோடீஸ்வரகாருவே தான் ! கதாசிரியர் வான் ஹாம் போட்டுத் தந்தவொரு வெற்றிகரமான பார்முலாவை அதன் ஓவியரும், புதுக் கதாசிரியரும் லார்கோவோடு தொடர்கிறார்கள் ! எப்போதுமே லார்கோ கதைகள் மேற்கே ஆரம்பிச்சி, தெற்கே குட்டிக்கரணமடித்து ; வடக்கே வடை சுட்டு ; கிழக்கே க்ளைமாக்ஸை கொணர்வது வாடிக்கை ! And முடிச்சுக்கு மேல் முடிச்சை போட்டு நம்மை பிரமிக்க வைப்பார் வான் ஹாம் ! அதே வீச்சை ; அதே வேகத்தை ; அதே லாவகத்தை புதியவருமே கொண்டிருத்தல் சுலபமே அல்ல தானே ; so வான் ஹாம் ‘டச்’ எங்கே ? என்ற தேடலின்றி கதையினூடே பயணித்தால் சும்மா தீயாய் பறக்கிறது “இரவின் எல்லையில்” !! And இதுவரைக்கும் லார்கோ கதைகளில் நாம் பார்த்திராத களமாய் – வான்வெளிக்கே நம்மை இட்டுச் செல்கின்றனர் ! சித்திரங்களும் சரி, அந்த டிஜிட்டல் கலரிங்கும் சரி – பட்டாசு தான் !  இதோ – ஒற்றை மாதம் கூட ஆகியிருக்கவில்லை பிரெஞ்சில் இதன் ஒரிஜினல் வெளியாகி ; அதற்குள்ளாக தமிழில் நமக்கு வாய்ப்பு கிட்டியிருப்பது செம லக் என்பேன் ! பொதுவாய் லார்கோ கதைகளுக்குப் பேனா பிடிப்பது குடலை வாய்க்குக் கொண்டு வரும் பணியாக இருப்பதுண்டு தான் ; however நாட்களின் ஓட்டத்தோடு நமது ரசனைகளிலும் கணிச மாற்றங்கள் நிகழ்ந்து, CIA ஏஜெண்ட் ஆல்பா ; சிஸ்கோ ; டேங்கோ போன்ற சமகால நாயகர்களோடு நாம் தோள் உரச ஆரம்பித்து விட்டதாலோ – என்னவோ, இம்முறை எனக்குப் பெரிதாய் கஷ்டங்கள் தோணலை ! Essentially – இதற்கு முன்பாய் எழுதிய “கலாஷ்னிகோவ் காதல்” (சிஸ்கோ) – கணிசமாக நாக்கைத் தொங்கச் செய்திருந்தது !! And இதோ – ஒரிஜினல் டிஸைனுடன் preview !!

Next ஜாம்பவானுமே கலரில் கலக்கக் காத்திருக்கிறார் ! And இவரோ ஒரு கிளாசிக் நாயகர் ! 1936-ல் உருவானவர் எனும் போது இவருமே கிட்டத்தட்ட தொண்ணூறு அகவைகளைத் தொடக் காத்துள்ளார் ! “மரணம் அறியா மாயாத்மா” டென்காலி கானகத்தில் உலவுவதை இம்முறை கலரில் நம்ம V காமிக்சில் ரசித்திடவுள்ளோம் ! If I’m now not fallacious – ஒரிஜினலாய் இந்த இதழ் மலையாளத்தில் ; ஹிந்தியில் ; இங்கிலீஷில் பிற பப்ளீஷர்ஸ் வெளியிடுவது போல பெரிய சைஸிலேயே திட்டமிடப்பட்டிருந்தது ! Essentially வேதாளனின் கலர் கதைகளுக்காக படைப்பாளிகளிடம் பேசும் முன்னே என்னிடம் அது  பற்றி discuss செய்து கொண்டிருந்த சமயம் கூட “ரீகல் காமிக்ஸ்” சைஸ் தான் என்று இருந்தது template !  ஆனால் “ஒரு பக்கத்துக்கு இம்புட்டு படம் இருந்தா படிக்க ரசிக்க மாட்டேங்குது ஓய் !” என்று நீங்கள் SUPREME 60s க்கு எழுப்பிய புகார் குரல்கள் எனது காதுகளில் மாத்திரமன்றி, புள்ளையாண்டரின் காதுகளிலும் ஒலித்திருக்குமோ என்னவோ – reset செய்து டெக்ஸ் வில்லர் சைசுக்கே தயார் செய்து வருகிறார் V காமிக்சின் எடி ! And எழுத்துக்களும் நல்லா பெருசா ரெடியாகிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ! So கண்ணாடியை வீட்டுக்குள் தொலைத்து விட்டுத் தேடுவோர் சங்கத்தில் நீங்களும் அங்கத்தினராய் இருந்தால் கூட no worries என்று சொல்லலாம் போலும் ! இதோ – நாம் ரெகுலராய் பயன்படுத்தி வரும் துருக்கிய ஓவியரின் கைவண்ணத்திலான அட்டைப்படத்துடன் “வீரனுக்கு மரணமில்லை !” preview : 

Oh yes – மறக்கும் முன்பாய்ச் சொல்லி விடுகிறேனே – எழுத்துருக்கள் உபயம் வழக்கம் போல நண்பர் ஜெகத் தான் ! அட்டவணையில் உள்ள அத்தனை தலைப்புகளுக்கும் தனது தெறி ஸ்டைலில் டிசைன் செய்து அனுப்பியுள்ளார் ! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஜெகத் !! 

ஜாம்பவான் # 4 – “இளம் டெக்ஸ்” !! ஜனவரியின் ஒரே dusky & white இதழில் இந்த யூத் சாகசச் சங்கிலி தொடர்கிறது ! And நமக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயமுள்ள சாம் வில்லரும் கதையில் இடம்பிடிக்கிறார் ! விடலைப் பருவத்தில் பெண்களை டாவடிப்பது ; கடலை போடுவது என்ற சம்பிரதாயச் சமாச்சாரங்களை ‘தல’ யுமே செய்துள்ளார் என்பதை “கண்ணீருக்கு நேரமில்லை” நமக்குக் காட்டிடவுள்ளது ! 128 பக்கங்களே ; செம crisp சாகசம், with செம crisp சித்திரங்கள் ! So ஜனவரியில் no அழுகாச்சீஸ் ; no இழுவைஸ் ; no மொக்கைஸ் – ஆல் engaging த்ரில்லர்ஸ் ! இன்னும் சொல்லப் போனால் வேதாளரின் ஆல்பத்தில் கூட கதைக் காலம் ரொம்பவே வித்தியாசமாய் இருக்கும் போலும் ; DTP பணிகள் ஓடிக்கொண்டிருக்கும் போது கொஞ்சப் பக்கங்களை மட்டும் பார்த்த போதே – புராதனம் கொஞ்சி விளையாடும் களமாகத் தெரியவில்லை ! 

ஒற்றை நாயகர் ஜாம்பவானாய் அமைந்தாலே தெருவெல்லாம் பந்தல் போட்டு பீப்பீ ஊதுபவனுக்கு, நால்வர் ஒரே சமயத்தில் அமைந்தால் ???? குட்டிக்கரணம் அடித்தே போய் வருகிறேன் ஆபீசுக்கு ! So சந்தா எக்ஸ்பிரஸ் 2024 ல் உங்களை வரவேற்கக் காத்திருக்கும் ஜாம்பவான்களை இதோ பார்த்த கையோடு – G Pay ஒன்றினைத் தட்டி விடலாமே – ப்ளீஸ் ?  

சொல்லுங்களேன் guys – இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு எந்த வரிசையில் இருக்குமென்று ? 

Ahead of I imprint out – புத்தக விழா change ! வழக்கம் போல் ஸ்டாலுக்கு விண்ணப்பித்து விட்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் ! மாத இறுதியில் உறுதியாகி விட்டால், ஜனவரி 3 முதல் ஜனவரி 21 வரை நமது கேரவன் சென்னையில் தான் நிலைகொண்டிருக்கும். முதல் வாரத்தின் இறுதியில் (6 & 7 – சனி & ஞாயிறு) தேதிகளின் மாலைகளில் நமது ஸ்டாலில் வந்து பராக்குப் பார்க்க உத்தேசித்துள்ளேன் ! நண்பர்கள் எட்டிப் பார்த்திட்டால் வழக்கம் போல அரட்டையைப் போடலாம் ! Please carry out fall in of us !! 

Bye all….look you around !! “இளம் தல” எடிட்டிங் வெயிட்டிங் !! And Merry Christmas all !