நண்பர்களே,
வணக்கம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! நலமும், வளமும், மகிழ்வும் இல்லமெங்கும் பிரவாகமெடுக்கும் அற்புத வருஷமாய் இந்த 2024 அமைந்திட புனித மனிடோ ஆசீர்வதிப்பாராக ! புது நம்பிக்கைகளோடு, புது இலக்குகளோடு நமது ஒவ்வொரு தேடலும் வெற்றியில் முடியட்டும் !
And certain – புலர்ந்துள்ளது நமது லயனின் 40-வது பிறந்தநாள் ஆண்டுமே கூட ! இந்த ஜூலை புலர்ந்திட்டால், செங்கோலை கையில் பிடித்து நிற்கும் நமது சிங்கம் சாருக்கு கேக் மீது 40 மெழுகுவர்திகளைச் செருகிட வேண்டி வரும் ! இதோ – அதற்கு முன்னோட்டமாய் இப்போதே ரெடியாகி இருக்கார் பாருங்களேன் !
கடந்து சென்றுள்ள இந்த நான்கு தசாப்தங்களுக்குள் நிறைய flashbacks பார்த்தாச்சு ; பேசியாச்சு ; எழுதியாச்சு – so “40 வருஷங்களுக்கு முன்னே கம்பு சுத்தினேன் பாரு”ன்னு மறுக்கா ஆரம்பிக்க எனக்கே தம் லேது ! ஆனாலும் “1984” என்ற வருஷம் மனதில் நிழலாடும் போது, ஏகமாய் blended emotions மனசுக்குள் பிரவாகமெடுப்பதைத் தவிர்க்க இயலவில்லை ! தென்பட்ட அத்தினி சுவர்களிலும், ‘ணங்கு..ணங்கு..ணங்கு’ என்று முட்டிக் கொண்ட புளகாங்கித அனுபவத்தினை(!!!) அந்த ஆண்டின் முதல் பாதியும், வீங்கிக் கிடந்த கபாலத்துக்கு ஒத்தடம் கிடைத்த அனுபவத்தினைப் பின்பாதியும் தந்திருந்தன ! அன்றைக்கு யாரும் என்னிடம் வேலை மெனெக்கெட்டு – “ஏண்டாப்பா டேய்- இந்தத் துறையிலே 40 வருஷம் குப்பை கொட்டுற வரம் உனக்கு இப்போ கிடைச்சா நீ ஹேப்பியா இருப்பியா ?“ன்னு ஒரு கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள் தான் ! ஆனால் அப்படியொரு வேளை யாரேனும் கேட்டிருந்தால், ‘ஆத்தீ…கடிச்சு,கிடிச்சு வைச்சிருவாரோ இந்தாளு ? கொஞ்சம் விலகியே போயிடுவோம் !’ என்று தான் நான் ஜகா வாங்கியிருப்பேன் ! 480 மாதங்களுக்குப் பின்னேயும், சிங்கத்தின் தோளில் கரம் போட்டுப் பயணம் செய்யும் வரம் தொடர்ந்திடும் என்று ஒரு ரம்யமான சொப்பனத்தில் கூட அன்றைக்கு கற்பனை பண்ணத் தோன்றியிராது தான் ! But such is the class of existence !!! Thank you Gods above !!!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாய் முத்துவின் 50-வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன தான் ; அது சந்தேகமின்றி இதை விடவும் பெரியதொரு மைல்கல் தான் ! And certain – அந்த 50 ஆண்டுகளில், துவக்கப் 15 ஆண்டுகளுக்குப் பின்பான பாக்கி 35 ஆண்டுகளும் வண்டி ஒட்டியது அடியேன் தான் ! But – விகிதாச்சாரங்கள் வேறுபட்டிருந்தாலும், எனது பங்களிப்பு பகிர்ந்ததொன்றே என்பதை மறுப்பதற்கில்லை ! So லைட்டாக அங்கே அடக்கி வாசிக்கவே தோன்றியது எனக்கு. ஆனால் இங்கோ வண்டிக்கு மாடு தேடிய நாள் முதலாய், மாட்டுக்குத் தீவனம் வைத்து, தண்ணி காட்டி, சாணி அள்ளியது வரை சகலமும் ஆல் இன் ஆல் ஆந்தைராஜா தானெனும் போது – இங்கே நோ நெருடல்ஸ் at all ! Oh certain – இந்தப் பேட்டைகளில் எப்போவுமே புது ரௌடியும் ஞானே ; மூ.ச.க்களில் சகட்டு மேனிக்கு சாத்து வாங்கிப்புட்டு…”அடுத்த பஞ்சாயத்து எந்த ஊரிலேப்பா ?” என்று கெத்து காட்டும் சுனா-பனாவும் ஞானே எனும் போது, இந்த 40-வது பிறந்தநாள் ஆண்டினை ரகளையாய் முன்னெடுத்துச் செல்ல உள்ளுக்குள் துருதுருக்கிறது ! இந்தாண்டு முதலாய் இலகுரக சுவாரஸ்ய வாசிப்புகளுக்கே முன்னுரிமை என்ற டிராக்கில் ரெகுலர் அட்டவணை பயணிக்கவிருப்பதால், வந்தே பாரத் ரயில்களின் வேகங்களை எதிர்பார்க்கலாம் ! And சிக்கும் சந்தர்ப்பங்களிளெல்லாமே ஒரு புது வந்தே பாரத் அறிவிக்கப்படுவதை போல – சைக்கிள் கேப் கிடைத்தாலும் டிசைன் டிசைனாய் ஏதேனும் shock இதழ்களை களமிறக்க முனைவோம் !
And இந்த நொடியில் உங்களிடம் இரு கேள்விகள் !!
கேள்வி # 1 : இந்த 40 ஆண்டுப் பயணத்தினில் நீங்கள் இணைந்து கொண்டது எப்போது முதலாய் ?
கேள்வி # 2 – இந்த நானூற்றிசொச்ச ஆல்பங்களுக்கு மத்தியில் ஒரேயொரு புக்கை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பிகினி தீவுகளுக்குப் போகும் வாய்ப்பு (!!!!) உங்களுக்கு கிட்டிடும் பட்சத்தில் – what may possibly maybe be your pick ? ஒற்றை மறக்கவியலா இதழ் என்றால் அது உங்கள் பார்வையில் எதுவோ ?
Bye all of us….contain an comely…very just correct year ahead !! God be with us !!