ஒரு புளிசாதப் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். புரட்டாசி என்பதால் கொஞ்சம் புளிசாதத்தை கட்டிக்கினு, கொறிக்க கொஞ்சம் சிப்ஸையும் அள்ளிக்கினு, தொண்டையை நனைச்சுக்க கொஞ்சமா லைம் சூசையும் போட்டுக்கினு, ராவிலே மேட்ச் பாக்கலாம்னு திட்டம் போட்டா – பரமபிதாவும், பாகிஸ்தானும் வேறு திட்டம் வைத்திருந்திருக்கின்றனர் ! இன்னிக்கி பச்சை சட்டை போட்டு வந்த அம்புட்டு பேரும் படித்துறை பாண்டி ரேஞ்சுக்கே ஆடி வைக்க, நாலு சிப்ஸை மொசுக்கும் நேரத்துக்குள்ளாற – “மேட்ச் முடிஞ்சிடுச்சி ; ஊட்டுக்குப் போங்கப்பான்னு” ஸ்டேடியம் கதவை அறைஞ்சு சாத்திப்புட்டதால், புளிசாதத்தோடே டைப்ப கிளம்பி வந்தாச்சூ ! Phew….focus on an anti-climax !!

அட, anti-climax மேட்சிலே தான் என்றில்லையே – இம்மாதத்து நமது இதழ்களிலும் தானே – a minimal of இந்த முதல் வாரத்திலாவது ! 

* 724 பக்கங்கள் சுப்ரீமோ ஸ்பெஷலில் மட்டுமே !!

*120 பக்கங்கள் “விதி எழுதிய வெள்ளை வரிகள்” – கிராபிக் நாவலில் !

*64 பக்கங்கள் “எல்லாம் கிழமயம்” – தாத்தாஸ் கிராபிக் நாவலில் !

*128 பக்கங்கள் – சாம் வில்லரின் கதையில் (சகோதரனின் சகாப்தம்)

*32 பக்கங்கள் – டைலன் டாக் குறும் கதையில் !

1072 பக்கங்களின் வாசிப்பு காத்துள்ள இம்மாதத்தினில், புக்குகளைப் புரட்டிப் பார்ப்பதைத் தாண்டி வேறெதெற்கும் நேரம் ஒதுக்க நண்பர்களின் பெரும்பான்மைக்கு இப்போது வரை நேரம் கிட்டியிருக்கவில்லை என்பது evident ! So “குண்டு புக்” என்ற idea எல்லாம் இந்த நொடியில் ஷாஹீன் அப்ரீதியின் பந்து வீச்சைப் போலவே சற்றே தட்டையாய் தென்பட, என்னுள் கலவையான சிந்தைகள் ! And காத்திருக்கும் புது அட்டவணையினில் இந்த நொடியின் பாடங்களை உட்புகுத்த வேண்டிய அவசியமும் புரிகிறது !! 

எது, எப்படியோ – இம்மாதத்தின் ஆன்லைன் ஆர்டர்களும் சரி, ஏஜெண்ட் ஆர்டர்களும் சரி – actually தெறி தான் ! Definitely – ‘தல’ ஸ்பெஷலும், V காமிக்ஸ் இதழும் தான் இம்மாதத்தின் வேகப் பயணிகள் ; கி.நா.க்களின் takers சொற்பம் தான் ! “அட போவியா – வூட்டிலுள்ள பெருசுகளை சமாளிக்கவே தாவு தீருது ; இந்த அழகிலே கதையிலேயுமே மூணு பெருச்சாளிப் பெருசுகளின் வாழ்க்கைப் பயணம்லாம் எங்களுக்குத் தேவையா ?” என்று நண்பர்கள் நினைத்திருக்கலாம் என்பது புரிகிறது ! “வாசிப்பில் நொய்யு நொய்யென்ற கதைபாணிகளெல்லாம் நேக்கு ரசிக்காது !!” என்போர் தாத்தாக்களிடமிருந்து காத தூரம் விலகி இருப்பர் என்பதை யூகிக்க பெரும் சிரமமெல்லாம் இருக்கவில்லை தான் ; but yet இந்த தாத்தாக்கள் அழுகாச்சிப் பார்ட்டிகளே கிடையாது என்பதால் தான் என்னுள் ஒரு சிறு ஆதங்கம் – நண்பர்கள் இன்னும் கொஞ்சம் பரவலாய் இவர்களோடு பழகிப் பார்த்திருக்கலாமே ?! என்று !!  

Genuinely – வாழ்க்கையின் அந்திமத்தில் மூவரும் இருந்தாலுமே, தத்தம் பாணிகளில் தம்மைச் சுற்றியுள்ளோரின் வாழ்வுகளுக்கொரு அர்த்தம் கற்பிக்க முயலும் பார்ட்டிகள் தானே – ஒவ்வொரு தாத்தாவும் ?! ஒரு பெருசு சதா நேரமும் கார்பரேட்களுக்கு எதிரான போராட்டங்களில் பிசி ; இன்னொரு தாத்ஸ் – யூனியன் ஆட்களோடு பிசி ; மூணாவதோ – பேத்தியின் பொம்மலாட்ட ஷோவில் ; குழந்தைகளை மகிழ்விப்பதில் பிசி ! So இதனை ஒரு அழுகாச்சிப் படைப்பென்று நண்பர்கள் ஒதுக்கியிருக்கக்கூடுமோ என்பது தான் உதைக்கிறது உள்ளுக்குள் !! A ways from it – இந்தத் தொடரே பாசிட்டிவான பல சமாச்சாரங்களை நமக்குச் சொல்லிட முனையும் ஒரு முயற்சி அல்லவா ? பல் போன காலத்தில் காலனின் வருகையினை எண்ணிப் பதறிக் கிடப்பதற்குப் பதிலாய் தில்லாய் நடை போடும் இந்தப் பெரியவர்களை நம் சிறுவட்டம் தயக்கங்களின்றி ஏற்றுக் கொண்டால் இன்னும் குஷியாக இருக்கும் !  

தாத்ஸ் ஜாலி கி.நா. என்றால் “விதி எழுதிய வெள்ளை வரிகள்” அந்த வானவில்லின் மறுமுனை !! டார்க்கான கதை பாணி ; மிரட்டும் பின்புலங்கள் ; சோகமான முடிவு என்று பயணிக்கும் இந்த ஆல்பத்தின் முதல் தூணே அந்தச் சித்திரங்கள் தான் ! சித்திரங்களையும் உள்வாங்கியபடியே கதையோடு டிராவல் செய்வோராய் நீங்கள் இருப்பின், இது நிச்சயமாய் உங்களை மெய்ம்மறக்கச் செய்யும் என்பேன் ! என்ன – துணையாய் வரும் ஆட்களில் யார் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள நான் மொக்கை போட்டேன் ! அந்தச் சிரமம் உங்களுக்கு வேணாம் என்பதாலேயே கதை மாந்தரை அறிமுகம் செய்திடும் ஒரு பக்கத்தையும் உருவாக்கியிருந்தோம் ! லைட்டாக சந்தேகம் எழும் இடங்களில் மட்டும் ‘பச்சக்’ என அந்தப் பக்கத்துக்கு ஒரு தாவு தாவினீர்களெனில் – பணியில் பயணம் சுளுவாய் தொடர்ந்திடும் ! நாம் பார்த்திரா ஒரு பூமியில் ; நாம் அறிந்திரா ஒரு காலகட்டத்தில் அரங்கேறிய வாழ்க்கையின் yet every other இருண்ட அத்தியாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதுமே ஒரு வித சுவாரஸ்யமாய் இருக்கக்கூடும் என்பேன் ! Why no longer give it a strive folks ?

Definitely – இன்றில்லாவிடினும் நேரம் கிட்டும் ஒரு பொழுதினில் சுப்ரீமோ ஸ்பெஷலுக்குள் புகுந்திடுவீர்களென்பதில் எனக்கு ஐயங்களில்லை ! And இங்கு உள்ள 724 பக்கங்களுள் – PATAGONIA என்ற பெயருடன் வெளியான மௌரோ போசெல்லியின் படைப்பான “வந்தார் வென்றார்” சாகசத்தினை நீங்கள் (சு)வாசிக்கப் போகும் வேளைக்கென ஆவலாய் காத்திருப்பேன் ! முற்றிலுமாய் ஒரு புது மண்ணில் ; முற்றிலுமாய் ஒரு புது அவதாரில் ; முற்றிலுமாய் ஒரு புதுப் பொறுப்பில் நம்மவர் தெறிக்க விடுவதை நீங்கள் எவ்விதம் ரசித்தீர்களென்று தெரிந்து கொள்வதில் கிடைக்கக்கூடிய ஒரு சின்ன திருப்தியினை எதிர்நோக்கியே அந்த ஆவல் ! Oh scamper – ‘இன்னாபா கதை இது ? வழக்கமான பாணி இல்லாம இந்த எக்ஸ்டா நம்பர்லாம் தேவை தானா ??’ என்று நண்பர்களில் ஒரு அணியினர் கேட்டாலும் வியப்பு கொள்ள மாட்டேன் தான் ; but aloof உங்களின் எண்ணவோட்டங்களை அறிந்திட முயல்வதும் எனது பணிகளின் ஒரு அங்கம் எனும் போது – சிலாகிப்புகளோ ; சிராய்ப்புகளோ they’d all be welcome !!

ரைட்டு….இந்த மாதத்துக் கத்தையையே கையாள நீங்கள் தடுமாறி வரும் வேளையினில் தீபாவளிக்கென காத்துள்ள ‘தல’ vs தளபதி fight க்கு நான் தயாராகி வருகிறேன் ! அதற்குள் ஐக்கியமாகிடப் புறப்படும் முன்பாய், உங்களுக்கு ஒரு சின்ன disclose !! 2024-க்கான அட்டவணை இன்னும் 2 வாரங்களில் ரிலீஸ் என்பதை நாமறிவோம் ! என்னிடத்தில் நீங்களிருப்பின், 2024-ன் அட்டவணையினை எவ்விதம் அமைத்திருப்பீர்களென்று காட்டுங்களேன் ப்ளீஸ் ? 

இவற்றை வழிகாட்டிகளாய் வைத்துக் கொள்ளுங்கள் :

  • +டெக்ஸ் டபுள் ஆல்பங்கள் நடப்பைப் போலவே தலா ரூ.160 விலைகளில் !
  • +லக்கி லூக் ; சிக் பில் போலான 48 பக்க கலர் இதழ்கள் தலா ரூ.120 விலைகளில் !
  • +ஏஜெண்ட் சிஸ்கோ ; ஆல்பா போலான டபுள் ஆல்பமெனில் ரூ.250 வீதம் !  
  • +Supreme ’60s தனித்தட திட்டமிடலை இந்த ரெகுலர் சந்தாவோடு சேர்த்திட வேண்டாம் ; அதனை ஏப்ரலில் தனியாய் அறிவிக்க உள்ளோம் !
  • +V காமிக்ஸ் சராசரியை ரூ.90 அல்லது ரூ.100 என்ற விலையில் போட்டுக் கொள்ளுங்கள் !
  • +வழக்கம் போல மொத்த சந்தா தொகையினை ரூ.5750 என்றோ ரூ.5850 என்று வைத்துக் கொள்ளுங்கள் !

மேற்படி hints சகிதம் – யார் அட்டவணைக்கு உள்ளே ? யார் நம் மனசுகளின் உள்ளே ? என்று திட்டமிட்டு இங்கே உங்களின் அட்டவணைகளாகப் போடுங்களேன் guys ? ரெடியாகியுள்ள நமது அட்டவணையோடு நெருங்கிச் செல்லும் திட்டமிடலுக்கு 2024-ன் சகல இதழ்களும் நம் அன்புடன் அனுப்பிடப்படும் ! So why no longer give it a shot all ?

Bye all…dispute you spherical ! Personal a frigid Sunday !! 

And அக்டொபர் இதழ்களுக்கு கொஞ்சம் நேரம் தந்திட முயற்சிக்கலாமே – ப்ளீஸ் ?

P.S : மதுரை புத்தக விழாவில் நமக்கான விற்பனை 🔆🔆🔆பின்னிப் பெடலெடுத்து வருகிறது ! இம்முறை பள்ளி மாணாக்கரை அவ்வளவாய் அழைத்து வரக்காணோம் என்றாலும், overall response செம !! அடுத்த ஞாயிறு வரை தொடரும் விழாவினில் வர்ண பகவான் மட்டும் கலந்து கொள்ளாதிருந்தால் சூப்பராக இருக்கும் ! Fingers crossed !! 


How useful was this post?

Click on a star to rate it!

Average rating / 5. Vote count:

No votes so far! Be the first to rate this post.