நண்பர்களே,
வணக்கம். போன வாரம் பதிவைப் போட்ட கையோடு, சட்டி பெட்டிகளைக் கட்டிக் கொண்டு நம்ம ‘தல’ உலவிடும் மண்ணுக்குப் பயணமாகியவன், இன்றைக்கு காலையில் தான் வீடு திரும்பினேன் – காலை எது ? இரவு எது ? என்று கிஞ்சித்தும் தெரியாதவனாய் ! நம்மூருக்குக் கொஞ்சமும் சளைக்காது அங்கே போட்டுச் சாத்திய வெயிலில் சிரம் கொஞ்சமாய் இளகி விட்டதோ – என்ற சந்தேகம் எழாத குறை தான் ! So தத்து-பித்தென்று க்வாட்டரடிச்ச பக்கிரி பாணியில் பதிவில் எதையாச்சும் உளறி வைக்கப்படாதென்பதால், இதனை சிக்கென்ற பதிவாக மட்டுமே அமைத்திட எண்ணியுள்ளேன் !
September ! தோர்கலார் முடிந்து பைண்டிங் கிளம்பிப் போய்விட்டார் ! இன்னொரு வண்ண இதழான “நெவாடா” பாதிக் கிணறு தாண்டிய நிலையில் வெயிட்டிங் – அடுத்த ஓரிரு நாட்களில் மொழிபெயர்ப்பினை நான் பூர்த்தி செய்திடுவதற்கென ! கர்ம சிரத்தையாய் அதன் ஒரிஜினல்களையும் அமெரிக்காவுக்குத் தூக்கிப் போயிருந்தும் எட்டுப் பத்துப் பக்கங்களுக்கு மேலாக எழுத நேரம் கிட்டிய பாடில்லை ! ஆனால் இதுவரைக்கும் பயணித்துள்ள 29 பக்கங்களில் – நமக்கென காத்திருப்பவர் ஒரு தெறி பார்ட்டி என்பது மட்டும் சர்வ நிச்சயமாய்ப் புரிகிறது ! வன்மேற்கின் அடுத்தகட்ட காலகட்டத்தில் நிகழும் கதை எனும் போது – நமக்கு பரிச்சயமான பூமியை புதிதாய் பார்ப்பது போலுள்ளது ! And ஹீரோ நெவாடா முற்றிலும் வித்தியாசமானதொரு கதாப்பாத்திரம் ! செம refreshing !! அடுத்த ஓரிரு நாட்களில் மொழிபெயர்ப்பினைப் பூர்த்தி செய்த கையோடு – DTP முடித்து அச்சும் முடித்து விடுவோம் ! இதோ – அதற்கென ரெடியாகவுள்ள அட்டைப்பட முதற்பார்வை : And yes – அந்த எழுத்துரு நண்பர் ஜெகத் உபயம் !
And ஒரு குட் நியூஸுமே : எழுத்துப் பிழைகளைக் களைய முனையும் நமது முயற்சிகளுக்கு உதவிட, நெடும் அனுபவம் கொண்டதொரு தமிழ் புரஃபஸர் நம்மோடு அடுத்த வாரம் முதலாய் கரம் கோர்க்கிறார் ! இவருக்கு ஏற்கனவே ஊடக proof-reading அனுபவமும் இருப்பதால், இனி அரிசியில் கலந்த கற்களாய் பிழைகள் இடறிடாதென்று நம்பலாம் ! Definitely – ஏற்கனவே ரெடியான புக்ஸ் அவரது பார்வைக்குச் சென்றிராது தான் ; அவற்றை நண்பர்களில் இருவர் வெகு கவனமாய் கையாண்டுள்ளனர் ! So optimistically சிக்கல்கள் இருந்திடாதென்று நம்புவோம் ! நண்பர்களின் லேட்டஸ்ட் பிழை திருத்த உழைப்போடு வெளிவரக் காத்துள்ள இதழின் first scrutinize இதோ :
இதுவும் நமது சென்னை ஓவியரின் கைவண்ணமே ; King Aspects நாயகர்கள் அனைவருமே நாளேடுகளில் தொடர்களாக அறிமுகம் காண்போர் எனும் போது அவர்களது ஆல்பங்களென்று பொதுவாய் எக்கச்சக்கமாய் இருப்பதில்லை ! இருக்கும் கொஞ்ச ஆல்பங்களுமே Sunless & white படங்களை பிரதானமாய் கொண்ட டிசைன்கள் ! So references கிடைப்பது அத்தனை சுலபம் அல்ல தான் ! இதுவோ – ஒரு செம க்ளாஸிக் ரிப் கிர்பியின் கவரிலிருந்து ரெடி செய்தது ! வழக்கம் போல நகாசு வேலைகள் இருக்கும் – அட்டைப்படத்தினை செம ரிச்சாக சித்தரிக்க !
And டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷலின் அதே சைசில் ரிப்பும் வரவுள்ளார் – உங்களின் சுலப வாசிப்புக்கு உதவிட ! So நல்ல குண்டு புக்காய் காத்திருப்பது – இதழின் முதுகின் விஸ்தீரணத்தைக் கவனித்தாலே புரியும் ! வழக்கம் போல நிறைய புதுக் கதைகள் & கொஞ்சமாய் மறுபதிப்புகள் இம்முறையும் ! மினி-லயனில் வெளியான cult traditional -“காசில்லாக் கோடீஸ்வரன்” இந்த இதழில் இடம்பிடித்திருப்பது கொசுறுச் சேதி ! மொழிபெயர்ப்பினை சற்றே நவீனமாக்கினால் சிறப்பாக இருக்குமே என்று தோன்றியது தான் ; ஆனால் மறுக்கா புளியமரத்தில் தொங்க விட்டுச் சாத்துவது போலவே கெட்ட கெட்ட சொப்பனங்களாய் வந்ததால் – ‘எதுக்கு வம்பு?” என்று ஒரிஜினல் தடத்திலேயே பயணித்துள்ளோம் ! க்ளாஸிக் காதலர்களுக்கு ஒரு விருந்து வெயிட்டிங் என்பேன் !
கண்ணை சுழற்றும் தூக்கத்துக்கு அடிபணிய நடையைக் காட்டும் முன்பாக – இதோ உங்களின் வோட்டெடுப்பின் பலன்கள் ! 2024 ரெகுலர் தடத்தில் SODA / ரிப்போர்ட்டர் ஜானி / டிடெக்டிவ் ரூபின் ஆகிய மூவரின் மத்தியில் ஒரேயொருவரை ஓரம் கட்ட வேண்டுமெனில் யாரைத் தேர்வு செய்வீர்களோ ? என்று கேட்டிருந்தேன் ! இதோ உங்களின் பதில்கள் !!
துவக்கம் முதலே ரூபின் derive zone-ல் இருந்தது செம சர்ப்ரைஸ் ! So மெய்யாக சட்டையைக் கிழித்துச் சண்டை போட்டுக் கொண்டோர் – ரிப்போர்ட்டரும் ; NYPD ஆபீசருமே !! And சின்னதொரு வித்தியாசத்தில் உள்ளே இருப்பவர் ஜானி ; per chance புத்தக விழா ஸ்பெஷல் வரிசைகளுக்குள் இடம் பிடிக்கக்கூடியவர் SODA என்றாகிறது ! கிட்டத்தட்ட 164 பேர் வோட் போட்டுள்ளதால் – இதனை ஒரு decent வழிகாட்டலாய் கருதலாமென்று தோன்றுகிறது ! Thanks to your time guys !!
மீண்டும் சந்திப்போம் ; salvage a relaxing weekend all ! Bye….sight you round !